தேவையானவை :
முட்டை – 4
உப்பு – சிறிதளவு
தாளிக்க :
கடுகு – 1/2 தே. கரண்டி
உளுந்தம் பருப்பு – ½ தே. கரண்டி
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1 மே. கரண்டி
கருவேப்பிலை – சிறிது
தே. எண்ணெய் –2 தே. கரண்டி
அரைக்க :
தேங்காய் – 3 மே . கரண்டி
மிளகாய் வற்றல் – 2
சின்ன வெங்காயம் – 1 மே. கரண்டி
மஞ்சள் பொடி – ½ தே. கரண்டி
சீரகம் – ½ தே. கரண்டி
கருவேப்பிலை – சிறிது
செய்முறை :
- அரைக்க கொடுத்துள்ளதை கரகரப்பாக அரைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளதை போட்டு தாளித்து அதனுடன் அரைத்த தேங்காய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும். கறி ரொம்ப தண்ணீராகவோ, ரொம்ப கெட்டியாகவோ இருக்கக்கூடாது.
- அதனுள் ஒவ்வொரு முட்டையாக உடைத்து ஊற்றவும்.
- தீயை குறைத்து, வாணலியை மூடி வைத்து சுமார் ஐந்து நிமிடம் வேக வைக்கவும். முட்டை வேந்துவிட்டால் இறக்கி விடலாம்.
Tagged: அசைவம், சமையல், முட்டை, முட்டை கறி, egg curry, egg recipe, lunch
No comments:
Post a Comment