தேவையான பொருட்கள்
இட்லி அரிசி 1 ஆழாக்கு,
தேங்காய் அரை மூடி
காய்ந்த மிளக்கய் 7 அல்லது 8
பெருங்காயம் சிறிது ,
உப்பு தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருள்கள்;
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை 1 ஆர்க்கு
செய்முறை
முதலில் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வத்துக் கொள்ளவும்
தேங்காயை துருவிக்கொள்ளவும்
அரிசியை மிக்ஸியில் அல்லது கல்லுரலில் போட்டு உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
பிறகு வாணலியை அடுப்பிலேற்றி ஒரு குழி கரண்டி சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்து தாளித்து அரைத்த விழுதினை சேர்த்து கையில் ஒட்டாத பதத்திற்கு கிளறி இறக்கவும்
பிறகு தேங்காய் துருவலை சேர்த்து னன்கு கிளறி ஒரு சிறிய எலுமிச்சை பழம் அளவுகளில் உருட்டி பிடித்து இட்லி பானையில் வேக வைத்து எடுத்து சூடாக பரிமாறவும்
தேவையானால் தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி வைத்துக் கொள்ளலாம்
No comments:
Post a Comment