My Blog List

Monday, 13 February 2012

சீனி அதிரசம்

 

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு – 2 கப்

சர்க்கரை – 3/4 கப்

பால் – 1/4 கப்

ஏலக்காய்த்தூள் – 1/4 டீ ஸ்பூன்

நெய் – 2 டீ ஸ்பூன்

எண்ணெய் – பொரிக்க

செய்முறை:

* பச்சரிசி மாவில் ஏலக்காய்த்தூளை கலந்து வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு மூழ்குமளவு நீர் வைத்து கொதிக்க வைக்கவும்.

* கொதிக்க ஆரம்பித்ததும் பாலை ஊற்றவும்.

* சிறிது நேரத்தில் பொங்கும் போது மேலோடு அழுக்கை எடுக்கவும்.

* பின் சிறிது கிண்ணத்தில் நீர் வைத்து சர்க்கரையை அதில் விட்டு பார்த்தால் உருண்டையாக நிற்கும்.

* அப்பொழுது பாகை அடுப்பிலிருந்து இறக்கி மாவை கொஞ்ச கொஞ்சமாக போட்டு கிளறி நெய் கலந்து வைக்கவும்.

* மறுநாள் ஒரு கவரில் எண்ணெய் தடவி சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பின்குறிப்பு:

* பச்சரிசி மாவு என்பது அரிசியை ஊறவைத்து நீரில்லாமல் வடிகட்டி நிழலில் உலர்த்தி மிக்ஸியில் மாவாக்கவும்.

* மிகவும் நைசாக இல்லாமலும், கொரகொரப்பாக இல்லாமலும் இருக்கணும்.

* குறிப்பிட்டிருக்கும் 2 கப் பச்சரிசி மாவு ஊறவைத்து அரைத்த மாவுதான்.

* மாவை எண்ணெயில் பொரிக்கும் போது தடிமனாக இல்லாமலும், மெல்லியதாக இல்லாமலும் தட்டவும்.

* மாவு தளர்த்தியாக இருந்தால் மீண்டும் அரிசியை ஊறவைத்து அரைத்து போட்டு கிளறி வைக்கவும்.

* மாவை கிளறி வைத்து உடனே சுடுவதை விட 2 நாள் வைத்திருந்து சுட நல்லாயிருக்கும்.

* இந்த அளவில் 7 அதிரசங்கள் வரும்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts