குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானது சிக்கன். புரதச்சத்து நிறைந்தது. அதுவும் லெக் பீஸ் வறுவல் என்றால் ஆர்வமுடன் கையில் பிடித்து சாப்பிடுவார்கள். எளியமுறையில் செய்யலாம். தேவையான பொருட்கள்
சிக்கன் லெக் – ஒரு கிலோ
இஞ்சி பூண்டு விழுது – மூன்று டீ ஸ்பூன்
தயிர் – கால் கப்
மஞ்சள் பொடி – ஒரு டீ ஸ்பூன்
மிளகாய்பொடி – மூன்று டீ ஸ்பூன்
கரம்மசாலா – மூன்று டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
ஆரஞ்ச் கலர் பொடி – சிறிதளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
லெக் ப்ரை செய்முறை
சிக்கன் கடைகளில் லெக் பீஸ் தனியாக கேட்டால் கிடைக்கும். அதை வாங்கி வந்து நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தூள், மிளகாய்தூள், கரம் மசாலா, தயிர், கலர்பொடி, உப்பு போன்றவைகளைப் போட்டு நன்கு பிரட்டவும். கோழியுடன் எல்லாவற்றையும் நன்கு கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும். பின் ல் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொரித்தெடுக்கவும். தயிர் சேர்ப்பதால் கோழி சட்டியில் ஒட்டும். அதனால் போட்ட சிறிது நேரத்தில் திருப்பி திருப்பி விடவும்.. நன்கு பொரித்தெடுக்கவும். சுவையான காரமான சிக்கன் லெக் ப்ரை ரெடி.
No comments:
Post a Comment