தேவையானவை:
அகத்திக்கீரை
அகத்திக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)
சோள மாவு 1 மேசைக்கரண்டி
தக்காளி 2
பால் 1/4 கப்
வெண்ணெய் 1மேசைக்கரண்டி
மிளகுத் தூள் 1 தேக்கரண்டி
உப்ப� �� தேவையானது
செய்முறை:
அகத்திக்கீரையை பொடியாக நறுக்கி நன்றாக அலசி microwave "H" ல் இரண்டு நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
ஆறினவுடன் மிக்சியில் விழுது போல அரைக்கவேண்டும்.
தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி அரை கப் தண்ணீருடன் மிக்சியில் அடித்து வைக்கவேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெயை உருக்கி சோளமாவை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.
இத்துடன் தக� ��காளி சாறு,கீரை விழுது சிறிது தண்ணீர்,தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
நன்றாக கொதித்தவுடன் அடுப்பை 'slim' ல் வைத்து பால் சேர்த்து மிளகு தூள் தூவி அடுப்பை அணைக்கவேண்டும்.
அகத்திக்கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. உடலை குளிர்விக்கும்.