My Blog List

Sunday 29 September 2013

மல்வானி இறால் குழம்பு malwani iraal kulammpu tamil samayal kurippu

மல்வானி இறால் குழம்பு
by Marikumar
Tamil samayal kulampu vagaigal
மல்வானி இறால் குழம்பு ஒரு மகாராஷ்டிரா ஸ்டைல் ரெசிபிக்களில் ஒன்று. இந்த மல்வானி ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் தேங்காயை அதிகம் பயன்படுத்துவது தான். எனவே இந்த வாரம் சிக்கன், மட்டன் என்று செய்யாமல், சற்று வித்தியாசமாக இறாலை வாங்கி வந்து, மல்வானி ஸ்டைல் இறால் குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
இதனை செய்முறை மிகவும் எளிமையானது. மேலும் இதனை செய்தால், வீட்டில் உள்ளோரிடம் நல்ல பாராட்டைப் பெறலாம். சரி, இப்போது அந்த மல்வானி இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
இறால் - 500 கிராம்
புளிச் சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 3-4 பற்கள் (தட்டியது)
தேங்காய் பால் - 1 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்ழுன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு...
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்ன
சோம்பு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பச்சை ஏலக்காய் - 2
பட்டை - 1
வரமிளகாய் - 2
கிராம்பு - 3
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது உப்பு தூவி, பிரட்டி தனியாக வைத்து விட வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய், சோம்பு, மல்லி, வெந்தயம் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் வெங்காயம் மற்றும் தேங்காய சேர்த்து 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி, இறக்க வேண்டும்.
கலவையானது குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாகவும் மென்மையாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்த்தும், தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறிவிட்டு, இறாலை போட்டு, குறைவான தீயிலேயே 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் புளிச்சாற்றினை ஊற்றி, கரம் மசாலா தூவி கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மல்வானி இறால் குழம்பு ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Share |
Show commentsOpen link

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts