தேவையானவை:
பச்சரிசி 1 கப்
தண்ணீர் 5 கப்
பால் 1/2 கப்
மோர் 2 கப்
பச்சைமிளகாய் 3
சின்ன வெங்காயம் 8
இஞ்சி 1 துண்டு
கறிவேப்பிலை 1 கொத்து
கொத்தமல்லித்தழை சிறிதளவு
கடுகு 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரிசியை நன்றாகக் களைந்து 5 கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து ஸ்லிம்மில் வே கவைக்கவேண்டும்.( 20 நிமிடம் ஆகும்)
அதில் அரை கப் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவேண்டும்.
பின்னர் மத்தில் நன்றாக கடைய வேண்டும்.(மிக்சியில் போடக்கூடாது)
சின்ன வெங்காயத்தையும்,பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும்.
தேவையான உப்புடன் பொடியாக நறுக்கிய இஞ்சி,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
இரண்டு கப் மோரில் கடுகு தாளித� �து இதில் ஊற்ற மோர் சாதம் ரெடி.
வெய்யிலுக்கு அருந்தினால் உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும்.
No comments:
Post a Comment