My Blog List

Saturday 29 October 2011

மீன் பக்கோடா

 
 
மீன் பக்கோடா
தேவையான பொருட்கள்
சுறாமீன்-1/2 கிலோ, கடலைமாவு-150 கிராம், அரிசிமாவு-100 கிராம், சோளமாவு-50 கிராம், மைதா மாவு-50 கிராம், சோம்பு-1 ஸ்பூன், பட்டை-3, வெங்காயம்-3, பூண்டு-1, இஞ்சி-2 அங்குலம், எண்ணெய்-1/4 கிலோ, மஞ்சள் பொடி-1/2 ஸ்பூன், பச்சை மிளகாய்-6, மிளகாய் பொடி-1 ஸ்பூன், உப்பு-தேவையான அளவு.
மீனைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும்.
இதனோடு வெங்காயத்தை நீளவாட்டில் அரிந்து சேர்க்கவும். இஞ்சி பூண்டு தோல் நீக்கித் தட்டிச் சேர்க்கவும். எல்லா மாவுகையும் ஒன்றாகக் கலந்து சேர்க்கவும். சோம்பு, பட்டை இடித்துச் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். பச்சை மிளகாய் நறுக்கிச் சேர்க்கவும். மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து உப்பு சேர்த்து நீர் தெளித்து பிசறவும்.
எண்ணெய் புகைய காயவிட்டு தீயைக் குறைத்து கை நிறைய மாவை அள்ளிப் பிசறிவிட்டு பொன்னிறமாக மொரமொரப்பாக பொரித்துத் தூவவும்.
சுடசுட தக்காளி ரைஸோடு பரிமாறவும்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts