இந்த மாதங்களில் அதிகமாகக் கிடைக்கும் மாம்பழம், தர்பூசணி, கிர்ணிப் பழம், முலாம்பழம், நுங்கு இவைகளைக் கொண்டு எளிதான சுவையான பழக் கலவை தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
தோல் சீவி சிகப்பான பகுதியை துண்டுகளாக்கிய தர்பூசணி – 1 கப்
கிர்ணிப்பழம் – 1 கப்
முலாம் பழம் – 1 கப்
இனிப்பான நார் இல்லாத மாம்பழம் – 1 கப்
இளசாக உள்ள நுங்கு துண்டுகள் – 1 கப்
தேன் – 1 டேபிள் ஸ்பூன்
தேவையானால் கஸ்டர்டு பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
பால் – 1 கப்
(இது தவிர வாழைப்பழத் துண்டுகள் – 1 கப், கொட்டையில்லாத திராட்சை – 1 கப், பப்பாளி (இனிப்பானது) துண்டுகள் – 1 கப், காஸ் மீது வைத்து அரை நிமிடம் சுட்டு, தோல் நீக்கி, குறுக்கே வெட்டி, விதைகள் நீக்கி துண்டுகள் போட்ட இனிப்பான பெங்களூர் தக்காளி – 1 கப் என்று எந்தப் பழம் சீப்பாக கிடைக்கிறதோ, அதை எடுத்துக்கொள்ளலாம்.)
செய்முறை:
* எல்லாவற்றையும் சேர்த்து நறுக்கி ப்ரிட்ஜ்ஜில் ட்ரேயில் வைக்கவும்.
* பால் சூடாக்கி, குளிர்ந்த பால் கரைத்த கஸ்டர்டு பவுடரை அதில் ஊற்றி அடி பிடிக்காமல் கொதித்ததும் நன்கு ஸ்பூனால் குழைத்து ஆறியதும் தேன், வெனிலா எசன்ஸ் சேர்த்து ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.
* குழந்தைகளுக்குத் தேவையான போது பழக் கலவையின் மீது – 1 ஸ்பூன் கஸ்டர்ட் போட்டு கிண்ணத்தில் கொடுத்தால் எல்லா பழங்களையும் சாப்பிடுவார்கள்.
* சுமார் – 15 குழந்தைகள் பங்குபெறும், பிறந்தநாள் விழா அல்லது கெட் டு கெதர் பார்ட்டிக்கு – 2 மாம்பழம், – 1 கிர்ணிப்பழம், – 1 முலாம் பழம், – 4 தக்காளி, 100 – கிராம் திராட்சை, – 10 நுங்கு போதும். குறைந்த செலவில் சத்தான சுவையான விலை குறைவான சாலட் ரெடி. தோல் சீவிக் கொடுத்து விட்டால் அவர்களே தயாரித்து விடுவார்கள்.
No comments:
Post a Comment