My Blog List

Friday, 27 September 2013

ஆப்பம் செய்வது எப்படி? Easy Appam by Asiya Omar

ஈசி ஆப்பம் / Easy Appam
by Asiya Omar
சமைத்து அசத்தலாம்26 Sep 2013
சமைத்து அசத்தலாம் நேயர் ஷபானாவின் விருப்பத்திற்காக இந்த ஈசி ஆப்பம் பகிர்வு. இதே போல் செய்து பாருங்க,நிச்சயம் ஆப்பம் சூப்பராக வரும்.பெட்டர் லக் :) !
தேவையான பொருட்கள்;
பச்சரிசி - 300 கிராம் (ஒரு டம்ளர்)
தோல் நீக்கிய உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
சோறு - 1 கப்
சோடா உப்பு - பெரிய பின்ச்
சீனி - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
பரிமாறும் அளவு - 3-4 நபர்கள்
12 - 15 ஆப்பம் வரும்.
செய்முறை:
அரிசி,உளுந்து வெந்தயம் சேர்த்து நன்கு அலசி சுமார் 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
 தண்ணீர் வடித்து விட்டு சாதம் கலந்து மிக்ஸியில் ஒரு முறை அல்லது இரு முறையாகவோ போட்டு தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் வழித்து விடவும். உப்பு,சோடா உப்பு,சீனி சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு வைக்கவும்.முதல் நாள் மாலை அரைத்தால் மறுநாள் காலை சுட சரியாக இருக்கும்.
 குறைந்தது 14 மணி நேரம் மூடி வைக்கவும்.மாவு ஒரு ஒன்னரை அல்லது இரண்டு இன்ச் அளவு பொங்கி கலக்கி பார்த்தால் லேசாக இருக்கும்.நன்கு கலந்து தோசை மாவை விட கொஞ்சம் இளக்கமாக கரைத்து கொள்ளவும்.
 ஒரு கிழிக்கரண்டி மாவை எடுத்து நான்ஸ்டிக் ஆப்பச் சட்டி நன்கு காய்ந்த பின்பு விடவும்.ஆப்பச் சட்டியின் கைப்பிடியை பிடித்து மாவு வட்டமாக பரவுமாறு திருப்பி விடவும்.

மூடி போடவும்.
 சுற்றி லேசாக சிவந்து ஆப்பம் வெந்து வரும்.
அகப்பையக் கொண்டு லேசாக சைடில் விட்டால் ஆப்பம் அப்படியே சூப்பராக சட்டியில் இருந்து எழும்பி வரும்.
எடுத்து சூடாக பரிமாறலாம்.
 நடுவில் ஸ்பாஞ்சாக சுற்றி முறுகலான ஆப்பம் ரெடி. விருப்பமான சைட் டிஷ் உடன் பரிமாறவும்.
Show commentsOpen link

1 comment:

Popular Posts

Popular Posts