My Blog List

Wednesday 9 October 2013

போன்லெஸ் சிக்கன் மந்தி - Boneless Chicken Mandi

போன்லெஸ் சிக்கன் மந்தி / Boneless Chicken Mandi

by Asiya Omar
சமைத்து அசத்தலாம்Today,

அரபு நாடுகளில் எப்படி சவர்மா, பார்பிகியூ பிரசித்தமோ அதே போல் இந்த மந்தி ரைஸ், கப்ஸா ரைஸ் போன்றவையும் மிகப் பிரபலம்.ஏற்கனவே நான் சிக்கன் கப்ஸா ரைஸ் , மட்டன் கப்ஸா குறிப்பை என் அரேபிய உணவுகள் பகுதிகளில் பகிர்ந்திருக்கேன்.
நம் நாட்டில் பிரியாணி போல் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த மந்தி ரைஸ் பிரபலம்.நாம் இங்கு நிறைய மசாலா எல்லாம் சேர்த்து பிரியாணி செய்கிறோம்.ஆனால் அரபு நாடுகளில் காரம் ,மசாலா அதிகம் இல்லாமல் மைல்டாக ஆரோக்கியமாக செய்து சாப்பிடுவது வழக்கம்.
சிக்கன், மட்டன், மீன் என்று எல்லாவற்றிலும் இதனை வெரைட்டியாக செய்யலாம்.முழுக் கோழியை பாதியாக வெட்டி தோலோடு கிரில் செய்தோ அல்லது அரிசியுடன் வெந்தோ இந்த மந்தி ரைஸ் செய்வார்கள்

இப்ப சிக்கன் மந்தி சிம்பிளாக எப்படி செய்வதுன்னு பார்ப்போம்.
நான் இங்கு ஒரு மாற்றமாக எலும்பில்லாத சிக்கனை பேக் செய்து   மந்தி ரைஸ் செய்திருக்கேன்.
மந்தி ரைஸ்க்கு தேவையான பொருட்கள்;
எலும்பில்லாத சிக்கன் நெஞ்சுப்பகுதி - 800 கிராம்.
பாசுமதி அரிசி - அரைக்கிலோ
எண்ணெய் நெய் - 50+ 50 (100 மில்லி)
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1 (100 கிராம்)
பட்டை  -2 துண்டு,
கிராம்பு, ஏலக்காய்  - தலா 4
(விருப்பப்பட்டால் தாளிக்க சிறிது முழு மிளகு,சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்)
காய்ந்த எலுமிச்சை - 1 அல்லது இரண்டு
knorr ஆல் ஸ்பைஸ் மிக்ஸ்(சிறிய பேக் 2 ) அல்லது சிக்கன் ஸ்டாக் - 2
உப்பு  சேர்க்க வேண்டாம், இவற்றிலேயே உப்பு இருக்கும்.நான் இங்கு knorr ஆல் இன் ஒன் ஸ்பைஸ் சேர்த்து செய்தேன்.
பால் - 50 மில்லி, 2 பின்ச் சாஃப்ரான்.
அலங்கரிக்க:
எண்ணெயில் வறுத்த முந்திரி,காய்ந்த திராட்சை,சிவற வறுத்த  வெங்காயம் ரெடி செய்து கொள்ளவும்.

தேவையான பொருட்களை இப்படி முதலியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பரிமாறும் அளவு - 4 நபர்கள்.

இனி சிக்கன் பேக் செய்வதற்கு எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.

 கோழி நெஞ்சுப் பகுதியை நன்கு சுத்தம் செய்து அலசி தண்ணீர் நன்கு வடித்து எடுத்துக் கொள்ளவும்.

 800 கிராம் சிக்கனுக்கு சிக்கன்  பார்பிகியூ மசாலா 4 டீஸ்பூன்,2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு எலுமிச்சை ஜூஸ், 1 டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு விரவி வைக்கவும்.பார்பிகியூ மசாலா இல்லாதவர்கள் 2 டீஸ்பூன் சில்லி பவுடர் மட்டும் கூட உபயோகிக்கலாம்.

 சிக்கனை பேக் செய்ய ஒரு நான்ஸ்டிக் பேக்கிங் ட்ரேயில் ஆலிவ் ஆயில் ஒரு டேபிள்ஸ்பூன் தடவி ரெடி செய்த சிக்கன் துண்டுகளை வைக்கவும்.

 முற்சூடு செய்த எலெக்ட்ரிக் ஓவனில் 250 டிகிரிக்கு செட் செய்து பேக் செய்ய வேண்டும்.அனலை மேலும் கீழும் செட் செய்ய வேண்டும்.சிக்கன் வைத்த ட்ரேயை ஓவனில் வைத்து இருபது நிமிடம் கழித்து திற்ந்து பார்க்கவும்.

 சிக்கன் துண்டுகள் ஒரு புறம் வெந்தவுடன் திருப்பி மறுபுறம் வைக்கவும்.

 ஓவனுக்கு ஓவன் செய்முறைக்கு தகுந்த படி நேரம் மாறுபடும்.உங்கள் பக்குவப் படி பேக் செய்து எடுக்கவும். தோலோடு சிக்கன் உபயோகித்தால் வைத்தால் கிரில் ப்லேட் வைத்து கிரில் செய்து எடுக்கலாம்.

 சிக்கன் நன்கு வெந்த பிறகு கவனமாக கையுறை போட்டு வெளியே எடுக்கவும்.

இனி மந்தி ரைஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் நெய் விடவும். பட்டை,கிராம்பு,ஏலக்காய் போடவும்.லேசாக வெடிக்க ஆரம்பிக்கும்.(விருப்பப்பட்டால் தாளிக்க சிறிது முழு மிளகு,சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்)

நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

 நன்கு வதக்கவும் லேசாக சிவறட்டும்.

 இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வதக்கவும்.

 ஊறிய அரிசி சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.

 அரிசியின் அளவிற்கு இரண்டு அளவு தண்ணீர் வைக்கவும்.காய்ந்த எலுமிச்சையை ஃபோர்க்கால் துளை செய்து போடவும்.knorr ஆல் ஸ்பைஸ் சேர்க்கவும்( 2 அல்லது 3டீஸ்பூன்) உப்பு சேர்க்கவில்லை.அதுவே அதிக உப்பு கரிப்புடன் இருக்கும்.

 அரிசி ஒரு சேர கொதித்து முக்கால் வேக்காடு வெந்து வரும் பொழுது தயாராக உள்ள பேக்ட் சிக்கனை மேலே பரத்தி வைக்கவும்.

50 மில்லி சூடு பாலில் 2 பின்ச் சாஃப்ரான் போட்டு காய்ச்சி வைக்கவும்.ஒரு அடுப்பு கறி துண்டை அடுப்பில் கங்காக தயார் செய்யவும்.

 சாஃப்ரான் மில்க்கை தயார் செய்து வைத்த மந்தி சோற்றின் மீது ஊற்றவும்.ஒரு சிறிய தட்டில் அனலாக இருக்கும் கங்கை வைக்கவும். அடுப்புக்கரி மணம் மந்தி ரைஸில் பரவும்.

 அலுமினியம் ஃபாயில் போட்டு மூடி சிம்மில் கால் மணி நேரம் வைக்கவும்.அடுப்பை அணைக்கவும்.

 மீண்டும் கால் மணி நேரம் கழித்து திறந்து நன்கு பிரட்டி பரிமாறவும்.

 வறுத்த வெங்காயம் முந்திரி திராட்சை அலங்கரித்து ஒரு பெரிய சகன் (பவுல்)அல்லது ப்லேட்டில் பரிமாறவும்.

சுவையான சிக்கன் மந்தி ரெடி.

இதற்கு பக்க உணவாக ஃப்ரெஷ் கிரீன் சாலட், ஃப்ரெஷ் தக்காளி வெங்காய சட்னி தான் காம்பினேஷன்.

என் மகனுக்கு மிகவும் பிடித்த உணவு இது. இந்த மந்தி ரைஸில் இந்த சாலட்டை போட்டு கொஞ்சம் அந்த தக்காளி வெங்காய சட்னி சிக்கன் மிக்ஸ் செய்து எல்லாம் கலந்து சாப்பிடுவதுண்டு.சும்மா மிக்ஸ் செய்யாமல் தனித்தனியாகவும் சாப்பிடலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்க. எப்பவும் மந்தி ரைஸ் விடுமுறை நாட்களில் வெளியே வாங்கி விடுவதுண்டு. எங்க பக்கம் 20 திர்ஹமுக்கு சூப்பர் மந்தி ரைஸ் கிடைக்கும் மூன்று பேர் சாப்பிடலாம்.ஆனால் உங்கள் எல்லோருக்காகவும் செய்து பகிர வேண்டும் என்பதாலேயே இந்த ரெசிப்பி பகிர்வு. அல்ஹம்துலில்லாஹ்!

Show commentsOpen link

1 comment:

Popular Posts

Popular Posts