My Blog List

Sunday 29 September 2013

கத்திரிக்காய் பாசிப்பருப்பு கூட்டு - Brinjal moong dal curry

கத்திரிக்காய் மிளகூட்டல் / கத்திரிக்காய் பாசிப்பருப்பு கூட்டு / Brinjal moong dal curry
by Asiya Omar
சமைத்து அசத்தலாம்
Tamil samayal kurippugal
கத்திரிக்காய் எப்பவும் வீட்டில் இருக்கும் காய்கறிகளுள் ஒன்று. கத்திரிக்காய் வைத்து காரம்,புளிப்பாய் தான் குழம்பு,கறி செய்வோம். காரம்,குறைவான,புளிப்பில்லாத இந்த கூட்டை இன்று முயற்சி செய்து பார்த்தேன். இந்த மிளகூட்டலை, கேரட்,பீன்ஸ்,கோஸ் வைத்தும் செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்;
பாசிப்பருப்பு - அரை கப்
பிஞ்சு கத்திரிக்காய் - 200 கிராம்
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
அரைக்க:
சீரகத்தூள் அல்லது சீரகம் - அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் -  2 டீஸ்பூன்
கடுகு - அரைடீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு.
செய்முறை:
 தேவையான பொருட்களை ரெடி செய்யவும்.
 கத்திரிக்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
 தேங்காய், வெங்காயம்,சீரகம் அரைத்து எடுக்கவும்.
 பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
 தேவைக்கு தண்ணீர் சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும். பருப்பு பாதி வேக்காடு வெந்த பின்பு நறுக்கிய கத்திரிக்காய் சேர்க்கவும்.
 மஞ்சள் பொடி,மிளகாய்ப்பொடி சேர்க்கவும்.
 தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.
 வெந்த பின்பு அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.நன்கு ஒரு சேர கொதிக்க விடவும்.
 கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.
கலந்து விட்டு பரிமாறவும்.
சுவையான கத்திரிக்காய் மிளகூட்டல் ரெடி.
இது பத்தியக்கறி போல் மைல்டாக இருக்கும், தக்காளி,புளி சேர்க்கவில்லை.சூடு சாதத்தில் பிரட்டி சாப்பிட சூப்பராக இருக்கும். சப்பாத்தி, பூரிக்கு நன்றாக இருக்கும்.
பிடித்திருந்தால் ஒரு மாற்றத்திற்கு செய்து பார்க்கலாம்.
Show commentsOpen link

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts