My Blog List

Wednesday 2 November 2011

மக்காசோள பொங்கல்

 
 
தேவையானப் பொருட்கள்: பச்சரிசி குருணை & 1 கப், பாசி பருப்பு & கப், காய்ந்த சோள ரவை & கப், இஞ்சி & 1 துண்டு, பச்சை மிளகாய் & 2 நறுக்கியது, மிளகு, சீரகம் இடித்தது & 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் & சிறிது, எண்ணெய், நெய் கலந்தது &  கப், உடைத்த முந்திரி & கப். செய்முறை: பருப்பு, அரிசி குருணை, மக்காச்சோள ரவையை (ஸ்டோர் கடைகளில் கிடைக்கிறது) தனித் தனியாக உடைத்து வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு குக்கரில் 4&5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு, சிறிது நெய், உடைத்த கலவையும் சேர்த்து, ஒரு விசில் வரும்வரை வேகவிடுங்கள். வெந்தபின் நெய் மற்றும் எண்ணெயில் கடுகு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய், பெருங்காயம், உடைத்த முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டிக் கிளறவும். இது ஒரு புதுமையான பொங்கல். வித்தியாசமான சுவை கொண்டது.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts