பனி,குளிர்,வெப்ப நிலைமாறுபாடு போன்றவை ஒன்றோடொன்று தொடர்புள்ளவை.சளி பிடித்தல்,அலர்ஜி,சைனஸ்ஆகிய மூச்சு மண்டலம் தொடர்புடைய நோய்கள் சிரமப்படுத்தும்.ஆஸ்துமா உள்ளவர்கள்அதிகம் அவதிப்படும் காலம்.படுக்கையை விட்டு எழுவதற்கே கஷ்டமாக இருக்கும்.சிலநேரங்களில் பத்துமணி வரைகூட பனி விலகாது.
குளிர்காலத்திற்கென்று பொருத்தமான உணவு வகைகளாக நம்முடைய தேர்வு என்ன?சூடான உணவு,அடிக்கடி தேநீர்,காபி,கொரிக்கும் வகைகள் போன்றவை.பலர் குளிர்காலத்தில்அதிக அளவு அசைவத்தை விரும்பி உண்பதை பார்த்திருக்கிறேன்.பிறகு ஜங்க்புட்எனப்படுபவை,துரித உணவுகள் பிடித்தமானதாக இருக்கின்றன.
பெரும்பாலானவர்கள்இதைக்கேள்விப்பட்டிருக்க முடியும்.கோடை காலத்தில் எளிதில் செரிமானம்ஆகிவிடுகிறது,ஆனால் குளிர்காலத்தில் அப்படியில்லை என்று சொல்வார்கள்.இது ஓரளவுஉண்மைதான்.பனி ஒத்துக்கொள்ளாமல்,சீதோஷ்ண நிலை மாறுபடுவதால் பலருக்கு தும்மல்,மூக்கடைப்பு,சளிபிடித்தல் என்று இருக்கும்.
சுவாசக்கோளாறுகள்செரிமான பிரச்சினைகளையும் கொண்டுவருகிறது.அஜீரணம்,கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிகம்சாப்பிட்ட்ட்து போன்ற உணர்வு,உப்பிசம்,வயிற்றில் அதிக அமிலசுரப்பு போன்றதொந்தரவுகள் இருக்க வாய்ப்புண்டு.குளிருக்காக அடிக்கடி அதிகம் காபி,டீ குடிப்பதும்வயிற்றுப்பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.புகை பிடிப்பவர்கள் குளிர்காலத்தில் அதிக முறைபிடிக்கிறார்கள்.இதுவும் சுவாசக்கோளாறுகளையும்,செரிமான தொந்தரவுகளையும்உருவாக்குகிறது.
காலையிலும்,மாலைஇரவு நேரங்களில் செரிமானத்திற்கு எளிதான உணவுகளை உட்கொள்ளலாம்.மதிய நேரத்தில்மட்டும் அசைவம்,கொழுப்பு பொருட்கள் சேர்க்கலாம்.பொதுவாகவே அசைவ உணவுகளைஎக்காலத்திலும் மதிய உணவில் சேர்ப்பதே நல்லது.உணவை நன்றாக மென்று விழுங்கவேண்டும்.அசைவ உணவுடன் ப்ப்பாளி பழத்தை சேர்ப்பது ஜீரணிக்க உதவும்.
வறுத்தஉணவுகள்,சிப்ஸ்,வெண்ணெய்,க்ரீம் சேர்ப்பது பலருக்கு செரிக்காது.ஒத்துக்கொள்ளாதஉணவை விலக்கி விடவேண்டும்.வெதுவெதுப்பான நீர் குடிக்கலாம்.சிலருக்கு நான் என்னசாப்பிட்டாலும் எந்த பிரச்சினயும் இல்லை என்பார்கள்.அதுவும் சாத்தியம்தான்.
கொஞ்சம்சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த்து போன்ற உணர்வு சிலருக்கு இருக்கும்.இத்தொல்லைஇருக்கும்போது சாப்பாட்டுடன் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவேண்டும்.காலிஃபிளவர்,முட்டைக்கோஸ்,வெங்காயம்,பீன்ஸ் உள்ளிட்டவை வாயுவைஅதிகரிக்கும்.இவற்றையும் தவிர்க்கலாம்.
பொதுவாக உணவு ஆலோசனைஎன்பது அவரவர் குடும்ப வருமானம்,உடல்நிலை,நோய்கள்,வயது,கிடைக்கும் சூழல் என்று பலகாரணிகளைக் கொண்டு இருக்கும்.மேலே சொல்லப்பட்டவை பொதுவானவை ஆனாலும் கருத்தில்கொள்ளலாம்.
No comments:
Post a Comment