My Blog List

Sunday, 15 July 2012

உப்புக்கருவாடு ஊறவச்சசோறு






படம் பார்த்து, கதையை நீங்களே எழுதிக்குங்க!!!





Monday, 9 July 2012

என்னது தண்ணில இத்தனை நன்மையா?!

நீங்களே படிச்சு, தெரிஞ்சு, வியந்துக்குங்க..


Saturday, 7 July 2012

ப்ரெஞ்ச் டோஸ்ட் செய்வமோ?

தேவையான பொருட்கள்:




பாண் துண்டுகள் 2
முட்டை 1
பால் 1 மேசைக்கரண்டி
சீனி 1 மேசைக்கரண்டி
வனிலா எசென்ஸ் 1/2 துளி
எண்ணெய் 2,3 துளிகள் போதுமாக இருக்கும்







இனி செய்முறை படங்களாக:

முதலில் முட்டையையும், பின்னர் மற்றைய பொருட்களையும் சேர்த்து நன்றாக அடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.


அடித்த கலவையில் பாண் தூண்டுகளை போட்டு,பிரட்டி எடுத்து சூடாக்கிய ஒரு தட்டில் போடுங்கள்.


2 பக்கமும், 2 நிமிடங்கள் வரை வாட்டி எடுங்கள� �.


இதோ ப்ரெஞ்ச் டோஸ்ட் ரெடி, தனியாகவோ அல்லது பழம் தேன் சேர்த்தோ விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிடலாம்.



கீரை மசியல் / கீரை கடையல்



பெயரில் என்ன இருக்கு, சத்துள்ளதாக, ருசியுள்ளதாக சாப்பிடுவது தானே முக்கியம். 2012 பிறந்த பி� ��்னர் எழுதும் முதல் செய்முறை என்பதால் சைவத்துடன் ஆரம்பிக்கலாமே என நினைத்து கீரையுடன் ஆரம்பிக்கின்றேன்.



தேவையானவை:

1 பிடி கீரை
1/2 கப் நறுக்கிய வெங்காயம்
2-3 நறுக்கிய பச்சை மிளகாய்
1 தேக்கரண்டி பெரும்சீரகம்
4-5 மேசைக்கரண்டி தேங்காய்ப்பால்
தேவைக்கேற்ப உப்பு


செய்முறை:

1. கீரையை நன்றாக நீரில் அலசி, மண் இல்லாது எடுத்து, சிறிதாக அரிந்து கொள்ளுங� �கள். ( சோம்பல் காரணமாக சரியாக நீரில் அலசாமல் விட்டால், அன்று "மண் கீரை கடையல்" தான் கிடைக்கும். )

2. ஒரு பாத்திரத்தில் கீரையை போட்டு, சிறிதளவு நீர் ஊற்றி வேகை வையுங்கள்.

3. அதில் பெரும்சீரகம், வெங்காயம், மிளகாய், சிறிதளவு உப்பையும் சேர்த்து நன்றாக வேக வையுங்கள்.

4. கீரை நன்றாக வெந்து வந்ததும், மத்தால் அல்லது ஒரு மசிக்க கூடிய அகப்பையால் நன்றாக கடையுங்கள். (அடுப்பி� �் இருந்து இறக்கி செய்யுங்கள்)

5. பின்னர் சட்டியை மீண்டும் அடுப்பில் வைத்து, தேங்காய்ப்பாலை சேர்த்து லேசான கொதி வந்ததும் இறக்குங்கள். இறக்கியதும் சிறிது தேசிக்காய்/எலுமிச்சைப் புளி சேர்த்தால் அருமையான ருசி கிடைக்கும்.எங்க வீட்ல உள்ளவங்க போல, தேசிக்காய்க்கு எதிர்ப்பு காட்டினால்..அது வேணாங்கிறேன்...வேலை குறைவு..கிகிகிகி

பி.கு: இதெல்லாம் ஒரு பெரிய செய்முறையா எ ன கேட்பவர்களுக்கு: நான் கற்றுக்குடுத்து வெந்நீர் போல கற்றுக் கொண்டவர்களும் இங்குண்டு, என்னைய சுத்தி அம்புட்டு அப்பாவிங்க...வரட்டுமா ;)

வெஜிடேரியன் நூடுல்ஸ்






தேவையான பொருட்கள்:

நூடுல்ஸ் 250கிராம்
சோயா 100கிராம்
க்ரட் 1 பெரியது
பீன்ஸ் 100கிராம்
கோவா/முட்டைக்கோஸ் 100கிராம்
லீக்ஸ் 100கிராம்
வெங்காயம் 1

அரைத்த பூண்டு விழுது 1/2 மேசைக்கரண்டி
அரைத்த காய்ந்தமிளகாய் / செத்தல் தூள் - 1/2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் 1/2 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் சிறிதளவு

செய்முறை:
1. � ��ரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். நீர் கொதித்து வரும் போது நூடுல்ஸ், சிறிதளவு உப்பு மற்றும் 1/2 மேசைக்கரண்டி எண்ணெயை போடுங்கள். நூடுல்ஸ் வெந்ததும், கொதி நீரை வடித்து, பின்னர் மீண்டும் சாதாரண நீர் சேர்த்து மறுபடியும் நீரை வடித்து எடுங்கள். (இப்படி செய்தால் நூடுல்ஸ் குளையாமல் வரும்)

2. தேவையான பொருட்களில் உள்ள அனைத்து காய்கறிகளையும் சுத்த ம் செய்து, சிறிதாக அரிந்து கொள்ளுங்கள்.

3. கொதிநீரில் சோயாவை 5நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின்னர் நீரை பிளிந்து எடுத்துக் கொள்ளுங்கள். சிறிதளவு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

4. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு, முறையே: வெங்காயம், கரட்+பீன்ஸ்+கோவா+லீக்ஸ், அரைத்த பூண்டு+காய்ந்தமிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி எடுங்கள்.

5. இந்த காய்கறிக்கலவை தயாரானதும் நூடுல்ஸையும், பொரித்த சோயாவையும் போட்டு கிளறி எடுங்கள்.

திடீர் கார சாண்ட்விச்

வணக்கம்,

ஒஸ்திரேலியாவில் குளிர்காலம் என்பது உலகறிந்த செய்தி. அதனால் வரும் துன்பங்கள், அனுபவிப்பவர்கள் மட்டுமே அறிந்த செய்தி. பின்ன என்ன?, காலையில் எழுந்து வேலைக்கு போவதே பெரிய கடினமான வேலை, இதில் நேரத்திற்கு சமைப்பதெங்கே, சாப்பிடுவதெங்கே! ஆயினும் சாப்பிடாமல் வேலைக்கு சென்று, அம்மாவிடம் பொய் சொல்ல தெரியாமல் உண்மையை உளறி, பேச்சு வாங்குவதற்கு, எதையாவது சில நிமிட த்தில் சமைத்து உண்பது எவ்வளவோ மேல்!!

பாண்(ரொட்டி) இல்லாத இடம் உலகில் உண்டா?! அதனால் பாணை வைத்து ஒரு காரமான சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்:
பாண் துண்டு 2
வெங்காயம் 1/4
பச்சை மிளகாய் 1/2
மிளகு தூள் 1/4 தேக்கரண்டி
வெண்ணெய்/நெய்/மாஜரின் சிறிதளவு

செய்முறை:
1. இரண்டு பாண் துண்டுகளிலும் சிறிதளவு வெண்ணெய் பூசுங்கள். இரண்டு பக்கத்திற்கும் பூச வேண்டும்.
2. ஒரு பாண் துண்டில், நீள வாக்கில் அரிந்த வெங்காயம், சிறிதாக அரிந்த பச்சைமிளகாய், மிளகுத் தூளை தூவவும். இன்னொரு பாண் துண்டால்ம மூடவும்.
3. ஒரு தட்டையான பாத்திரத்தை சூடாக்கி, தயாரித்த பாணை வைக்கவும்.
4. இரண்டு நிமிடங்களில், பக்கம் மாற்றிவிடவும்.

அம்புட்டு தான்!!

உதவிக்கரம்:
1. அடுப்பின் வெப்பத்தை மிக குறைத்து வையுங்கள். அல்லது "கரி சாண்ட்விச்" தான் கிடைக்கும்.
2. உங்களுக்கு தாங்க கூடிய அளவு காரத்தை அதிகமாக்கலாம் அல்லது குறைக்கலாம்.





குளிருக்கு ஏற்ற ஸ்வீற்கோர்ன் சிக்கன் சூப்

குளிர்காலத்தில் இரவு நேர உணவுக்கு உகந்தது சூப் வகைகள் என்பது நாம் அறிந்த செய்தி தானே. தவிர குளிரில் சமைப்பதும், பின்னர் துடைத்து சுத்தம் செய்வதும் நடுநடுங்கி செய்ய வேண்டிய பயங்கரமான வேலை. மிக குறுகிய நேரத்தில், சில பொருட்களை மட்டுமே வைத்து தயாரிக்க கூடிய ஸ்வீட்கோர்ன் சிக்கன் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம். பெரிதாக யோசிக்க தேவையில்லாத சூப் செய்முறைகளில் இ� ��ுவும் ஒன்று. சமையலில் பெரிதாக நாட்டம்/பொறுமை இல்லாதவர்களும் இலகுவாக தயாரித்துவிடலாம்.



தயாரிக்க தேவையானவை:

அரைத்த ஸ்வீட்கோர்ன் 1டின்
லீக்ஸ் (வெள்ளைப்பகுதி அரிந்தது)1
வெங்காயத்தடல் / ஸ்ப்ரிங் ஒனியன் 3
� ��ாய்கறி எண்ணெய் - 1 தே.க
சிக்கன் ஸ்டொக் - 4கப்
எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் - 1 முழு கோழியினுடையது
முட்டை 2 (உடைத்து லேசாக அடித்தது)
உப்பு,மிளகு தூள் தேவைக்கேற்ப


தயாரிப்பது எப்படி:

கோழி, லீக்ஸ், வெங்காயத்தடலை சிறிதாய அரிந்து கொள்ளுங்கள். முட்டையை உடைத்து அடித்து எடுத்து வையுங்கள்.

ஒரு சட்டியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, லீக்ஸை போட்டு லேசாக பச்சை வா சம் போகும் வரை வதக்குங்கள். வதங்கி வந்ததும், சிக்கன் ஸ்டொக்கை ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். கொதிக்கும் கலவையில் வெட்டிய சிக்கன் துண்டுகள் மற்றும் அரைத்த சோளத்தை சேர்த்து 15-20 நிமிடங்களுக்கு இடைப்பட்ட சூட்டில் கொதிக்க விடுங்கள்.

இப்போது அடுப்பை அணைத்த பின்னர், ஏற்கனவே அடித்து வைத்திருக்கும் முட்டையை கொஞ்சம் கொஞ்சமாக சேருங்கள். சேர்க்கும் போது ஒரு பெரிய முள் ளுக்கரண்டியால் கலக்கி கொண்டேயிருங்கள். ஒரு நிமிடம் தொடர்ந்து கலக்கிய பின்னர், உடனே சிறு குவளைகளில் ஊற்றி. சிறிதளவு வெங்காயத்தடலை தூவி பரிமாறுங்கள். (என்னிடம் வெங்காயத்தடல் கைவசம் இருக்கவில்லை, அதனால் போடவில்லை)

உப்பு, மிளகுதூள் அவரவர்க்கு தேவையான அளவு போட்டுக் கொள்ளலாம்.
பி.கு: ஏற்கனவே சுட்ட/வெதுப்பிய கோழி இறைச்சியை சேர்த்தால் மாறுபட்ட சுவை கிடைக்கும்.




காரகாய்கறிக்கூட்டு




தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் 1
கத்தரிக்காய் 2
உருளைக்கிழங்கு 1
உள்ளி/வெள்ளைப்பூண்டு 4
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 3
கறிவேப்பிலை 1கொத்து
பெருஞ்சீரகம் 1/2 மே.க
கடுகு 1/2 தே.க
மஞ்சள்தூள் 1/2 தே.க
மல்லித்தூள் 1 மே.க
மிளகாய்தூள் 1 மே.க
கொத்தமல்லி 2 மே.க
எண்ணெய் 1/2 மே.க
உப்பு தேவையான அளவு

செய்முறை படங்களாக:

1. காய்கறி, வெங்காயம், மிளகாயை சுத்தம் செய்து, அரிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.

2. ஒரு பா� ��்திரத்தை சூடாக்கி, எண்ணெய் விடுங்கள்.

3. கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாயை முறையே போட்டு வதக்குங்கள்.

4. நன்றாக வதக்கி எடுங்கள்.

5. முதலில் முருங்கைக்காயை போட்டு 2 நிமிடங்களுக்கு வதக்குங்கள்.

6. இப்போது உருளைக்கிழங்கை போட்டு மேலும் 2 நிமிடங்களுக்கு வதக்குங்கள்.

7. மூன்றாவதாக கத்தரிக்காயை ப ோட்டு மேலும் 2 நிமிடங்களுக்கு தொடர்ந்து வதக்குங்கள்.

8. ஒரு கப் தண்ணீர், மற்றும் தூள்களை சேர்த்து, கொதிக்க வையுங்கள்.

9. காய்கறி கொதிக்கும் போது, கொத்தமல்லி இலையை சிறிதாக அறிந்து எடுங்கள்.

10. காய்கறி கூட்டு திரண்டு வரும் போது, கொத்தமல்லி இலையை போட்டு, அடுப்பை � �ணைத்துவிடுங்கள்.


தூயாவின்ட சமையல் கட்டு

நான் சமைத்தவை,ரசித்தவை,ருசித்தவை

Popular Posts

Popular Posts