பழுத்த மிளகாய் பூண்டு கோழி வறுவல் / ரெட் சில்லி கார்லிக் சிக்கன் ஃப்ரை / Cayenne Pepper Garlic Chicken Fry / Red Chilli Garlic Chicken Fry
by Asiya Omar
சமைத்து அசத்தலாம்
கோழியை எப்படி சமைத்தாலும் ருசியாகத்தான் இருக்கும். அதிலும் ஃப்ரை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.ஒரே மாதிரி ஃப்ரை செய்தாலும் கொஞ்சம் சலித்து விடும் தான்.ஒரு மாற்றமாக பழுத்த மிளகாய்,பூண்டு சேர்த்து செய்த கோழி வறுவல் எப்படி என்று பார்ப்போம்.எண்ணெயும் குறைவாகவே செல்லும்.
தேவையான பொருட்கள்;
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 300 கிராம்
பழுத்த சிவப்பு மிளகாய் - 4-5 (காரம் அவரவர் விருப்பம்)
பூண்டு - 6 பல்
மீடியம் சைஸ் வெங்காயம் - 1
மீடியம் சைஸ் - தக்காளி - 1
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
விரும்பினால் - ரெட் கலர் - பின்ச்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லி ,கருவேப்பிலை சிறிது.
செய்முறை:
பழுத்த மிளகாய், தக்காளி,வெங்காயம்,பூண்டு,கெட்டி தயிர்,சேர்த்து மிக்ஸியில் கவனமாக அரைத்து எடுக்கவும்.
சிக்கனை சிறு துண்டுகளாக்கி நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
சிக்கனுடன் அரைத்த விழுது,தேவைக்கு சிறிது உப்பு,கலர் சேர்க்கவும்.
நன்கு விரவி ஒரு மணி நேரமாவது ஊற வைக்கவும்.
அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஊறிய சிக்கனை போட்டு மூடி 15 நிமிடம் வேக விடவும்.தண்ணீர் சேர்க்கக் கூடாது. சிக்கனிலேயே தண்ணீர் ஊறும். தண்ணீர் நன்கு வற்ற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விடவும் நன்கு சூடானவுடன் கருவேப்பிலை போடவும்,வெந்த சிக்கன் சேர்க்கவும்.நன்கு பிரட்டி பிரட்டி விடவும்.
சிக்கனில் மசாலா எல்லாம் ஓட்டிக் கொண்டு ஃப்ரை ஆகி வரும்.
நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும். பிரட்டி விட்டு பரிமாறவும்.
சூப்பர் சுவையுள்ள ரெட் சில்லி கார்லிக் சிக்கன் ஃப்ரை ரெடி.
ரைஸ் வகைகளுக்கு பக்க உணவாக சாப்பிடலாம்.சப்பாத்தியில் ரோல் செய்தும், ப்ரெட் சாண்ட்விச்சில் வைத்தும் மற்றும் வெறும் ஸ்டார்டராகவும் கூட பரிமாறலாம்.இதனையே எலும்புடன் கூடிய சிக்கன் என்றால் கொஞ்சம் கிரேவி மாதிரியும் செய்யலாம்.அதற்கு தக்காளி,வெங்காயம்,தயிர் அளவை கூட்டிக் கொள்ள வேண்டும். விரும்பினால் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கலாம்.கிரேவி செய்முறை செய்த பின்பு படம் இணைக்கிறேன்.
Show commentsOpen link
No comments:
Post a Comment