பச்சரிசி – கால் கப்
உளுந்து – கால் கப்
பெரிய வெங்காயம் – 2
தேங்காய் துருவல் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
சமையல் சோடா – ஒரு சிட்டிகை
தாளிக்க :
கடுகு
உளுந்து
செய்முறை:
உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் உளுந்தை தாளித்து, பிறகு பொடியாக நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
அரைத்த மாவில் உப்பு, சமையல் சோடா, வதக்கிய வெங்காயம் போட்டு நன்றாக கலக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்திருக்கும் மாவில் இருந்து உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.
சுவையான, மொறுமொறுப்பான சீயம் தயார்.
மாவில் இருந்து உருண்டைகளாக எடுத்து போடும் முன், ஒவ்வொரு உருண்டைக்கும் கையில் தண்ணீர் தொட்டு கொண்டு மாவில் இருந்து எடுத்தால் உருண்டை சுலபமாக உருட்ட வரும், கையில் ஒட்டாமல் எண்ணெயில் விழும்.
No comments:
Post a Comment