My Blog List

Sunday 20 October 2013

கோதுமை கேரட் அல்வா kothumai kerat alwa

கோதுமை கேரட் அல்வா

தேவையானப்பொருட்கள்:

கோதுமை மாவு - 1/2 கப்
கேரட் (நடுத்தர அளவு) - 2
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது

செய்முறை:

கேரட்டை கழுவி, தோலை சீவி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.  வெட்டிய கேரட் துண்டுகளை சிறிது நீர் சேர்த்து வேக விட்டு, சற்று ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் நெய்யை விட்டு, அதில் கோதுமை மாவை போட்டு, மிதமான தீயில் நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும்.  பின்னர் அத்துடன் அரைத்து வைத்துள்ள கேரட் விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். சர்க்கரையையும் சேர்த்து கை விடாமல் கிளறவும்.  சர்க்கரை நன்றாகக் கலந்து, அல்வா கெட்டியாக  பந்து போல்  பாத்திரத்தில் ஒட்டாமல்   வரும் பொழுது, ஏலக்காய் தூளைச் சேர்த்துக் கிளறி, தேவைப்பட்டால், மேலும் சிறிது  நெய்யையும் ஊற்றிக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்திலோ, தட்டிலோ கொட்டிப் பரப்பி விடவும்.  முந்திரியை சிறிய துண்டுகளாக்கி, அல்வாவின் மேல் தூவி விடவும்.

கவனிக்க:  இனிப்பு அதிகம் தேவையென்றால், சர்க்கரையின் அளவை சிறிது கூட்டிக் கொள்ளவும்.

shared via

1 comment:

Popular Posts

Popular Posts