My Blog List

Saturday, 7 July 2012

குளிருக்கு ஏற்ற ஸ்வீற்கோர்ன் சிக்கன் சூப்

குளிர்காலத்தில் இரவு நேர உணவுக்கு உகந்தது சூப் வகைகள் என்பது நாம் அறிந்த செய்தி தானே. தவிர குளிரில் சமைப்பதும், பின்னர் துடைத்து சுத்தம் செய்வதும் நடுநடுங்கி செய்ய வேண்டிய பயங்கரமான வேலை. மிக குறுகிய நேரத்தில், சில பொருட்களை மட்டுமே வைத்து தயாரிக்க கூடிய ஸ்வீட்கோர்ன் சிக்கன் சூப் எப்படி செய்வது என்று பார்க்கலாம். பெரிதாக யோசிக்க தேவையில்லாத சூப் செய்முறைகளில் இ� ��ுவும் ஒன்று. சமையலில் பெரிதாக நாட்டம்/பொறுமை இல்லாதவர்களும் இலகுவாக தயாரித்துவிடலாம்.



தயாரிக்க தேவையானவை:

அரைத்த ஸ்வீட்கோர்ன் 1டின்
லீக்ஸ் (வெள்ளைப்பகுதி அரிந்தது)1
வெங்காயத்தடல் / ஸ்ப்ரிங் ஒனியன் 3
� ��ாய்கறி எண்ணெய் - 1 தே.க
சிக்கன் ஸ்டொக் - 4கப்
எலும்பு நீக்கிய சிக்கன் துண்டுகள் - 1 முழு கோழியினுடையது
முட்டை 2 (உடைத்து லேசாக அடித்தது)
உப்பு,மிளகு தூள் தேவைக்கேற்ப


தயாரிப்பது எப்படி:

கோழி, லீக்ஸ், வெங்காயத்தடலை சிறிதாய அரிந்து கொள்ளுங்கள். முட்டையை உடைத்து அடித்து எடுத்து வையுங்கள்.

ஒரு சட்டியில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, லீக்ஸை போட்டு லேசாக பச்சை வா சம் போகும் வரை வதக்குங்கள். வதங்கி வந்ததும், சிக்கன் ஸ்டொக்கை ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். கொதிக்கும் கலவையில் வெட்டிய சிக்கன் துண்டுகள் மற்றும் அரைத்த சோளத்தை சேர்த்து 15-20 நிமிடங்களுக்கு இடைப்பட்ட சூட்டில் கொதிக்க விடுங்கள்.

இப்போது அடுப்பை அணைத்த பின்னர், ஏற்கனவே அடித்து வைத்திருக்கும் முட்டையை கொஞ்சம் கொஞ்சமாக சேருங்கள். சேர்க்கும் போது ஒரு பெரிய முள் ளுக்கரண்டியால் கலக்கி கொண்டேயிருங்கள். ஒரு நிமிடம் தொடர்ந்து கலக்கிய பின்னர், உடனே சிறு குவளைகளில் ஊற்றி. சிறிதளவு வெங்காயத்தடலை தூவி பரிமாறுங்கள். (என்னிடம் வெங்காயத்தடல் கைவசம் இருக்கவில்லை, அதனால் போடவில்லை)

உப்பு, மிளகுதூள் அவரவர்க்கு தேவையான அளவு போட்டுக் கொள்ளலாம்.
பி.கு: ஏற்கனவே சுட்ட/வெதுப்பிய கோழி இறைச்சியை சேர்த்தால் மாறுபட்ட சுவை கிடைக்கும்.




No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts