ஒஸ்திரேலியாவில் குளிர்காலம் என்பது உலகறிந்த செய்தி. அதனால் வரும் துன்பங்கள், அனுபவிப்பவர்கள் மட்டுமே அறிந்த செய்தி. பின்ன என்ன?, காலையில் எழுந்து வேலைக்கு போவதே பெரிய கடினமான வேலை, இதில் நேரத்திற்கு சமைப்பதெங்கே, சாப்பிடுவதெங்கே! ஆயினும் சாப்பிடாமல் வேலைக்கு சென்று, அம்மாவிடம் பொய் சொல்ல தெரியாமல் உண்மையை உளறி, பேச்சு வாங்குவதற்கு, எதையாவது சில நிமிட த்தில் சமைத்து உண்பது எவ்வளவோ மேல்!!
பாண்(ரொட்டி) இல்லாத இடம் உலகில் உண்டா?! அதனால் பாணை வைத்து ஒரு காரமான சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாண் துண்டு 2
வெங்காயம் 1/4
பச்சை மிளகாய் 1/2
மிளகு தூள் 1/4 தேக்கரண்டி
வெண்ணெய்/நெய்/மாஜரின் சிறிதளவு
செய்முறை:
1. இரண்டு பாண் துண்டுகளிலும் சிறிதளவு வெண்ணெய் பூசுங்கள். இரண்டு பக்கத்திற்கும் பூச வேண்டும்.
2. ஒரு பாண் துண்டில், நீள வாக்கில் அரிந்த வெங்காயம், சிறிதாக அரிந்த பச்சைமிளகாய், மிளகுத் தூளை தூவவும். இன்னொரு பாண் துண்டால்ம மூடவும்.
3. ஒரு தட்டையான பாத்திரத்தை சூடாக்கி, தயாரித்த பாணை வைக்கவும்.
4. இரண்டு நிமிடங்களில், பக்கம் மாற்றிவிடவும்.
அம்புட்டு தான்!!
உதவிக்கரம்:
1. அடுப்பின் வெப்பத்தை மிக குறைத்து வையுங்கள். அல்லது "கரி சாண்ட்விச்" தான் கிடைக்கும்.
2. உங்களுக்கு தாங்க கூடிய அளவு காரத்தை அதிகமாக்கலாம் அல்லது குறைக்கலாம்.
No comments:
Post a Comment