My Blog List

Monday, 30 September 2013

Soya Beans Kuzhambu - சோயா பீன்ஸ் குழம்பு

Soya Beans Kuzhambu - சோயா பீன்ஸ் குழம்பு
by vijivedachalam
New
சோயா பீன்ஸில் பாஸ்பரஸ், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, இது எளிதில் செரிமானமடையக்கூடிய உணவுப் பொருள். எனவே இந்த சோயா பீன்ஸ் கொண்டு எளிய முறையில் ஒரு குழம்பு செய்து சாப்பிட்டால், உடலுக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு, மிகவும் சுவையான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் இது கர்ப்பிணிகளுக்கு ஏற்ற ரெசிபியும் கூட. பேச்சுலர்கள் எளிதில் செய்யக்கூடியது. சரி, இப்போது அந்த சோயா பீன்ஸ் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
சோயா பீன்ஸ் மணிகள்- 2 கப் (வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்தது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
கடுகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
முதலில் ஊற வைத்துள்ள சோயாவை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் வெங்காயத்தை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்பு சோயாவை சேர்த்து நன்கு கிளறி, துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சோயா பீன்ஸ் குழம்பு ரெடி!!!
Show commentsOpen link

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts