My Blog List

Monday, 13 February 2012

பாசிப்பருப்பு பக்கோடா

 

பாசிப்பருப்பில் நிறைய புரோட்டீன் இருப்பதால் அனைவரும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பாசிப்பருப்பில் பாயசம் வச்சு சாப்ட்ருப்பீங்க.. பக்கோடா செஞ்சிருக்கீங்களா… அதீத சுவையுடன் சும்மா மொறுமொறுனு பிரமாதமா இருக்கும்.. எங்க செஞ்சு அசத்துங்க பாப்போம்…

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 1/2 கப்

பெரிய வெங்காயம் – 1 1/2

பச்சைமிளகாய் – 2

கறிவேப்பிலை – ஒரு கொத்து

இஞ்சி – அரை இன்ச்

தனியா – 1 டீஸ்பூன்

உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:

* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

* பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

* அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உதிர்த்து விடவும்.

* இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

* சுவையான வித்தியாசமான பாசிப்பருப்பு பக்கோடா தயார்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts