My Blog List

Thursday, 17 May 2012

அவல் பகாளாபாத்







தேவையானவை:

அவல் 1 கப்
தயிர் 1 1/2 கப்
பச்சை திராட்சை 1/2 கப்
மாதுளை முத்துகள் 1/2 கப்
-------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு
------
உப்பு,எண்ணெய் தேவையானது

செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் ஒரு கப் அவலை தண்ணீர் தெளித்து நன்கு பிசறி பத்து நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
அதில் 1 1/2 கப் தயிர் சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.
அதனுடன் பச்சை திராட்சை,மாதுளமுத்துகள் சேர்க்கவேண்டும்.
------
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெயில் கடுகு,பெருங்காயத்த ூள்,பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை
தாளித்து ரெடியாக உள்ள அவல் பகாளாபாத்தில் கலக்கவேண்டும்.
--------
இதேபோல் ஓட்ஸ் லும் செய்யலாம்.
ஓட்ஸை microwave ல் இரண்டு நிமிடம் வேகவைத்து பின்னர் தயிர் சேர்த்து இதே முறையில் செய்ய வேண்டும்.





No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts