My Blog List

Tuesday, 28 February 2012

எவ்வகை சுவை

 

இதமான உணவு புருஷ வளர்ச்சிக்கு காரணம். இதமற்ற உணவு நோய்க்கு காரணம் – ஆத்ரேயர்.
நம்மில் பலர் வாழ்வதற்காக உண்கிறோம். சிலர் உண்பதற்காக வாழ்கின்றனர். எப்படியிருந்தாலும் வயிற்றை நிரப்பவும், பசியை போக்கவும் உணவை உண்டே ஆக வேண்டும். அந்த உணவு சுவையாக இருந்தால் நல்லது.
சுவைகளை ஆயுர்வேதம் ரசம் என்கிறது. ஆறு சுவைகளை விவரிக்கிறது. இந்த ரசங்கள் நீரில் அடிப்படையில் அமைந்தவை என்றும், உலகில் உணவுப் பதார்த்தங்கள் தோன்றிய போதே இச்சுவைகளுடன் தோன்றின என்கிறது ஆயுர்வேதம். இந்த சுவைகளை உணர்வது நாக்கு. இந்த ஆறு சுவைகள்.
இனிப்பு (மதுரம்)
புளிப்பு (அம்லா)
உப்பு (லவணா)
உரைப்பு (காட்டு)
கசப்பு (திக்தா)
துவர்ப்பு (கஷாயா)
இனிப்பு- பூமி, நீர் – இந்த இரண்டு மகா பூதங்களடங்கியது இனிப்புச் சுவை. இனிப்புச் சுவை உள்ளவை – அரிசி, பருப்பு, வெல்லம், சர்க்கரை, பால், தேன், கிழங்குகள், முட்டைகள், மாம்பழம், வாழைப்பழம், நெய் போன்றவை. கபதோஷ கோளாறுகளில் இனிப்பை தவிர்க்க வேண்டும். இனிப்பு வாயுவை தணிக்கும். கபத்தை வளர்க்கும்.
புளிப்பு- இந்த சுவை பூமி, நெருப்பு பூதங்களால் ஆனது. வாதத்தை சாந்தப்படுத்தி, கபத்தையும், பித்தத்தையும் அதிகரிக்கும். எலுமிச்சை, தக்காளி, புளி, நெல்லிக்காய், சாத்துக்குடி, ஆரஞ்ச் பழ வகைககள், தயிர், மாங்காய் இவை புளிப்பு சுவைக்கு உதாரணங்கள்.
உப்பு- இந்த சுவை பித்தத்தையும், கபத்தையும் வளர்க்கும். நெருப்பு, நீர் பூதங்களால் ஆனது. உதாரணங்கள் – அப்பளம், ஊறுகாய்.
உரைப்பு- இந்த காரச்சுவை வாயுவும் நெருப்பும் சேர்ந்த கலவை. வாதத்தையும் பித்தத்தையும் அதிகரித்து, கபத்தை கட்டும். மிளகாய், மிளகு, இஞ்சி, பூண்டு, வெங்காயம் இவை இந்தச் சுவைக்கு உதாரணங்கள்.
கசப்பு- ஆகாயமும், வாயுவும் கலந்த சுவை. வாயுவை தூண்டி, கப பித்தத்தை குறைக்கும். பாகற்காய், வெந்தயம், மஞ்சள், மசாலாக்கள், பசலைக்கீரை – இவை இந்த சுவைக்கு உதாரணங்கள்.
துவர்ப்பு- பூமியும் வாயுவும் இணைந்த சுவை. பித்தத்தையும், கபத்தையும் குறைக்கும். இந்த சுவையுள்ள உணவுகள் – பருப்புகள், தேயிலை, முட்டைகோஸ், காலிப்ளவர் போன்றவை.

உணவு நலம் நவம்பர் 2011

சிக்கரி

 

சிக்கரி

காப்பியின் நண்பன் சிக்கரி

சிக்கரி என்பதை எல்லோரும் அறிந்துள்ள காரணம், அதற்கும் காப்பிக்கும் உள்ள தொடர்பால் தான். காப்பியுடன் கலந்தும், காப்பிக்கு பதிலாகவும், தனியாகவும் சிக்கரி பயன்படுகிறது. காப்பி பானத்திற்கு சிக்கரி ஒரு வித கசப்பை உண்டாக்குகிறது இந்த ருசி பலருக்கு பிடித்தமானது.
சிக்கரி பழைய நூல்களில் குறிப்பிடப்பட்ட தொன்மையான தாவரம். ஃபிரான்னால் நெப்போலியன் ஆண்ட போது, காப்பிக்கு மாற்றாக, காப்பியில் கலப்படமாக சிக்கரி உபயோகிக்கப்பட்டது. அமெரிக்காவின் சிறைச்சாலைகளில் சிக்கரி செடியின் வேர் காப்பிக்கு பதிலாக உபயோகப்பட்டது. சிக்கரிவேர் ஜரோப்பாவிலும் காப்பிக்கு பதிலாக உபயோகிக்க சிக்கரி பயிரிடப்பட்டது. சிக்கரியை காப்பிக் கொட்டைகளுடன் கலந்து உபயோகிப்பது இந்தியாவில் பிரசித்தம். சிக்கரி 3 அடி வளரும் செடி. நீல நிறப்பூக்கள் உடையது பூக்கள் தினமும் ஒரே நேரத்தில் மலரும், மூடிக்கொள்ளும். இதன் வேர் நீளமாகவும், கெட்டியாகவும் இருக்கும். இந்த வேர்தான் காய வைக்கப்பட்டு, வறுத்து பொடியாக்கி, காப்பிக்கு பதிலாக உபயோகிக்கப்படுகிறது. காப்பியின் இருக்கும் காஃபின் சிக்கரியில் இல்லை. காப்பிக் கொட்டைகளை விட, வறுத்த சிக்கரியின் மணமும் சுவையும் இல்லை. காப்பியில் 30 சதவிகித சிக்கரியை கலப்பது காப்பிப்பொடி தயாரிப்பாளர்களின், வழக்கம். இதனால் நீங்கள் குடிக்கும் காப்பியின் காஃபின் அளவு குறைகிறது. சிலர் முழுச்சிக்கரி பொடியையே விரும்புகின்றனர். தவிர சிக்கரி காப்பியை விட தண்ணீருடன் நன்கு கலக்கும். இதனால் குறைந்த அளவு சிக்கரி உபயோகித்தால் போதும். காப்பியை விட சிக்கரி சிக்கனமானது.
பயன்கள்
காப்பிக்கு பதிலாக அல்லது கலந்து உபயோகிக்கலாம்.
இரத்தத்தை சுத்திகரித்து, கல்லீரலை ஆரோக்கியமாக்கும்.
இதன் இலைகள் சலாட் தயாரிக்க உதவும். ஃபிரான்ஸில் இது சலாடுகள் எனப்படும். பச்சையாகவே இலைகளை உண்ணலாம்.
வேர்கள் வேகவைக்கப்பட்டு, வெண்ணையுடன் உட்கொள்ளப்படுகிறது. காய்கறி போலவும் பயன்படும்.
பொடியாக்கப்பட்ட வேர்கள் டானிக்காக, சிறுநீர் சுலபமாக போக, மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கும் பயன்படும். தவிர கல்லீரல், பித்தப்பை நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
சிக்கரிப்பூ, ஜெர்மனியில் டானிக்காக, பசியை தூண்ட, பித்தப்பை கற்களை நீக்க, சைனஸ், வயிற்றுக் கோளாறு மற்றும் காயங்களுக்கும், பயன்பட்டு வந்திருக்கிறது.
இதில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணைகள் வயிற்றுப் பூச்சிகளை அழிக்க வல்லது. இதனால் கால்நடை உணவுகளில் சிக்கரி பயன்படுகிறது. கால் நடை வயிற்றுப்பூச்சிகளை அழித்து விடும்.
1970 ல் சிக்கரி வேரில் 20% இன்சுலின் எனும் மாவுச்சத்து போன்ற கூட்டுசர்க்கரை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கலப்பான முறையால் சிக்கரி செடிகள் பயிர்களில் இந்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் படியான புதிய ரகங்கள் உண்டாக்கப்பட்டன. இனூலின் செயற்கை சர்க்கரை உற்பத்தியில் பயன்படும். தவிர இனூலின் நார்ச்சத்து மிகுந்த பொருளாக பிரசித்தி பெற்று வறுகிறது.
சில பீர் தயயரிப்பாளர்கள் வறுத்த சிக்கரியை பீரின் சுவையை அதிகரிக்க உபயோகிக்கின்றனர்.
சிக்கரியை அதிகமாக காப்பிக்குபதில் உபயோகித்தால், கண்களின் பார்வை பாதிக்கப்படும் என்று பலர் கருதுகின்றனர். தற்போதை விஞ்ஞானத்தில், இந்த கருத்து இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
சிக்கரியில் கசப்பு பொருட்கள், கோலின், சர்க்கரை, இன்சுலின், பொட்டாசியம், கால்ஸியம் மற்றும் அயச்சத்து உள்ளன.
இதன் பொதுவான குணங்கள் – உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும், இரத்த சர்க்கரை அளவை குறைக்கும். பித்த நீர் சுரக்க உதவும். மிருதுவான மலமிளக்கி. வேகவைத்த வேரில் உள்ள இன்சுலின, ஸ்டார்ச்சசை விட, நீரிழிவு நோயாளிக்கு உகந்தது.

உணவு நலம் நவம்பர் 2011

ரோஜா குல்கந்து

ரோஜா குல்கந்து

குண நலன்கள்

பூக்களின் ராணி ரோஜா தான். அதன் அழகும் நறுமணமும் எல்லோரையும் கவரும். காதலர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்வதும் ஒற்றை ரோஜா தான். ரோஜா மலர் மருத்துவ குணங்களும் நிறைந்தது.
பல வித வண்ணங்களில் கிடைக்கும் ரோஜாப் பூ, உடலுக்கு குளிர்ச்சியை ஊட்டவல்லது. இதமான மலமிளக்கி, கண்களுக்கு ரோஜா இதழ்களால் தயாரிக்கப்படும் பன்னீர் நல்லது. ஜீரண சக்தியை தூண்ட, உடலுக்கு வலிமை அளிக்க, புத்தி கூர்மையை கூட்ட, உடலில் துர்வாசனையை போக்க என்று நீளும் ரோஜாவின் மருத்துவ பயன்களைப்பற்றி தனியாகவே எழுதலாம். இங்கு ரோஜா இதழ்களால் தயாரிக்கப்படும் "குல்கந்து" டானிக்கைப் பற்றி பார்ப்போம். குல்கந்து கடைகளில் கிடைத்தாலும், நாமாகவே வீட்டில் தயார் செய்து கொள்வது உத்தமம். பல கலப்படங்கள் செய்யப்படுவதால், தரமான குல்கந்து கிடைப்பது கடினம்.
வீட்டிலேயே தயாரிக்கும் முறை
முறை 1
சிவப்பு ரோஜா இதழ்களை சேகரித்துக் கொள்ள வேண்டும். பல ரக ரோஜாப் பூக்கள் கிடைத்தாலு, குல்கந்து செய்ய சாதாரண ஒரிஜினல் ரோஜா விதை ஸிஷீsணீ சிமீஸீtவீயீஷீறீவீணீ என்ற ரகப் பூக்கள் தான் பொதுவாக பயன்படுகின்றன. நல்ல, தரமான, நிறமுடைய நன்கு பூத்த, பெரிய பூக்களிலிருந்து இதழ்களை ஆய்ந்து கொள்ளவும்.
இதழ்களை நன்கு கழுவி, சுத்தம் செய்து, ஈரம் போக துடைத்து / நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும்.
சேகரித்த இதழ்களின் எடையைப் போல, மூன்று மடங்கு கற்கண்டை எடுத்துக் கொள்ளவும்.
இதழ்களையும், கற்கண்டையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து இடித்துக் கொள்ளவும்.
நன்றாக லேஹிய பக்குவம் வரும் வரை இடிக்கவும்.
இந்த லேகியத்தை ஒரு வாயகன்ற பீங்கான் / கண்ணாடி ஜாடியில் போடவும்.
ஜாடியில் போட்ட லேகியத்தின் அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு சுத்தமான தேனை விட்டு நன்றாக கிளறவும்.
குல்கந்து தயார். ஒவ்வொரு தடவையும் உபயோகிக்கு முன் நன்றாக கிளறவும்.
முறை 2
இந்த முறையில், சுத்தம் செய்யப்பட்ட இதழ்களுடன், அதே அளவு சர்க்கரை சேர்த்து, வாயகன்ற ஜாடியில் வைக்கவும்.
இந்த ஜாடியை தினமும் வெய்யிலில் 6-7 மணி நேரம் வரை 3 அல்லது 4 வாரங்கள் வைத்து வரவும்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள், மரக்கரண்டியால், ஜாடியில் உள்ள சர்க்கரை + இதழ்களை நன்கு கிளறி விட வேண்டும்.
மூன்று / நான்கு வாரங்கள் கழிந்த பின், எடுத்துக் கொண்ட ரோஜா இதழ்களில் எடையில் 8 ல் 1 பாகம் எடை அளவில் பவழம் அல்லது முத்தின் களிம்பை சேர்க்க வேண்டும். இந்த களிம்பு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
கூடவே 8 ல் 1 பங்கு எடையில், ஏலக்காய் பொடி, வெள்ளி ரேக்கு (ஷிவீறீஸ்மீக்ஷீ யீஷீவீறீ) சேர்க்கலாம்.
இவற்றை சேர்த்த பிறகு ஜாடியை வெய்யிலில் வைக்க வேண்டாம். நன்றாக கிளறி, குல்கந்தை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
அளவு:- சிறுவர்கள் 1/2 தேக்கரண்டியும் பெரியவர்கள் 1 தேக்கரண்டியும், தினமும் காலை மாலை சாப்பிட்டு வரலாம்.
குல்கந்தின் பயன்கள்
1. உடலின் அதிக பித்த அளவை குறைத்து சீராக்குகிறது.
2. வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும்.
3. வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். வெள்ளப்போக்கையும் குறைக்கும்.
4. பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி). தவிர குல்கந்து ஆண்மை பெருக்கி. உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. எனவே தான் காதலர்கள் மற்றவர்களை விட, ரோஜாவை பயன்படுத்து கிறார்கள் போலும்!
5. மலமிளக்கியாக செயல்பட்டாலும், குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது.
6. பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான டானிக் – மருந்து
7. முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.

உணவு நலம் டிசம்பர் 2011

Friday, 24 February 2012

ப்ரூட் சாலட்

 

இந்த மாதங்களில் அதிகமாகக் கிடைக்கும் மாம்பழம், தர்பூசணி, கிர்ணிப் பழம், முலாம்பழம், நுங்கு இவைகளைக் கொண்டு எளிதான சுவையான பழக் கலவை தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

தோல் சீவி சிகப்பான பகுதியை துண்டுகளாக்கிய தர்பூசணி – 1 கப்

கிர்ணிப்பழம் – 1 கப்

முலாம் பழம் – 1 கப்

இனிப்பான நார் இல்லாத மாம்பழம் – 1 கப்

இளசாக உள்ள நுங்கு துண்டுகள் – 1 கப்

தேன் – 1 டேபிள் ஸ்பூன்

தேவையானால் கஸ்டர்டு பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

பால் – 1 கப்

(இது தவிர வாழைப்பழத் துண்டுகள் – 1 கப், கொட்டையில்லாத திராட்சை – 1 கப், பப்பாளி (இனிப்பானது) துண்டுகள் – 1 கப், காஸ் மீது வைத்து அரை நிமிடம் சுட்டு, தோல் நீக்கி, குறுக்கே வெட்டி, விதைகள் நீக்கி துண்டுகள் போட்ட இனிப்பான பெங்களூர் தக்காளி – 1 கப் என்று எந்தப் பழம் சீப்பாக கிடைக்கிறதோ, அதை எடுத்துக்கொள்ளலாம்.)

செய்முறை:

* எல்லாவற்றையும் சேர்த்து நறுக்கி ப்ரிட்ஜ்ஜில் ட்ரேயில் வைக்கவும்.

* பால் சூடாக்கி, குளிர்ந்த பால் கரைத்த கஸ்டர்டு பவுடரை அதில் ஊற்றி அடி பிடிக்காமல் கொதித்ததும் நன்கு ஸ்பூனால் குழைத்து ஆறியதும் தேன், வெனிலா எசன்ஸ் சேர்த்து ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.

* குழந்தைகளுக்குத் தேவையான போது பழக் கலவையின் மீது – 1 ஸ்பூன் கஸ்டர்ட் போட்டு கிண்ணத்தில் கொடுத்தால் எல்லா பழங்களையும் சாப்பிடுவார்கள்.

* சுமார் – 15 குழந்தைகள் பங்குபெறும், பிறந்தநாள் விழா அல்லது கெட் டு கெதர் பார்ட்டிக்கு – 2 மாம்பழம், – 1 கிர்ணிப்பழம், – 1 முலாம் பழம், – 4 தக்காளி, 100 – கிராம் திராட்சை, – 10 நுங்கு போதும். குறைந்த செலவில் சத்தான சுவையான விலை குறைவான சாலட் ரெடி. தோல் சீவிக் கொடுத்து விட்டால் அவர்களே தயாரித்து விடுவார்கள்.

தயிர் உருளை

 

பேபி பொட்டேடோஸ் பிடிக்காதவங்க யாராச்சும் இருப்பாங்களா..? தயிரோட சேர்ந்த உருளைகிழங்கு மசாலாவா.. சொல்லவே வேண்டாம் எக்ஸ்ட்ரா இரண்டு பூரியோ, சப்பாத்தியோ சொல்லாமலே உள்ளே போகும். ஒங்க வீட்டு குட்டீஸ்களுக்கும் ரொம்ப பிடிக்கும். செஞ்சு குடுங்க… அடம் பண்ணாம சாப்பிடுவாங்க!

தேவையான பொருட்கள்:

சிறிய உருளை கிழங்கு – 1/2 கிலோ

பெரிய வெங்காயம் – 2

சற்று புளித்த தயிர் – 1/2 கப்

இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துகொள்ளுங்கள்.

* வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கவும்.

* எண்ணெய் காய வைத்து வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

* பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

* பின்னர் உருளைக்கிழங்கு சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில் வைத்து வதக்கவும்.

* பின்னர் கரம் மசாலா, தயிர் சேர்த்து சுருள கிளறி இறங்குங்கள்.

* பிரட், பூரி, சப்பாத்திக்கு சூப்பர் சைடு டிஷ் இது.

மால்ட் புட்டிங்

 

அவசர யுகத்தில் பற பறக்கும் குழந்தைகளுக்கு சரியான போஷாக்கு கிடைப்பதில்லையே என புலம்பும் தாய்மார்களே… காலையில் சாப்பிடாமல் பறக்கும் குழந்தைகளுக்கு சட்டென சாப்பிட கொடுக்கலாம். மாலை வேளையில் ஸ்கூல் முடிந்து ட்யூஷன் அல்லது விளையாட்டு வகுப்புக்குப் போகும் குழந்தைகளுக்கு இது ஒரு போஷாக்கான வரப்பிரசாதம்!

தேவையான பொருட்கள்:

கலவை மாவு – 2 டேபிள் ஸ்பூன்

கெட்டியாகக் கரைத்த வெல்லம் அல்லது பனைவெல்லம் – 2 டீ ஸ்பூன்

நெய் – 2 டீ ஸ்பூன்

மஞ்சள் வாழைப்பழம் – 1 அல்லது முட்டை 1

ஏலப்பொடி – 1 சிட்டிகை

செய்முறை:

* அதிகம் பழுக்காத வாழைப்பழத்தை வட்ட வட்ட வில்லைகளாக நறுக்கவும்.

* மாவைத் திட்டமாக நீர் சேர்த்துக் கெட்டியான கரைசலாக்கவும்.

* ஒரு கப் தண்­ணீரைக் கொதிக்கவிடவும்.

* அதில் வெல்லக் கரைசலை விட்டு கொதிக்கவிடவும்.

* கொதிக்கும்போது அத்துடன் மாவுக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும்.

* ஏலப்பொடி சேர்க்கவும்.

* கெட்டியாகும்போது பாதி நெய் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும்.

* வெந்த பக்குவத்தில் மீதி நெய்யை விட்டுக் கிளறவும்.

* இறக்கிய உடன் அகலமான தட்டில் கொட்டி அதன் மீது வாழைப்பழத் துண்டங்களை வைத்து உடனடியாக மூடி வைக்கவும்.

* முட்டை சாப்பிடுபவர்கள் வேக வைத்த முட்டையை நீளவாக்கில் ஸ்லைஸ் செய்து அந்த வில்லைகளை வாழைப்பழத் துண்டங்களுக்குப் பதிலாக வைத்து அலங்கரிக்கலாம்.

* அல்லது ஒரு வாழைப்பழத் துண்டம் மற்றும் ஒரு முட்டை ஸ்லைஸ் என்றும் அலங்கரிக்கலாம்.

* ஆறிய பிறகு நல்ல மணத்துடன் சுவையான சத்துமிக்க இனிப்பு தயார்!

* கார்போஹைட்ரேட், புரோட்டீன், கொழுப்புச் சத்து ஆகிய அனைத்தும் முறையே இருப்பதால் முழு உணவை உண்ட திருப்தி, உடனடி சக்தி!

Saturday, 18 February 2012

சுவையான இறால் மசால்

 

வெள்ளைசாதம், பிரியாணி, நெய் சோறு, சப்பாத்தி, பரோட்டாவோடு சேர்த்துச் சாப்பிட ஏற்ற உணவு சுவையான இறால் மசால்

தேவையான பொருட்கள்:

  • இறால் – 1/4 கிலோ
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • தக்காளி – ஒன்று (பெரியது)
  • பூண்டு – 7 பல்
  • மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
  • உப்பு – தேவைக்கேற்ப
  • அரைக்க:-
  • தேங்காய்துருவல் – 3/4 கப்
  • காய்ந்த மிளகாய் – 8 எண்ணம் அல்லது 1 1/2 – 2 டீஸ்பூன்(காரத்திற்கு ஏற்ப)
  • நல்ல மிளகு – ஒரு டீஸ்பூன்
  • சோம்பு – ஒரு டீஸ்பூன்
  • கசகசா – 3/4 டீஸ்பூன்
  • தாளிக்க:
  • எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  • கறிவேப்பிலை – 2 கீற்று
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
  • சோம்பு – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

  • இறாலை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறிய வட்டங்களாக நறுக்கி கொள்ளவும், தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும், பூண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய்துருவல், காய்ந்தமிளகாய், சோம்பு, நல்லமிளகு, கசகசா ஆகியவற்றை நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு அது சூடானதும் அதில் தாளிக்க வேண்டியவற்றை கறிவேப்பில்லை, சீரகம், வெந்தயம், சோம்பு இவற்றை தாளிக்கவும்.
  • பின்னர் அதில் சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்த்தூள் இவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.
  • சிறிது நேரத்தில் இறாலைப் போட்டு வதக்கவும், 5 நிமிடம் கழித்து அரைத்த விழுதினை போட்டு நன்றாக கிளறி விடவும்.
  • எல்லாமும் கலந்து இருக்கும்மாறு தேவையான உப்பு போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி மூடிப்போட்டு வேகவைக்கவும். மிதமான தீயில் தண்ணீர் வற்றி கெட்டியாகும் நேரம் இறக்கவும். இப்போது இறால் மசா

Friday, 17 February 2012

சிக்கன் லெக் பீஸ் ப்ரை

 

யாழ்வின்குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானது சிக்கன். புரதச்சத்து நிறைந்தது. அதுவும் லெக் பீஸ் வறுவல் என்றால் ஆர்வமுடன் கையில் பிடித்து சாப்பிடுவார்கள். எளியமுறையில் செய்யலாம். தேவையான பொருட்கள்

சிக்கன் லெக் – ஒரு கிலோ

இஞ்சி பூண்டு விழுது – மூன்று டீ ஸ்பூன்

தயிர் – கால் கப்

மஞ்சள் பொடி – ஒரு டீ ஸ்பூன்

மிளகாய்பொடி – மூன்று டீ ஸ்பூன்

கரம்மசாலா – மூன்று டீ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு.

ஆரஞ்ச் கலர் பொடி – சிறிதளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

லெக் ப்ரை செய்முறை

சிக்கன் கடைகளில் லெக் பீஸ் தனியாக கேட்டால் கிடைக்கும். அதை வாங்கி வந்து நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தூள், மிளகாய்தூள், கரம் மசாலா, தயிர், கலர்பொடி, உப்பு போன்றவைகளைப் போட்டு நன்கு பிரட்டவும். கோழியுடன் எல்லாவற்றையும் நன்கு கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும். பின் ல் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொரித்தெடுக்கவும். தயிர் சேர்ப்பதால் கோழி சட்டியில் ஒட்டும். அதனால் போட்ட சிறிது நேரத்தில் திருப்பி திருப்பி விடவும்.. நன்கு பொரித்தெடுக்கவும். சுவையான காரமான சிக்கன் லெக் ப்ரை ரெடி.

Thursday, 16 February 2012

முந்திரி முறுக்கு

 

தேவையான பொருள்கள்:

பதப்படுத்திய பச்சை அரிசிமாவு – 1/2 கிலோ

முந்திரி பருப்பு – 100 கிராம்

நெய் – 3 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* முந்திரி பருப்பை பத்து நிமிடம் ஊற வைத்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

* பச்சரிசி மாவுடன் உருக்கிய நெய், உப்பு, விழுது சிறிது நீர் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்து முறுக்கு அச்சில் பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

* சுவையான சத்தான முறுக்கு ரெடி.

காரச்சேவு

 

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 கிலோ

டால்டா – 100 கிராம்

அரிசி மாவு – 100 கிராம்

மிளகு தூள் – 2 டீ ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

சோடா மாவு, பெருங்காயப்பொடி – 1 டீ ஸ்பூன்

நசுக்கிய பூண்டு – சிறிதளவு

எண்ணெய் – 500 கிராம்

செய்முறை:

* எண்ணெய் தவிர அனைத்து பொருள்களையும் சிறிது நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காரச்சேவு அச்சில் பிழிந்து வெந்தவுடன் பிரித்து கொள்ளவும்.

முள்ளங்கி சப்பாத்தி

 

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் காய்கறிகளும், மற்ற பொருட்களும் உணவுக்கு சுவை ஊட்டுவது மட்டுமின்றி நம் வாழ்வை ஆரோக்கியம் மிகுந்ததாகவும் மாற்றுகின்றன. உடல் பருமனாக உள்ளவர்கள் அன்றாடம் முள்ளங்கி உட்கொள்வதை வழக்கமாகக் கொண்டால் அவர்கள் உடல் பருமன் குறைய வாய்ப்புண்டு. ஏனெனில் கெட்ட கொழுப்பை கரைத்து வெளியே தள்ளும் சக்தி வாய்ந்தது முள்ளங்கி. அவ்வகையில் முள்ளங்கி சேர்த்துச் சப்பாத்தி செய்தும் சாப்பிடலாம். ஓமம் சேர்ப்பதால் வாசம் நிறைந்த சத்தான சப்பாத்தி ரெடி!

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி – 2

கோதுமை மாவு – 1 கப்

சிவப்பு மிளகாய்த்தூள் – 1 டீ ஸ்பூன்

ஓமம் – 1 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்

தனியாத் தூள் – 1/2 டீ ஸ்பூன்

எண்ணை – 8 டேபிள் ஸ்பூன்

உப்பு – 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

* முள்ளங்கியை நன்கு கழுவி பூத்துருவலாக துருவிக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்த மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத் தூள், ஓமம் சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கி கோதுமை மாவுடன் சேர்க்கவும்.

* துருவிய முள்ளங்கி, உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து தேவையானால் சிறிது தண்­ணீர் சேர்த்து (முள்ளங்கித் துருவலிலேயே தண்­ணீர் இருக்குமாதலால் தேவையானால் மட்டுமே தண்ணீ­ர் சேர்க்கவும்) சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்.

* பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக்கி சப்பாத்தியாகத் தட்டி, ஒரு தோசைக் கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் போட்டு இரு பக்கமும் எண்ணை ஊற்றி திருப்பிவிட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்பு:

சப்பாத்தியின் சுவை மற்றும் ஆரோக்கிய சுவையை அதிகரிக்க கேரட் துருவலையும், முள்ளங்கித் துருவலுடன் சேர்க்கலாம்.

முள்ளங்கியையும் ஓமத்தையும் இணைத்து சப்பாத்தி செய்து உடலாருக்கு வழங்குவதானது சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சமையல்தானே!

30 வகை அவசர சமையல் 30 type emergency Cooking


செய்வது சுலபம்... சுவையோ அபாரம்!

30 வகை அவசர சமையல்

"குடும்பத்தைப் பிரிஞ்சு வந்து, மேன்ஷன், ஹாஸ்டல்னு வாழற பேச்சிலர்ஸையும் கொஞ்சம் நினைச்சுப் பார்க்கக் கூடாதா? அதிக வேலையில்லாம... ஈஸியா சமைக்கற மாதிரியான ரெசிபிகளை எங்களுக்காகத் தரக்கூடாதா?"

- அடிக்கடி தொலைபேசி மற்றும் கடிதங்கள் வாயிலாக வந்துகொண்டே இருக்கும் இப்படிப்பட்ட கோரிக்கைகளை ஏற்று... இங்கே சமைக்கப்படுகிறது 30 வகை அவசர சமையல்!

லேட்டா தூங்கி, லேட்டா எழுந்தாலும், லேட்டஸ்டா சமைக்கணும்; காய்கறி நறுக்குறது, பாத்திரம் கழுவறதுனு நிறைய வேலை வைக்கக் கூடாது; சிம்பிளா சமைச்சாலும், டேஸ்ட், சத்து இதெல்லாம் குறையக்கூடாது; தைரியமா ஃப்ரெண்ட்ஸை கூட்டிட்டு வந்து மனசார பரிமாறணும்.

Tuesday, 14 February 2012

மனசையும் `ஸ்மார்ட்'டாக வைக்கும் உணவு வகைகள்!

 

டேஸ்டி ராகி பால்ஸ்

தேவை

கேழ்வரகு மாவு 1 கப்

வெல்லப்பொடி 1/2 கப்

பொடித்த வேர்க்கடலை 1/2 கப்

வறுத்த எள்ளு 1 மேஜைக்கரண்டி

உப்பு ஒரு சிட்டிகை

சமையல் எண்ணெய் 1 தேக்கரண்டி

செய்முறை:

1. கேழ்வரகு மாவுடன் ஒரு சிட்டிகை உப்பை நன்கு கலந்து, திட்டமாக தண்ணீர் தெளித்து அடை மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.

2. தோசைக்கல்லை சூடாக்கி அதில் மாவை மெல்லிய அடைகளாகத் தட்டி வெந்த பின் எடுத்து வைக்கவும்.

3. அடைகள் ஆறிய பிறகு சிறு துண்டங்களாக பிய்த்து மிக்ஸியில் இட்டு கரகரப்பாக அரைத்து வைக்கவும். வேர்க்கடலை மற்றும் வெல்லத்தை தனித்தனியே மிக்சியில் அரைத்து வைக்கவும்.

4. கடைசியாக கேழ்வரகு அடை, வெல்லம், வேர்க்கடலை மூன்றையும் சேர்த்து மிக்சியில் ஒரு சேர சுற்றவும்.

5. இந்தக் கலவையை உருண்டைகளாக உருட்டி, வறுத்த எள்ளின் மீது புரட்டி எடுக்கவும்.

இந்த டேஸ்டி பால்ஸ் எக்கச்சக்கமான சத்துக்களை உள்ளடக்கியது. எள்ளில் அபரிமிதமான சத்து உள்ளதோடு நன்கு சதை பிடிப்பாக உடம்பையும் வைத்திருக்கும்.

இரும்புச் சத்து எக்கச்சக்கமாக உள்ளது. நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய வைக்கும் அற்புத ரெசிபி இது.

ராகி எங்கே கிடைக்கும்?

சுத்தப்படுத்தி மாவாக அரைக்கப்பட்ட ராகி மாவு சென்னையில் அண்ணாசாலை காதிபவனில் அருமையாகக் கிடைக்கிறது. மற்ற ஊர்களில் ராகி தாராளமாகக் கிடைக்கிறது.

இதுமட்டுமல்ல ஜென்டிமேன்! இதோ மற்றும் ஒரு மலிவான ஐட்டம்.


தினை மாவு
எள்ளு புட்டிங்

தேவை

தினைமாவு -1 கப்

சுத்தப்படுத்திய எள்ளு- 1 கப்

வெல்லப்பொடி -1 கப் அல்லது தேன்

- 1 மேஜைக்கரண்டி

கிஸ்மிஸ் பழம் - 10
பொடித்த பாதாம் பருப்பு - 1 தேக்கரண்டி
பால் -1 கப்

செய்முறை:

தினைமாவுடன் வெல்லப்பொடி, எள்ளு ஆகியவைகளை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கலக்கவும். தேவையானால் சிறிது பால் தெளித்துஉதிரி உதிரியாக கலக்கவும்.

இத்துடன் கிஸ்மிஸ் பழங்கள் மற்றும் பொடித்த பாதாம் பருப்பைக் கலந்து பரிமாறவும். சூப்பர் டேஸ்ட்டான சமைக்காத, இயற்கை வளம் மிக்க பக்குவம் இது. திகட்டாத தெள்ளமுது!

மருத்துவக் குணங்கள்

உறுதியான உடல்கட்டைப் பெறலாம். உடல் சோர்வு இல்லாமல் தொடர்ந்து வேலை செய்யும் சக்தியை அளிக்கும். விளையாட்டு வீரர்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.


எள்ளு சட்னி

தேவை

சுத்தப்படுத்தி வறுத்தெடுத்த எள்ளு - 2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

சிறிய தக்காளி - 1

மிளகாய் வற்றல் - 2

புளி - சுண்டைக்காய் அளவு

தேங்காய்த்துருவல் 2 தேக்கரண்டி
உப்பு தேவைக்கேற்ப

சமையல் எண்ணெய் 1 தேக்கரண்டி
தாளிதம் செய்ய கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு.

செய்முறை

வாணலியில் எண்ணெயை சூடாக்கி உளுத்தம்பருப்பு, மிளகாய்வற்றல், தக்காளி, புளி, தேங்காய்த்துருவல் ஆகியவற்றை தனித்தனியே வதக்கவும்.

மிக்சியில் மிளகாய்வற்றல், உளுத்தம்பருப்பு, புளி ஆகியவற்றுடன் உப்பை சேர்த்து சுற்றி, அத்துடன் தக்காளி, எள்ளு, தேங்காய்த்துருவலையும் சேர்த்து மைய அரைத்தெடுத்து தாளிதம் செய்யவும்.

நெய் விட்டு சாதத்துடன் பிசைந்து சாப்பிட இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் தொட்டுக் கொள்ள சுவை பிரமாதமாக இருக்கும்.

இதென்ன எள்ளு புராணம் பாடுகிறேன் என்று கேட்பது எனக்குக் கேட்கிறது.

* எள் உள்ளுக்கு மட்டும் ஆரோக்கியம் இல்லை; மாறாக அழகை பாதுகாக்கவும் செய்கிறது.

* சிறுவயது முதல் எள்ளெண்ணெயை அதாங்க நல்லெண்ணெய் தலைக்குத் தடவி வர முடி `கருகரு'வென்று வளரும்.

* நல்லெண்ணெய் குளியல் உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்கு குளுமையூட்டி, சருமத்தைப் பளபளப்பாக்கும்.

* நல்லெண்ணெயில் வாய் கொப்பளித்தால் வாய் ரணம், குணமாகி ஈறுகளைப் பலப்படுத்தும்.

இன்னமும் இளமை தெறிக்கும் கட்டுடலுக்குச் சொந்தமான அந்த பிரபல நடிகரின் அபிமானத்தைப் பெற்றது இந்த எள்ளு என்றால் வியப்பாக

இருக்கிறதா? தினசரி அவருடைய டயட்டில் எள் இடம் பெறுகிறது என்ற தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். `கிண்'ணென்ற உடல்கட்டைப் பெற எள்ளுக்கே உங்கள் ஓட்டு.


இன்னமும் ஒரு எளிய ரெசிபி. மிகவும் விலை மலிவான பொருள் இது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பால்ஸ்

இந்த செழிப்பான கிழங்குகளைக் கொண்டு உடலை உரமாக்கலாம் வாங்க!

தேவை

சர்க்கரைவள்ளிக் கிழங்கு 250 கிராம்,

வெல்லம் 50 கிராம், நெய் - 1 தேக்கரண்டி, ஏலப்பொடி 2 சிட்டிகை.

செய்முறை

வள்ளிக்கிழங்கை நன்கு வேக வைத்து, மேல் தோல் மற்றும் நடுவே இருக்கும் நாரை நீக்கி நன்கு மசிக்கவும். இதோடு சுத்தமான வெல்லம், நெய், ஏலப்பொடி சேர்த்து கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும். செம டேஸ்ட்டான அதிரடி திடீர் தயாரிப்பு. கிழங்கு அதிகமாகக் கிடைக்கும் போது வாங்கி வற்றலாக்கி சேமித்து வைக்கலாம். அடிக்கடி இதை ருசித்து வந்தால் கட்டுடல் `மிஸ்டர்'களுக்குச் சொந்தம்!

Monday, 13 February 2012

பாசிப்பருப்பு பக்கோடா

 

பாசிப்பருப்பில் நிறைய புரோட்டீன் இருப்பதால் அனைவரும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பாசிப்பருப்பில் பாயசம் வச்சு சாப்ட்ருப்பீங்க.. பக்கோடா செஞ்சிருக்கீங்களா… அதீத சுவையுடன் சும்மா மொறுமொறுனு பிரமாதமா இருக்கும்.. எங்க செஞ்சு அசத்துங்க பாப்போம்…

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 1/2 கப்

பெரிய வெங்காயம் – 1 1/2

பச்சைமிளகாய் – 2

கறிவேப்பிலை – ஒரு கொத்து

இஞ்சி – அரை இன்ச்

தனியா – 1 டீஸ்பூன்

உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:

* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

* பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* பாசிப்பருப்பு ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் தனியா, உப்பு, இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

* அரைத்த பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு பிசைந்து கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெயில் உதிர்த்து விடவும்.

* இரண்டு பக்கமும் வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.

* சுவையான வித்தியாசமான பாசிப்பருப்பு பக்கோடா தயார்.

பொரி விளங்கா உருண்டை

 

நொறுக்குத் தீனின்னா சிப்ஸ், பப்ஸ்தான்னு இல்லீங்க… இந்த மாதிரி பொரி விளங்கா உருண்டையுந்தான்… இப்டியொரு தின்பண்டம் இருக்குறதே பல குழந்தைகளுக்கு தெரியாது.. உடலுக்கு சத்தான, மிகவும் ருசியான இதை வீட்லயே ரொம்ப சுலபமாக செய்யலாம்… செஞ்சு கொடுத்து பாராட்டை அள்ளிக்கோங்க…….

தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி – 1 படி (நன்றாக பொரிய வறுத்து அரைத்தது)

பொட்டுக்கடலை மாவு – 1/4 படி

தேங்காய் – 1 துருவியது

வெல்லப்பாகு தயாரிக்க:

வெல்லம் – 1 கிலோ

சுக்கு – ஒரு துண்டு

ஏலக்காய் – 4

செய்முறை:

வெல்லத்தை கொஞ்சம் தண்­ணீர் சேர்த்து சுக்கை தட்டி, ஏலக்காயை பிய்த்து போட்டு பாகு போல காய்ச்சி வடிகட்டி வைக்கவும்.

தேங்காய் துருவியதை நெய்யில் வறுத்து வைக்கவும்.

பின் அரிசிமாவு, பொட்டுக்கடலைமாவு, தேங்காய் அனைத்தும் கலந்து கொஞ்சம் வெல்லப்பாகை ஊற்றி உருண்டையாக பிடிக்கவும்.

சத்தான பொரி விளங்கா உருண்டை ரெடி.

சீனி அதிரசம்

 

தேவையான பொருட்கள்:

பச்சரிசி மாவு – 2 கப்

சர்க்கரை – 3/4 கப்

பால் – 1/4 கப்

ஏலக்காய்த்தூள் – 1/4 டீ ஸ்பூன்

நெய் – 2 டீ ஸ்பூன்

எண்ணெய் – பொரிக்க

செய்முறை:

* பச்சரிசி மாவில் ஏலக்காய்த்தூளை கலந்து வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு மூழ்குமளவு நீர் வைத்து கொதிக்க வைக்கவும்.

* கொதிக்க ஆரம்பித்ததும் பாலை ஊற்றவும்.

* சிறிது நேரத்தில் பொங்கும் போது மேலோடு அழுக்கை எடுக்கவும்.

* பின் சிறிது கிண்ணத்தில் நீர் வைத்து சர்க்கரையை அதில் விட்டு பார்த்தால் உருண்டையாக நிற்கும்.

* அப்பொழுது பாகை அடுப்பிலிருந்து இறக்கி மாவை கொஞ்ச கொஞ்சமாக போட்டு கிளறி நெய் கலந்து வைக்கவும்.

* மறுநாள் ஒரு கவரில் எண்ணெய் தடவி சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பின்குறிப்பு:

* பச்சரிசி மாவு என்பது அரிசியை ஊறவைத்து நீரில்லாமல் வடிகட்டி நிழலில் உலர்த்தி மிக்ஸியில் மாவாக்கவும்.

* மிகவும் நைசாக இல்லாமலும், கொரகொரப்பாக இல்லாமலும் இருக்கணும்.

* குறிப்பிட்டிருக்கும் 2 கப் பச்சரிசி மாவு ஊறவைத்து அரைத்த மாவுதான்.

* மாவை எண்ணெயில் பொரிக்கும் போது தடிமனாக இல்லாமலும், மெல்லியதாக இல்லாமலும் தட்டவும்.

* மாவு தளர்த்தியாக இருந்தால் மீண்டும் அரிசியை ஊறவைத்து அரைத்து போட்டு கிளறி வைக்கவும்.

* மாவை கிளறி வைத்து உடனே சுடுவதை விட 2 நாள் வைத்திருந்து சுட நல்லாயிருக்கும்.

* இந்த அளவில் 7 அதிரசங்கள் வரும்.

Thursday, 9 February 2012

வெங்காய மசாலா டிஷ்

 
 

தேவை:
பெல்லாரி வெங்காயம் – 1/4 கிலோ
உருளைக்கிழங்கு – 3
பட்டாணி – 100 கிராம்
தக்காளி – 4
நல்லெண்ணெய் – 50 கிராம்
வற்றல் – 6
Read more »

காய்கறிகளின் மருத்துவ குணங்கள்-புதினாக்கீரை

 
 
 
வயிற்றுவலி, வயிற்றுக்கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள்காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம், இயற்கையான குடும்பக்கட்டுப்பாடு திட்ட முறை ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை, புதினாக்கீரையாகும்.
Read more »

Wednesday, 8 February 2012

ஹோட்டலில் அசைவம் சாப்பிடுவீங்களா? உஷார்!

 
 
கணவன்மனைவி இருவரும் வேலைக்குப் போவது அதிகரித்து வருகிறது.இரண்டு பேரும்சம்பாதித்தால்தான் சமாளிக்க முடியும் என்ற நிலை.சில நாட்களில் சமைப்பதை விடவும்ஹோட்டலில் வாங்கிக் கொள்ளலாம் என்றே நினைக்கிறார்கள்.சும்மா ஒரு சேஞ்சுக்காக சாப்பிடலாம்என்று வருபவர்களும் உண்டு.இப்படி முடிவு செய்யும்போது பெரும்பாலானவர்கள்அசைவத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஹோட்டலில்கிடைக்கும் அசைவம் சுத்தமானதாக ,ஆரோக்கியமானதாக இருக்குமா? நான் பெரும்பாலும்அசைவத்தை தவிர்த்துவிடுவேன்.மற்ற உணவுகளை விட வெகு சீக்கிரம் கெட்டுப்போகும் தன்மைஅசைவ உணவுகளுக்கு உண்டு.விலை அதிகம் என்பதால் ஹோட்டல் வைத்திருப்போரும் விற்பனைஆகாவிட்டாலும் வீணாக்க விரும்ப மாட்டார்கள்.மிளகு நஞ்சை எடுத்துவிடும்என்பார்கள்.கொஞ்சம் அதிகம் சேர்த்து சூடாக்கி பணமாக்கி விடுகிறார்கள்.
 
போட்டி என்பதுநம்மவர்களுக்கு மிக பிடித்தமான விஷயம்.என் நண்பர் ஒருவர் போட்டி வாங்கி வந்து அவரேசமைத்து சாப்பிடுவார்.அசைவம் என்றால் மட்டும் தானே சமைத்து உண்ணும் பலரை எனக்குதெரியும்.ஆட்டுக்குடல்தான் போட்டி.களி,பரோட்டாவுடன் போட்டி விற்பனை பறக்கும்.இந்தஆட்டுக்குடலை ஒரு லாரியில் மடக்கி பிடித்தார்கள்.வெளி மாநிலத்திலிருந்துவிற்பனைக்காக கொண்டு வந்திருந்தார்கள்.அங்கே இதற்கு அவ்வளவு வரவேற்பு இல்லை.
மொத்தஆட்டுக்குடலும் சுகாதாரமற்றது.பிடிபட்ட குடல்கள் அழிக்கப்பட்டுவிட்ட்து.இல்லாவிட்டால் பலருடைய சுகாதாரத்தை அழித்திருக்கும்.மதுவுடன் எளிதில்விற்பனையாகி விடுகிறது.காலையில் வாந்தி வந்தால் மது ஒத்துக்கொள்ள வில்லை என்றுநினைப்பார்களே தவிர உடன் சாப்பிட்ட அசைவம் பற்றிய எண்ணம் வராது.சுயநலமும்பேராசையும் வளர்ந்துவிட்ட நாளில் யார் எக்கேடு கெட்டால் என்ன? அவர்களுக்கு கல்லாநிரம்பினால் போதும்.
 
விருந்துசாப்பிடும் முன்பாக காக்கைகளுக்கு உணவு வைப்பது நமது கலாச்சாரம். இறுதி நாள்காரியத்தில் வெளியாட்களுக்கு விருந்து தருவார்கள்.சமீபத்தில் அப்படி ஒருகாரியத்திற்கு போயிருந்தேன்.காக்கைக்கு உணவு கொண்டு போய் வைத்துவிட்டுகாத்திருந்தார்கள்.வெகு நேரம் மொத்த கூட்டமும் காத்துக்கொண்டிருந்தார்கள்.காக்கைசாப்பிடாவிட்டால் கை நனைக்க மாட்டார்கள்.சிட்டுக்குருவி மட்டும் அல்ல காக்கையும்காணாமல் போய்க் கொண்டிருக்கிறதா?
கிணற்றில்போட்டு விடலாம் என்று சிலர் சொன்னார்கள்.மீன் சாப்பிட்டால் போதும்.சீக்கிரம்கிளம்ப வேண்டுமே? காக்கையை பிதுர் என்பார்கள்.முன்னோர் சாப்பிட்ட பின்புதான்மற்றவர்கள் சாப்பிடவேண்டும்.ஆனால் உண்மையான நோக்கம் விருந்தில் விஷம் இருந்தால்உடனே தெரிந்துவிடும் என்பதே! ஒரு வழியாக காக்கை இரக்கப்பட்டு எங்கிருந்தோ வந்துஎங்களை காப்பாற்றியது.நவகிரகங்களில் சனியை மந்தன் என்பார்கள்.சனியின் வாகனம்மெதுவாகத்தான் வரும் என்றார் ஒருவர்.
 
தானியங்களை காயவைத்து காக்கை குருவிக்காக காவல் காக்கும் காலங்கள் இனி இருக்காதா? காக்கை தலைமீதுஎச்சமிட்டால் தோஷம் என்ற நம்பிக்கை உண்டு.காகம் கரைவதற்கு பலன் சொல்வார்கள்.இன்றுஆபத்தில் சிக்கியிருப்பது போல தோன்றுகிறது.காக்கை பிரியாணி சாப்பிட்ட விவேக்நினைவுக்கு வருகிறார்.அப்போது அது நகைச்சுவை.கற்பனையை விட உண்மை பயங்கரமானது என்றுயாரோ சொன்னார்கள்.பொதுமக்கள் புகார் கொடுத்த பிறகு சிலரை பிடித்துவிசாரித்தார்கள்.
கோணிப்பை நிறையகாக்கைகளை வைத்திருந்தார்கள்.நூறுக்கும் மேற்பட்டவை.அத்தனையும் இறந்த காகங்கள்.உணவுக்காகவிஷம் வைத்து வேட்டையாடியதாக சொன்னார்கள்.ஒரு குடும்பம் நூறுக்கும் அதிகமானகாக்கைகளை எத்தனை நாள் உண்பது? அவர்கள் சொல்வது உண்மையல்ல! அவை ஹோட்டல்களுக்குவிற்பனை செய்யப்படுகிறது.பலரும் காடைஃபிரை,கவுதாரி ஃபிரை என்று மணக்க மணக்கசாப்பிடிகிறார்கள்.

சப்பாத்தியா? சாதமா?

 
 
 
நீரிழிவு அதிகரித்துவரும் நிலையில் கோதுமைக்கு வரவேற்பு கூடி வருகிறது.எண்ணெய் இல்லாத சப்பாத்திஇரண்டு மட்டும் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள்.சப்பாத்திக்கு சர்க்கரைநோயை கட்டுப்படுத்தும் சக்தி எதுவும் இல்லை.ஆனாலும் சாதம் வேண்டாம்,சப்பாத்திபோதும் என்கிறார்கள்.பிரதான உணவு வகைகளை பொருத்தவரை கோதுமையும் அரிசியும்தான்.தென்தமிழ்நாட்டில் அரிசிதான் பிரதான உணவு.வட நாட்டுக்காரன் கோதுமைதின்கிறான்,பலசாலியாக இருக்கிறான்.நாம் அரிசி சாப்பிட்டு புத்திசாலியாகஇருக்கிறோம் என்பதை யாரோ சொன்னார்கள்.
 
உடல் பலத்திற்கும்மூளைக்கும் கூட இவற்றில் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.அரிசி உணவே கிராமங்களுக்குபசுமைப்புரட்சிக்குப்பின் அறிமுகம் ஆனதென்று சொல்பவர்கள் உண்டு.சில பகுதிகள் தவிரநெல் விளைச்சல் அபூர்வம்.ராகி,வரகு,கம்பு போன்றவைகளே முக்கிய உணவாக இருந்துவந்திருக்கிறது.ராகி பற்றி ஏற்கனவே ஒருபதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.இட்லி,தோசை எல்லாம் பண்டிகை காலங்களுக்குசெய்வார்கள் என்று ஒரு முதியவர் சொன்னார்.
முதியவர்சொன்னது உண்மைதான்.நெல் விளைச்சலுக்கு நிறைய தண்ணீர் வேண்டும்.தமிழ்நாட்டில்அதிகமும் புன்செய் நிலங்கள்.ராகி போன்றவை அப்படி பயிரிடுவார்கள்.நெல்லுக்கு தராதமுக்கியத்துவத்தை ராகிக்கு தருவதை நான் பார்த்திருக்கிறேன்.அறுவடைக்குப்பின்களத்தில் இருந்து எடுக்கும்போது பூஜை செய்த பிறகே வீட்டுக்கு எடுப்பார்கள்.இப்போதுஅரிசி உணவுகளே முக்கிய உணவுகளாகிவிட்டன.பள்ளிகளின் மதிய உணவில் கோதுமை இடம்பெற்றிருந்த காலம் உண்டு.பிறகு காணாமல் போய்விட்ட்து.
 
சாதம்தவிர்த்து சப்பாத்தி சாப்பிட்டால் நீரிழிவை கட்டுப்படுத்த முடியுமா என்ன? எனக்குரவிச்சந்திரன் என்றொரு நண்பர்.ஏதாவது ஒரு பத்திரிகையைநட்த்திக்கொண்டிருப்பார்.சிறிய அளவில் சில ஆயிரம் பிரதிகள்போடுவார்.வலைப்பதிவையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார். பதிவெழுதலாம்என்றிருக்கிறேன் என்று சொன்னதும் நான் வேண்டாம் சொன்னேன்.ஆளுங்கட்சியை சார்ந்தவர்என்பதால் நடுநிலையோடு செயல்படுவது சாத்தியமாக இருக்காது.நீரிழிவு அதிகமாகிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அப்போது போய் பார்க்கமுடியவில்லை.
சில வாரங்கள்கழித்து அவருடைய வீட்டுக்குப்போனேன்.எனக்கு சம்மாக சோற்றை உள்ளே தள்ளுவதை பார்த்துஎனக்கு ஆச்சர்யம்.மட்டன்,கூடவே ஆம்லெட்.இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதாக சொன்னார்." நிறையபேர் சப்பாத்தி தான் பெஸ்ட் என்கிறார்களே? உனக்கு அதில் உடன்பாடு இல்லையா? என்றுகேட்டேன்." "அதெல்லாம்சும்மா! அடிப்படையில் கோதுமைக்கும் அரிசிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.சாதம்என்றால் அதிகம் சாப்பிடுவார்கள்,சப்பாத்தி என்றால் குறைவாக சாப்பிடுவார்கள்அவ்வளவுதான்".அவர்சொன்னது நிஜம்தான்.
 
கோதுமை,அரிசிஇரண்டில் உள்ள சத்துக்களிலும் பெரிய வித்தியாசம் இல்லை.ஓரிரு சதவீத கார்போஹைட்ரேட்மட்டுமே வித்தியாசம்.பெரும்பான்மையாக சோற்றை சரியாக மெல்லாமல் உள்ளேதள்ளுகிறோம்.அளவும் அதிகமாக இருக்கும்.அதிக கலோரிகளை எரிக்க வேண்டிஇருக்கும்.சப்பாத்தி இரண்டு சாப்பிட்டாலே அதிக நேரம் சாப்பிட்டுக்கொண்டிருப்பதுபோலத்தோன்றும்.நீரிழிவு நோயாளிகளை சப்பாத்தி சாப்பிட சொல்வதன் காரணம் இவ்வளவுதான்.

Popular Posts

Popular Posts