My Blog List

Friday 28 October 2011

சப்பாத்தியும் சன்னா மசாலாவும்….

 

சப்பாத்தி

சப்பாத்தி

1/4 கிலோ கோதுமை மாவுடன் சிறிது உப்பு, பேகிங் சோடா (1/2 தே. கரண்டி) கலந்து, தண்ணீர் ஊற்றி பிசைந்து, சப்பாத்தியாக தேய்த்து, tava வில் சுட்டு எடுக்கவும்.

சன்னா மசாலா

சன்னா மசாலா

வெள்ளை கொண்டைகடலையை ( 2௦௦ கிராம்) 5 மணி நேரம் ஊற வைத்து cookerஇல் 2 விசிலில் வேக வைத்து எடுக்கவும்.

தேங்காயுடன் (2 மே. கரண்டி ) மிளகாய் வற்றல் (3), பெருஞ்சீரகம் (1 தே. கரண்டி), ஏலக்காய் (2), கிராம்பு (3), நாட்டு தக்காளி (2), சின்ன வெங்காயம் (6) சேர்த்து மிதமான சூட்டில் லேசாக வறுத்து மையாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை (2) , அன்னாசி பூ (2) , இஞ்சி பூண்டு விழுது (1 தே. கரண்டி) போட்டு வதக்கவும்.

அதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கவும். சன்னாவை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் இறக்கவும்.

சப்பாத்திக்கு சன்னா மசாலாவை தொட்டு கொள்ளவும்….


Tagged: சன்னா மசாலா, சப்பாத்தி, channa masala, chapathy, dinner

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts