My Blog List

Tuesday, 22 October 2013

பூண்டு சட்னி - Garlic Chutney

பூண்டு சட்னி - Garlic Chutney

இந்த வார என்னுடைய பூண்டு சட்னியை பகிர்ந்துள்ளேன்.பூண்டு மணம் பிடிப்பவர்கள் செய்து பாருங்க.இட்லி தோசைக்கு சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்;
பூண்டு - 6-8 பற்கள்(பெரிய பற்கள்)
மிளகாய் வற்றல் - 2
பெரிய தக்காளி - 1
உப்பு - தேவைக்கு.
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு இணுக்கு.

பரிமாறும் அளவு - 2 நபர்கள்.

 பூண்டு பற்களைத் தோல் உரித்து வைக்கவும்.மிளகாய் வற்றலை சுட்டோ லேசாக எண்ணெயில் பொரித்தோ எடுக்கவும்.தாளிக்க வைத்துள்ள எண்ணெயிலேயே பொரித்து எடுக்கலாம்.

சிறிய மிக்ஸி ஜாரில்  பூண்டு,வற்றல், உப்பு போட்டு முதலில் அரைக்கவும்.

 பின்பு அத்துடன் நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.

 நன்கு அரைத்து எடுக்கவும்.

 கடாயில் எண்ணெய் விடவும், சூடானவுடன் கடுகு கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.

 அரைத்த சட்னியை சேர்க்கவும். பச்சை வாடை போகும் வரை அடுப்பை மீடியமாக வைத்து நன்கு வதக்கவும்.

 இப்படி சட்னி வற்றி தொக்கு போல் ஆகும் அடுப்பை அணைக்கவும்.தக்காளி,பூண்டின் பச்சை வாடை சுத்தமாகப் போய் மணமாக இருக்கும்.

சுவையான சத்தான பூண்டு சட்னி  ரெடி.
இட்லி தோசையுடன் பரிமாறவும்.காரசாரமாக இருக்கும்.

shared via

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts