My Blog List

Friday 20 September 2013

Cooking of Vegetables காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா?

Cooking of Vegetables - காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் ĩ
by tnkesaven
New Tamil s - Penmai.comToday,
காய்கறிகளைச் சமைத்து உண்பதால் அதன் சத்துக்கள் குறையுமா?

காய்கறிகளைச் சமைக்கும்போது இருவகைகளில் அதன் சத்துக்கள் நீங்க வாய்ப்பு உண்டு. காய்கறிகளின் சத்துக்கள் நீரில் கரைந்து விடலாம். இது தவிர, வேக வைக்கும்போது சத்துக்கள் உஷ்ணத்தால் ஆக்ஸிஜனேற்றம் அடையும்போது சத்துக்கள் நீங்கிவிடும்.

வைட்டமின்-பி மற்றும் வைட்டமின்-சி ஆகியன நீரில் கரையும் தன்மை கொண்டவை. இவ்வகை வைட்டமின்கள் வீணாகாமல் இருக்க, காய்கறிகளை நறுக்கியபின் கழுவுவதைத் தவிர்த்து, கழுவியபின் நறுக்க வேண்டும்.

வைட்டமின்-ஏ மற்றும் கெரோட்டின் சத்துக்கள் நீரில் கரையாது. இருப்பினும், வேக வைக்கும்போது மிகச் சிறிய அளவில் ஆக்ஸிஜனேற்றம் அடையும் வாய்ப்பு உண்டு.

எனவே காரட், முள்ளங்கி, வெள்ளரிக் காய் போன்ற பச்சையாக உண்ணத் தகுந்த காய்கறிகளை பச்சையாகவே உண்பது நல்லது. வேக வைக்க வேண்டிய காய்கறிகளையும் அதிக அளவு வேக வைக்கக்கூடாது. மேலும், காய்கறி வேக வைத்த நீரினையும் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

காய்கறிகளை வறுப்பதாலும், பொரிப்பதாலும் 40 முதல் 60 சதவீதம் சத்துக்கள் நீங்கிவிடும்.
dinamalar

Show commentsOpen link

2 comments:

  1. பயனுள்ள குறிப்புகள் நன்றி... (dinamalar)

    ReplyDelete
  2. சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    ReplyDelete

Popular Posts

Popular Posts