காப்பியின் நண்பன் சிக்கரி
சிக்கரி என்பதை எல்லோரும் அறிந்துள்ள காரணம், அதற்கும் காப்பிக்கும் உள்ள தொடர்பால் தான். காப்பியுடன் கலந்தும், காப்பிக்கு பதிலாகவும், தனியாகவும் சிக்கரி பயன்படுகிறது. காப்பி பானத்திற்கு சிக்கரி ஒரு வித கசப்பை உண்டாக்குகிறது இந்த ருசி பலருக்கு பிடித்தமானது.
சிக்கரி பழைய நூல்களில் குறிப்பிடப்பட்ட தொன்மையான தாவரம். ஃபிரான்னால் நெப்போலியன் ஆண்ட போது, காப்பிக்கு மாற்றாக, காப்பியில் கலப்படமாக சிக்கரி உபயோகிக்கப்பட்டது. அமெரிக்காவின் சிறைச்சாலைகளில் சிக்கரி செடியின் வேர் காப்பிக்கு பதிலாக உபயோகப்பட்டது. சிக்கரிவேர் ஜரோப்பாவிலும் காப்பிக்கு பதிலாக உபயோகிக்க சிக்கரி பயிரிடப்பட்டது. சிக்கரியை காப்பிக் கொட்டைகளுடன் கலந்து உபயோகிப்பது இந்தியாவில் பிரசித்தம். சிக்கரி 3 அடி வளரும் செடி. நீல நிறப்பூக்கள் உடையது பூக்கள் தினமும் ஒரே நேரத்தில் மலரும், மூடிக்கொள்ளும். இதன் வேர் நீளமாகவும், கெட்டியாகவும் இருக்கும். இந்த வேர்தான் காய வைக்கப்பட்டு, வறுத்து பொடியாக்கி, காப்பிக்கு பதிலாக உபயோகிக்கப்படுகிறது. காப்பியின் இருக்கும் காஃபின் சிக்கரியில் இல்லை. காப்பிக் கொட்டைகளை விட, வறுத்த சிக்கரியின் மணமும் சுவையும் இல்லை. காப்பியில் 30 சதவிகித சிக்கரியை கலப்பது காப்பிப்பொடி தயாரிப்பாளர்களின், வழக்கம். இதனால் நீங்கள் குடிக்கும் காப்பியின் காஃபின் அளவு குறைகிறது. சிலர் முழுச்சிக்கரி பொடியையே விரும்புகின்றனர். தவிர சிக்கரி காப்பியை விட தண்ணீருடன் நன்கு கலக்கும். இதனால் குறைந்த அளவு சிக்கரி உபயோகித்தால் போதும். காப்பியை விட சிக்கரி சிக்கனமானது.
பயன்கள்
காப்பிக்கு பதிலாக அல்லது கலந்து உபயோகிக்கலாம்.
இரத்தத்தை சுத்திகரித்து, கல்லீரலை ஆரோக்கியமாக்கும்.
இதன் இலைகள் சலாட் தயாரிக்க உதவும். ஃபிரான்ஸில் இது சலாடுகள் எனப்படும். பச்சையாகவே இலைகளை உண்ணலாம்.
வேர்கள் வேகவைக்கப்பட்டு, வெண்ணையுடன் உட்கொள்ளப்படுகிறது. காய்கறி போலவும் பயன்படும்.
பொடியாக்கப்பட்ட வேர்கள் டானிக்காக, சிறுநீர் சுலபமாக போக, மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கும் பயன்படும். தவிர கல்லீரல், பித்தப்பை நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
சிக்கரிப்பூ, ஜெர்மனியில் டானிக்காக, பசியை தூண்ட, பித்தப்பை கற்களை நீக்க, சைனஸ், வயிற்றுக் கோளாறு மற்றும் காயங்களுக்கும், பயன்பட்டு வந்திருக்கிறது.
இதில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணைகள் வயிற்றுப் பூச்சிகளை அழிக்க வல்லது. இதனால் கால்நடை உணவுகளில் சிக்கரி பயன்படுகிறது. கால் நடை வயிற்றுப்பூச்சிகளை அழித்து விடும்.
1970 ல் சிக்கரி வேரில் 20% இன்சுலின் எனும் மாவுச்சத்து போன்ற கூட்டுசர்க்கரை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கலப்பான முறையால் சிக்கரி செடிகள் பயிர்களில் இந்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் படியான புதிய ரகங்கள் உண்டாக்கப்பட்டன. இனூலின் செயற்கை சர்க்கரை உற்பத்தியில் பயன்படும். தவிர இனூலின் நார்ச்சத்து மிகுந்த பொருளாக பிரசித்தி பெற்று வறுகிறது.
சில பீர் தயயரிப்பாளர்கள் வறுத்த சிக்கரியை பீரின் சுவையை அதிகரிக்க உபயோகிக்கின்றனர்.
சிக்கரியை அதிகமாக காப்பிக்குபதில் உபயோகித்தால், கண்களின் பார்வை பாதிக்கப்படும் என்று பலர் கருதுகின்றனர். தற்போதை விஞ்ஞானத்தில், இந்த கருத்து இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
சிக்கரியில் கசப்பு பொருட்கள், கோலின், சர்க்கரை, இன்சுலின், பொட்டாசியம், கால்ஸியம் மற்றும் அயச்சத்து உள்ளன.
இதன் பொதுவான குணங்கள் – உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும், இரத்த சர்க்கரை அளவை குறைக்கும். பித்த நீர் சுரக்க உதவும். மிருதுவான மலமிளக்கி. வேகவைத்த வேரில் உள்ள இன்சுலின, ஸ்டார்ச்சசை விட, நீரிழிவு நோயாளிக்கு உகந்தது.
உணவு நலம் நவம்பர் 2011
No comments:
Post a Comment