My Blog List

Saturday 5 October 2013

மிர்ச்சி கா சாலன் - Mirchi Ka Salan

மிர்ச்சி கா சாலன் / Mirchi Ka Salan

by Asiya Omar
சமைத்து அசத்தலாம்

தேவையான பொருட்கள்;
இளம் பச்சை நிற பெரிய மிளகாய் - 6
(பஜ்ஜி மிளகாயை விட சிறியது)
வெங்காயம்- 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

வறுத்து அரைக்க:
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள்ளு - 1 டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
கெட்டி தயிர் - அரை கப்

தாளிக்க:
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கருவேப்பிலை - இரண்டு இணுக்கு.

செய்முறை:
 தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும்.


ஒரு கடாயில் வேர்க்கடலை, எள்ளு,தேங்காய் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு லேசாக சிவற வறுத்து ஆற வைக்கவும்.

 மிளகாயை நன்கு அலசி கீறிவிட்டு விதையை எடுக்கவும்.

 கடாயில் எண்ணெய் விட்டு மிளகாயை பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் கடுகு,உளுத்தம் பருப்பு,வெந்தயம், கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.



 நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சிவற விடவும்.

 இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.

 மற்ற மசாலாக்கள் சேர்க்கவும்.வதக்கவும்.

 அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.

 ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.உப்பு தேவைக்கு சேர்க்கவும்.

 கெட்டித்தயிர் சேர்க்கவும்.நன்கு கலந்து விடவும்.அடுப்பைக் குறைக்கவும்.

 பொரித்த மிளகாய் சேர்க்கவும்.

 அடுப்பை நன்கு குறைக்கவும்.மூடி விடவும்.

 எண்ணெய் மேலெழும்பி சால்னா கெட்டியாகி வரும்.அடுப்பை அணைக்கவும்.

சுவையான மிர்ச்சி கான் சாலன் ரெடி.இந்த மிளகாய் கிடைக்காதவர்கள் பஜ்ஜி மிளகாயில் செய்து பாருங்க.

 சூடான சாதம் ,பிரியாணி,புலாவ் வகைகளுக்கு பக்க உணவாக பரிமாறவும்.

பிரியாணிக்கு வெங்காய பச்சடி, தொட்டுக்க  தால்ச்சா அல்லது எண்ணெய் கத்திரிக்காய் பொதுவாக வைப்போம்.வித்தியாசமாக ஏதாவது சைட் டிஷ் செய்ய நினைப்பவர்கள் மாற்றமாக  இந்த மிர்ச்சி கா சாலன் வைத்து பாருங்க,சூப்பராக இருக்கும்.இது ஹைதராபாத் ஸ்பெஷல் ஆகும்.இது முன்பே என் ஆங்கில வலைப்பூவில் பகிர்ந்த குறிப்பு தான்.ஒரு சில என் ஊர் தோழிகள்,குடும்பத்தார்கள்  ஆங்கிலத்தில் கொடுத்ததை தமிழிலும் கொடுங்க என்று அன்பாக கேட்டுக் கொண்டதால் இங்கும் சில ரெசிப்பிக்கள் பகிர எண்ணியுள்ளேன்.
கருத்துக்கள் குறைவாக வந்தாலும் நான் எப்பவும் என் ட்ராஃபிக் பார்த்து திருப்தி பட்டுக் கொள்வதுண்டு.மெயில் மூலம் தொடர்பு கொண்டு,நேரில்,தொலைபேசியில்  கருத்து தெரிவிப்பவர்கள் மற்றும் வருகை தரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.

Show commentsOpen link

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts