My Blog List

Thursday, 29 December 2011

புளி கறி

 
 

புளி கறி

தேவையானவை :
தடியங்காய்(வெள்ளை பூசணிக்காய் ) / கத்திரிக்காய், முருங்கக்காய் – கிண்ணம்
புளி கரைசல் – 100 மி. லி
தேங்காய் – மே. கரண்டி
மிளகாய் வற்றல் –
சின்ன வெங்காயம் –
மஞ்சள் பொடி – 1/2 தே. கரண்டி
உப்பு – தேவைக்கு
தாளிக்க :
தே. எண்ணெய் – 1 மே. கரண்டி
கடுகு – 1/2 தே. கரண்டி
சின்ன வெங்காயம் (பொடியாக வெட்டியது ) – 1 மே. கரண்டி
கருவேப்பிலை – சிறிது
செய்முறை :
  • காய்கறிகளை துண்டுகளாக்கி வேகவைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய், மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்து உள்ளதை சேர்த்து தாளிக்கவும்.
  • புளி கரைசல், வேக வைத்த காய்கள், தேங்காய் அரைப்பு, உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • லேசாக கொதித்து பொங்கி வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
குறிப்பு :
இதற்கு தொட்டு கொள்ள உருளைக்கிழங்கு கறி நன்றாக இருக்கும்.

Tagged: குழம்பு, புளி, புளி கறி, lunch

Thursday, 22 December 2011

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்!

 
பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்!
பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
கண்பார்வை தெளிவடைய:
வைட்டமின் '' குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
பெண்களுக்கு:
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆண்களுக்கு:
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.
சளி இருமலுக்கு:
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க:
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
*முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
*பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

Tuesday, 13 December 2011

கத்திரிக்காய் சட்னி

 
 
இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள ஒரு சூப்பர் சட்னி.
கொஞ்சம் சிரமப்பட்டுதான் செய்யணும்.
ஆனால் சாப்பிட சுவையாக இருக்கும்.

கத்திரிக்காய் சட்னி

செய்ய தேவையானவை :

  • கத்திரிக்காய் (பெரியது) – 4 – காம்பை மட்டும் வெட்டவும்
  • பச்சை மிளகாய் – 5 – நீளமாக நறுக்கவும்
  • புளி விழுது - 1 தே. கரண்டி
  • ந.எண்ணெய், உப்பு தேவைக்கு
தாளிக்க :
  • கடுகு – 1/2 தே. கரண்டி
  • உளுந்து - 1/2 தே. கரண்டி
  • கருவேப்பிலை

கத்திரிக்காய் சட்னி

செய்முறை :
  • கத்திரிக்காயை காம்பு மட்டும் நறுக்கி, வாணலியில் எண்ணெய் சிறிது ஊற்றி நன்றாக வதக்கவும்.
  • வாணலியில் இருந்து எடுத்து வைக்கவும். ஆறிய பின் அதன் மேலிருக்கும் தோலியை உரித்து எடுக்கவும்.
  • கை வைத்தே மசித்து கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளதையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும்.
  • புளி விழுது, உப்பு, சிறிது தண்ணீர், மசித்த காய் எல்லாம் போட்டு சற்று வத்தியவுடன் இறக்கவும்.


Tagged: இட்லி, கத்திரிக்காய் சட்னி, தோசை, Brinjal chutney, dosa

பேபி கார்ன் மசாலா

 
 

பேபி கார்ன் மசாலா

பேபி கார்ன் :

பேபி கார்ன் (8) எடுத்து சுத்தப்படுத்தி இரண்டு இன்ச் அளவிலான துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

அதன் மேல் மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து, அரை மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.

அதன் பிறகு எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
விருப்பப்பட்டால் சாட் மசாலாவை மேலே தூவி சாப்பிடக் கொடுக்கலாம்.
பேபி கார்ன் மசாலா :

பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, நீளமாக கீறிய பச்சை மிளகாய் எல்லாம் வாணலியில் வதக்கி,

அதனுடன் கரம் மசாலா தூள், soya sauce, மிளகாய் தூள் சேர்த்து பொரித்து வைத்துள்ள பேபி கார்னை போட்டு கிண்டி இறக்க வேண்டியதுதான்.

கொத்தமல்லி தூவவும்.


Tagged: பேபி கார்ன் மசாலா, baby corn masala

Tuesday, 6 December 2011

உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சீனக்கஞ்சி

 
 
சீனா பெரிய நெல் உற்பத்தி நாடாகும். இந்தியாவைப் போல வடக்கு பகுதியில் வசிக்கும் மக்கள் கோதுமை உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுகின்றனர். தென் பகுதி மக்கள் முக்கியமாக சோற்றைச் சாப்பிடுகின்றனர். ஆனால், வட பகுதியிலும் தென் பகுதியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் கஞ்சியை(conjee) உட்கொள்ள விரும்புகின்றனர்.
Read more »

குளிர்கால உணவுகள்.

 
 
பனி,குளிர்,வெப்ப நிலைமாறுபாடு போன்றவை ஒன்றோடொன்று தொடர்புள்ளவை.சளி பிடித்தல்,அலர்ஜி,சைனஸ்ஆகிய மூச்சு மண்டலம் தொடர்புடைய நோய்கள் சிரமப்படுத்தும்.ஆஸ்துமா உள்ளவர்கள்அதிகம் அவதிப்படும் காலம்.படுக்கையை விட்டு எழுவதற்கே கஷ்டமாக இருக்கும்.சிலநேரங்களில் பத்துமணி வரைகூட பனி விலகாது.
குளிர்காலத்திற்கென்று பொருத்தமான உணவு வகைகளாக நம்முடைய தேர்வு என்ன?சூடான உணவு,அடிக்கடி தேநீர்,காபி,கொரிக்கும் வகைகள் போன்றவை.பலர் குளிர்காலத்தில்அதிக அளவு அசைவத்தை விரும்பி உண்பதை பார்த்திருக்கிறேன்.பிறகு ஜங்க்புட்எனப்படுபவை,துரித உணவுகள் பிடித்தமானதாக இருக்கின்றன.
பெரும்பாலானவர்கள்இதைக்கேள்விப்பட்டிருக்க முடியும்.கோடை காலத்தில் எளிதில் செரிமானம்ஆகிவிடுகிறது,ஆனால் குளிர்காலத்தில் அப்படியில்லை என்று சொல்வார்கள்.இது ஓரளவுஉண்மைதான்.பனி ஒத்துக்கொள்ளாமல்,சீதோஷ்ண நிலை மாறுபடுவதால் பலருக்கு தும்மல்,மூக்கடைப்பு,சளிபிடித்தல் என்று இருக்கும்.
சுவாசக்கோளாறுகள்செரிமான பிரச்சினைகளையும் கொண்டுவருகிறது.அஜீரணம்,கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிகம்சாப்பிட்ட்ட்து போன்ற உணர்வு,உப்பிசம்,வயிற்றில் அதிக அமிலசுரப்பு போன்றதொந்தரவுகள் இருக்க வாய்ப்புண்டு.குளிருக்காக அடிக்கடி அதிகம் காபி,டீ குடிப்பதும்வயிற்றுப்பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.புகை பிடிப்பவர்கள் குளிர்காலத்தில் அதிக முறைபிடிக்கிறார்கள்.இதுவும் சுவாசக்கோளாறுகளையும்,செரிமான தொந்தரவுகளையும்உருவாக்குகிறது.
காலையிலும்,மாலைஇரவு நேரங்களில் செரிமானத்திற்கு எளிதான உணவுகளை உட்கொள்ளலாம்.மதிய நேரத்தில்மட்டும் அசைவம்,கொழுப்பு பொருட்கள் சேர்க்கலாம்.பொதுவாகவே அசைவ உணவுகளைஎக்காலத்திலும் மதிய உணவில் சேர்ப்பதே நல்லது.உணவை நன்றாக மென்று விழுங்கவேண்டும்.அசைவ உணவுடன் ப்ப்பாளி பழத்தை சேர்ப்பது ஜீரணிக்க உதவும்.
வறுத்தஉணவுகள்,சிப்ஸ்,வெண்ணெய்,க்ரீம் சேர்ப்பது பலருக்கு செரிக்காது.ஒத்துக்கொள்ளாதஉணவை விலக்கி விடவேண்டும்.வெதுவெதுப்பான நீர் குடிக்கலாம்.சிலருக்கு நான் என்னசாப்பிட்டாலும் எந்த பிரச்சினயும் இல்லை என்பார்கள்.அதுவும் சாத்தியம்தான்.
கொஞ்சம்சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த்து போன்ற உணர்வு சிலருக்கு இருக்கும்.இத்தொல்லைஇருக்கும்போது சாப்பாட்டுடன் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவேண்டும்.காலிஃபிளவர்,முட்டைக்கோஸ்,வெங்காயம்,பீன்ஸ் உள்ளிட்டவை வாயுவைஅதிகரிக்கும்.இவற்றையும் தவிர்க்கலாம்.
பொதுவாக உணவு ஆலோசனைஎன்பது அவரவர் குடும்ப வருமானம்,உடல்நிலை,நோய்கள்,வயது,கிடைக்கும் சூழல் என்று பலகாரணிகளைக் கொண்டு இருக்கும்.மேலே சொல்லப்பட்டவை பொதுவானவை ஆனாலும் கருத்தில்கொள்ளலாம்.

Monday, 14 November 2011

ஓட்ஸ் பெப்பர் கோழிக்கறி மசாலா

 
 

தேவையான பொருட்கள்

கோழிக்கறி - 1/2 கிலோ
ஓட்ஸ் - 100 கிராம்
மிளகுதூள் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 நறுக்கியது
தக்காளி - 1 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 11/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
Read more »

Wednesday, 2 November 2011

முட்டை நூடுல்ஸ்

 
 
தேவையான பொருட்கள் :
லூஸ் நூடுல்ஸ் - 1 பாக்கெட்
வெங்காயம் - 200 கிராம்
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
கோஸ் - 100 கிராம்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
முட்டை - 4
செய்முறை ;
முட்டையில் ஆம்லெட் செய்து விரல் நீளத்திற்கு கட் செய்து கொள்ளவும்.
காய்கறிகளை சிறிது நீளமாக வெட்டிக் கொள்ளவும். நூடுல்ஸ்சை வேக வைத்துக் கொள்ளவும்.
கடாயி்ல் எண்ணை ஊற்றி காய்ந்ததும், காய் கறிகளை வதக்கி வேகவைத்துக் கொள்ளவும்
தேவையான அளவு உப்பு, மிளகு தூள், சர்க்கரை, சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்துக்கொள்ளவும்.
வேகவைத்து நூடுல்சுடன் இக்கலவையைச் சேர்த்து கட் செய்த ஆம்லெட்டையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
சுவையான முட்டை நூடுல்ஸ் ரெடி.

மக்காசோள பொங்கல்

 
 
தேவையானப் பொருட்கள்: பச்சரிசி குருணை & 1 கப், பாசி பருப்பு & கப், காய்ந்த சோள ரவை & கப், இஞ்சி & 1 துண்டு, பச்சை மிளகாய் & 2 நறுக்கியது, மிளகு, சீரகம் இடித்தது & 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் & சிறிது, எண்ணெய், நெய் கலந்தது &  கப், உடைத்த முந்திரி & கப். செய்முறை: பருப்பு, அரிசி குருணை, மக்காச்சோள ரவையை (ஸ்டோர் கடைகளில் கிடைக்கிறது) தனித் தனியாக உடைத்து வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு குக்கரில் 4&5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு, சிறிது நெய், உடைத்த கலவையும் சேர்த்து, ஒரு விசில் வரும்வரை வேகவிடுங்கள். வெந்தபின் நெய் மற்றும் எண்ணெயில் கடுகு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய், பெருங்காயம், உடைத்த முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டிக் கிளறவும். இது ஒரு புதுமையான பொங்கல். வித்தியாசமான சுவை கொண்டது.

Monday, 31 October 2011

மிளகின் மகத்துவம்

 
 
பண்டைய காலத்தில் வெளிநாட்டு வர்த்தகர்கள் இந்தியா வந்து மிளகுகளை வாங்கிச் சென்றார்கள். அவர்கள் அதை பெருஞ்செல்வம் போல் மதித்தார்கள். 15ம் நூற்றாண்டிற்கு பின்பே தென்அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு மிளகாய் அறிமுகம் ஆனது. அதற்கு முன்பு உணவில் காரம் சேர்ப்பது என்றால் மிளகு தான். மிளகாய் போல் மிளகின் காரம் பாதிப்பு ஏற்படுத்தாது. புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார் சத்து, வைட்டமின், சுண்ணாம்பு, இரும்பு, பாஸ்பரஸ் என்று பல சத்துக்கள் மிளகில் நிறைந்துள்ளன. ரத்தக்குழாயில் படியும் கொழுப்பைக் கரைக்கும் தன்மை மிளகுக்கு உண்டு. அன்றாட உணவில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய பொருள் மிளகு என்றால் மிகையாகாது.

வெஜ் நூடுல்ஸ்

 
 
 
தேவையானவை ;
நூடுல்ஸ் 500 கிராம்
முட்டைக்கோஸ் 100 கிராம்
காரட் 100 கிராம்
காலிஃப்ளவர் 100 கிராம்
பச்சைமிளகாய் 10
லோயாசாஸ் 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் 100 கிராம்
மிளகுத்தூள் 1 டீஸ்பூன்


ஆப்பிள் க்ரீம் பவுடர் 3 சிட்டிகை
தூள் உப்பு தேவையானது
அஜினமோட்டோ 1/4 டீஸ்பூன்
கோல்டுவின்னர் 150 மில்லி
நூடுல்ஸ்களுடன் பவுடர், சிறிது உப்பு, 2 ஸ்பூன் எண்ணெய் கலந்து 10 நிமிடங்கள் வேகவைத்த, தண்ணீரை நன்றாக வடித்து, தாம்பாளத்தில் பரப்பி வைக்கவும்.
Read more »

சில்லி சிக்கன்

 
 
தேவையானவை ;
சிக்கன் துண்டுகள் 500 கிராம்
ஆனியன் ஸ்பிக் பேஸ்ட் 5 டேபிள்ஸ்பூன்
குட மிளகாய் 200 கிராம்
பச்சை மிளகாய் 10
மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன்
மல்லித்தழை ஆய்ந்தது 1 கை
கார்ன்ஃப்ளவர் 2 டேபிள்ஸ்பூன்
முந்தரிப்பருப்பு 50 கிராம்
சைனாப்பூண்டி 10 பல்
இஞ்சி பெரிதாக 1 துண்டு
அஜினமோட்டோ 5 சிட்டிகை
தூள் உப்பு தேவையானது
எலுமிச்சம்பழம் 1
ஜீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
கோல்டுவின்னர் 200 மில்லி
குடமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை விதை நீக்கி நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை தட்டி வைக்கவும். முந்திரியை உடைத்து எண்ணெய் விட்டு வறுத்து, அரைத்து வைக்கவும். எலுமிச்சையைப் பிழைந்து விதை நீக்கவும்.
சிக்கனை அலசி மஞ்சள்தூள், சிறிது உப்பு போட்டுப் பிசிறி 1/2 மணி ஊறவிடவும்.


செய்முறை ;
கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாதி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தட்டி வைத்த பூண்டைப் போட்டு சிவக்க வதக்கி, இஞ்சி, அரைத்த மிளகாயைச் சேர்த்து, நன்றாக வதக்கவும்.
Read more »

சிக்கன் நூடுல்ஸ்

 
 
தேவையானவை ;
கார்லிக் சாஸ் 3 டேபிள் ஸ்பூன்
நூடுல்ஸ் 300 கிராம்
கொத்திய சிக்கன் 200 கிராம்
பெரிய வெங்காயம் 100 கிராம்
தக்காளிப்பழம் 1
மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் 1 டீஸ்பூன்
பட்டை 1 துண்டு
கிராம்பு 5
அஜினமோட்டோ 5 சிட்டிகை
எலுமிச்சம்பழம் 1
முந்திரிப்பருப்பு 500 கிராம்
தூள் உப்பு தேவையானது
நெய் 2 டேபிள் ஸ்பூன்
கோல்டுவின்னர் 300 மில்லி
நூடுல்ஸ்டுடன் தகுந்த உப்பு, 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு 100 மில்லி எண்ணெய் ஊற்றிப்புரட்டி, தாம்பாளத்தில் பரப்பி வைக்கவும்.
Read more »

Popular Posts

Popular Posts