My Blog List

Tuesday, 6 March 2012

வயிற்றுவலி சரியாக.. வயிற்றுக்கடுப்பு குணமாக.வயிற்றுப்போக்கு நிற்க...நாட்டு வைத்தியம்!

 

நாட்டு வைத்தியம்!


கொளுத்துற கோடை வெயிலோட உஷ்ணம் உடம்பையே உலுக்கி போட்டுருது. போதாக்குறைக்கு, உஷ்ணத்தால வர்ற நோய்ங்களும் நம்மை நடுநடுங்க வச்சிடுது. உஷ்ண நோயில இருந்து உங்களப் பாதுகாத்துக்க சில வைத்திய முறைங்களச் சொல்றேன்.. கேட்டுக்கிடுங்க..



வயிற்றுவலி சரியாக..

ஒரு ஸ்பூன் மிளகை கடாயில போட்டு சூடாக்கணும். வெடிச்சதும் அதுல ஒரு டம்ளர் தண்ணிய விட்டுக் காய்ச்சி, கால் டம்ளரா சுண்டினதும் வடிகட்டி குடிச்சிட்டு வந்தா, வயித்துவலி பறந்து போயிரும்.

மிளகுக்கு பதில் சீரகத்தை வறுத்தும் இதே மருந்தைத் தயாரிக்கலாம். வாரம் ஒருதரமாவது இதைக் குடிச்சம்னா வயித்துவலி வரவே வராது.

வயிற்றுக்கடுப்பு குணமாக..

ஒரு டம்ளர் தண்ணில 3 கடுக்காய் கொட்டையைத் தட்டிப்போட்டு, நல்லா கொதிக்க வச்சி அரை டம்ளராக்கணும். இந்தத் தண்ணியை ஆற வச்சு தினம் ஒரு வேளை குடிச்சிட்டு வந்தா வயித்துக்கடுப்பு விருட்டுனு ஓடிரும்.

ஒரு ஸ்பூன் கசகசாவை அரைச்சி 100 மில்லி பசும்பால்ல கலந்து குடிச்சா வயித்துக்கடுப்பு விலகிரும்.

வயிற்றுப்போக்கு நிற்க..

ரெண்டு அங்குல மஞ்சளை எடுத்து முதல்ல சின்னச் சின்னத் துண்டா நறுக்கிக்கணும். அப்புறம் அதைப் பாத்திரத்துலப் போட்டு வறுத்துக்கணும். அது நெருப்பா புகைஞ்சு வரும்போது ஒரு ஸ்பூன் ஓமத்தைப் போட்டா, 'பட பட'னு வெடிக்கும். உடனே ஒரு டம்ளர் தண்ணிய விட்டு கால் டம்ளரா சுண்டுற வரை கொதிக்க வைக்கணும். இதை வடிகட்டி ஒரு வேளை குடிச்சா வயித்துப்போக்கு நின்னுரும்.

சிலருக்கு வயித்த வலிச்சிகிட்டே வயித்துப் போக்கு விடாம போகும். அப்ப.. ரெண்டு மாதுளம் பிஞ்சுகளை எடுத்து அரைச்சி, 100 மில்லி பால்ல கலந்து குடிச்சா, வயித்துக்கடுப்பு நின்னு வயிறு லேசாயிரும்.

கடாயில் நல்லெண்ணெயை விட்டு, ஒரு கைப்பிடி இளசான பிரண்டையைப் போட்டு நல்லா வதக்கிக்கணும். கூட ரெண்டு காஞ்ச மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு, உப்பு எல்லாத்தையும் சேர்த்து வறுத்துக்கணும். இதை அரைச்சி துவையல் மாதிரி செஞ்சி சாப்பிட்டா வயித்துப்போக்கு குணமாயிரும்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts