My Blog List

Friday 28 October 2011

பாகற்காய் பிட்லை

 
 

பாகற்காய் பிட்லை

தேவையான பொருட்கள் :
பாகற்காய் – 200 கிராம்
புளி கரைசல் – 100 மி. லி
உப்பு – சிறிது
கருவேப்பிலை – சிறிது
தேங்காய் – 1 மே. கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தே. கரண்டி
வறுத்து அரைக்க :
மல்லி விதை – 1 தே. கரண்டி
நல்ல மிளகு – 1/2 தே. கரண்டி
மிளகாய் வற்றல் – 3
கடலை பருப்பு – 1 தே. கரண்டி
உளுந்தம் பருப்பு – 1/2 தே. கரண்டி
தாளிக்க :
கடுகு – 1/2 தே. கரண்டி
எண்ணெய் – 1 தே. கரண்டி
செய்முறை :
  • அரைக்க கொடுத்துள்ளதை தனி தனியாக வறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
  • பாகற்காயை மெல்லிய வட்டங்களாக வெட்டி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
  • பாதி வெந்தவுடன் புளி கரைசல், அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
  • கடுகு மட்டும் தாளித்து விடவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கும் போது கருவேப்பிலை கிள்ளி போடவும்.
  • பிட்லை தயார்.

Tagged: பாகற்காய், பாகற்காய் பிட்லை, lunch

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts