போன்லெஸ் கிரீன் ஃபிஷ் ஃப்ரை - Boneless Green Fish Fry
தேவையான பொருட்கள்;
ஃப்ரெஷ் ஃபிஷ் போன்லெஸ் - 1 கிலோ
தேவைக்கு மஞ்சள் தூள் ,
மற்றும் உப்பு
நன்கு கழுவி எடுத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.
அரைக்க:
பச்சை மிளகாய் - 6
மல்லி இலை - 2 கைப்பிடி
புதினா இலை - 1 ஒரு கைப்பிடி
விரும்பினால் கருவேப்பிலை
சிறிது உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.
பொரிக்க தேவைக்கு எண்ணெய் .
அரைத்த விழுதை ஒரு ப்லேட்டில் எடுத்து
அத்துடன் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,
2 டீஸ்பூன் மிளகுத்தூள்,
ஒரு டீஸ்பூன் சீரகத்தூள்,
ஒரு டீஸ்பூன் சோம்புத்தூள்,
கால் அல்லது அரைடீஸ்பூன் கரம் மசாலா,
தேவைக்கு எலுமிச்சை ஜூஸ்(பெரிய பழம் )
ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்,
உப்பு சிறிது சேர்த்து விரவி வைக்கவும்.
விரவிய மசாலாவை ஒவ்வொரு துண்டாக எடுத்து தடவி வைக்கவும்.
ஃப்ரிட்ஜில் 4 மணி நேரம் நிச்சயம் ஊற வேண்டும் அல்லது ஒரு நாள் முழுவதும் வைத்தாலும் சரி.
விரவிய மீனை பிரட்ட
மைதா, கார்ன்ஃப்லோர்,ப்ரெட் கிரம்ஸ் தலா 2 டேபிள்ஸ்பூன்,சிறிது உப்பு கலந்து வைக்கவும்.
ஊறிய மீனை லேசாக மாவில் பிரட்டி எடுக்கவும்.( நான் எப்பவும்,மைதா,கார்ன்ஃப்லோர், ப்ரெட் கிரம்ஸ் சம அளவு போட்டு மிக்ஸ் செய்து ஒரு பாக்சில் வைத்திருப்பேன்)
தவாவில் தேவைக்கு எண்ணெய் விட்டு சாலோ ஃப்ரை செய்து எடுக்கவும்.
நெருப்பு சரியான சூட்டில் வைத்து பதமாக இரு புறமும் சிவற வைத்து பொரித்து எடுக்க வேண்டும்.
சூப்பர் சுவையுள்ள ஆரோக்கியமான ஃபிஷ் ஃப்ரை ரெடி.
வித்தியாசமாக ஃபிஷ் ஃப்ரை செய்ய நினைத்தால் இதை செய்து பாருங்க.உப்பு காரம் அளவாய் இருக்க வேண்டும்.
shared via
No comments:
Post a Comment