Sweet milk
Sweet milk Sweet milk Sweet milk
Sweet milk Sweet milk Sweet milk
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – அரை கப்
உளுந்து – அரை கப்
தேங்காய் – ஒன்று
பால் – ஒரு டம்ளர்
ஏலக்காய்
சீனி – தேவையான அளவு
செய்முறை:
உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு(தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்) அரைக்கவும். தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிகேற்ப சீனி சேர்த்து வைக்கவும்.
அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்.
நல்ல பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைக்கவும்..
பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.
காரைக்குடி பக்கம் இருப்பவர்கள் வீட்டில் நடக்கும் திருமணம், விஷேசங்கள் போன்றவற்றில் இந்த பலகாரம் கண்டிப்பாக இருக்கும்.
பால் பணியாரம் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது. உங்கள் சமையல் தொகுப்புகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதே போன்று http://www.valaitamil.com/egg-paniyaram_3910.html என்ற இணையதள முகவரியை பார்த்து முட்டை பணியாரம் செய்து பார்த்தேன்.அதுவும் மிகவும் அருமையாக இருந்தது. நேரம் கிடைத்தால் தோழியர்கள் , முட்டை பணியாரத்தையும் செய்துபாருங்களேன்.
ReplyDelete