பண்டிகை வடை pandikai vadai
பண்டிகை நாட்களில், சிலர் வீடுகளில் வெங்காயம், சோம்பு போன்ற மசாலாப் பொருட்களை சமையலில் சேர்க்க மாட்டார்கள். இப்படி வெங்காயம், சோம்பு சேர்க்காமல் செய்யப்படும் வடையை "பண்டிகை வடை" என்று அழைப்பார்கள்.
தேவையானப்பொருட்கள்:
துவரம் பருப்பு - 3/4 கப்
கடலைப் பருப்பு - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
பருப்புகள் மூன்றையும் ஒன்றாகப் போட்டு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நன்றாகக் கழுவி, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து, மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
இஞ்சி, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும். சீரகத்தையும் மாவில் போட்டு நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும். எண்ணை காய்ந்ததும், எலுமிச்ச அளவு மாவை எடுத்து வடையாகத் தட்டி, நடுவில் துளையிட்டு, எண்ணையில் போட்டு பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.
shared via
உங்களின் செய்முறைப்படி செய்து பார்ப்போம்... நன்றி...
ReplyDelete