My Blog List

Showing posts with label ஃப்ரை. Show all posts
Showing posts with label ஃப்ரை. Show all posts

Tuesday, 15 October 2013

How to Buy Vegetables! - காய்கறி வாங்க தெரியுமா?

How to Buy Vegetables! - காய்கறி வாங்க தெரியுமா?

by tnkesaven
New

தக்காளி

சிலர் செக்கச் செவேலென சிவந்து, கனிந்திருக்கிற

தக்காளிப் பழங்களைத்தான் தேடுவார்கள்.

முழுவதுமாக சிவந்திருக்கும் தக்காளிச் சாறில் அமிலம்

கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.

அதனால் பச்சையும் மஞ்சளும் கலந்து செங்காயாக

இருக்கும் காய்களுக்கு முதலிடம் கொடுங்கள்.

உருண்டையாக கெட்டியாக இருக்கும் காய்களாகப்

பார்த்து வாங்குங்கள்.

முண்டும் முடிச்சுமாக இருந்தால் அதில் சாறு

அதிகமாக இருக்குமே தவிர சதைப்பற்று இருக்காது.

வெண்டைக்காய்
வெள்ளையும் இளமஞ்சளும் கலந்து மயக்கும்

வெண்ண்டைக்காயை விட பச்சைப்பசேலென

மினுக்கும் காய்கள்தான் சிறந்தவை.

வெண்டைக்காய் காம்புப் பகுதியில் இருந்துதான்

முற்றத் துவங்கும்.

எனவே காம்பை உடைத்துப் பார்த்து வாங்கலாம்.

உருளை
முளைவிட்ட காய்களையும் ஆங்காங்கே பச்சை நிறம்

பூசியிருக்கும் காய்களையும் ஒதுக்குவது நல்லது.

செம்மண்ணில் விளைந்த உருளையில் இனிப்புச்சுவை மிகுந்து இருக்கும்.

கத்தரி
தடித்த காம்புள்ள கத்தரிதான் பிஞ்சு.

காம்பு மெலிந்திருந்தாலோ, காயை அழுத்திப் பார்த்தால்

கெட்டிப்பட்டிருந்தாலோ அவற்றை மறுத்துவிடுங்கள்.

சாம்பாரில் உப்பு அதிகமாகிவிட்டால் அதனுடன்

நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்க்கும் உத்தி ஊரறிந்த

ரகசியம். ஆனால் உருளைக்கிழங்குக்குப் பதில் சோயா

உருண்டைகளை வேகவைத்துச் சேர்ப்பதும் கைமேல்

பலன் தரும்.

சோற்று உருண்டையைப் போட்டாலும் உப்பு குறைய

வாய்ப்பு இருக்கிறது.
டீ போடும்போது கடைசியில் சர்க்கரை சேர்ப்பதுதான்

வழக்கம். இதையே தலைகீழாக முயற்சிக்கலாம்.

முதலில் தண்ணீருடன் தேவையான சர்க்கரை சேர்த்து

கொதிக்க விடுங்கள்.

பிறகு டீத்தூள் சேர்த்து வடிகட்டி,

சூடான பால் சேர்த்துப் பாருங்கள். டீ திடமாகவும்,

சுவையாகவும் இருக்கும்.

இதில் இன்னொரு நல்லதும் இருக்கிறது.

இப்படி முதலிலேயே சர்க்கரை சேர்ப்பதால் டீத்தூளின்

கரை பாத்திரத்தில் ஒட்டாது,

பாத்திரத்தைக் கழுவுவது எளிது!

வெண்ணெய் காய்ச்சும்போது கறிவேப்பிலை அல்லது முருங்கை இலையைப் போட்டு காப்ச்சுவதுதான் வழக்கம். அதற்குப் பதிலாக

வெண்ணெய் காய்ச்சி இறக்கும் போது ஒரு ஸ்பூன்

வெந்தயத்தை போடுங்கள்.

நெய் அருமையான மணத்துடன் இருப்பதுடன்,

கசக்கவும் செய்யாது

courtesy;''the indhu''

Show commentsOpen link

Saturday, 12 October 2013

பழுத்த மிளகாய் பூண்டு கோழி வறுவல் ரெட் சில்லி கார்லிக் சிக்கன் ஃப்ரை Cayenne Pepper Garlic Chicken Fry Red Chilli Garlic Chicken Fry

பழுத்த மிளகாய் பூண்டு கோழி வறுவல் / ரெட் சில்லி கார்லிக் சிக்கன் ஃப்ரை / Cayenne Pepper Garlic Chicken Fry / Red Chilli Garlic Chicken Fry

by Asiya Omar
சமைத்து அசத்தலாம்

கோழியை எப்படி சமைத்தாலும்  ருசியாகத்தான் இருக்கும். அதிலும் ஃப்ரை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.ஒரே மாதிரி ஃப்ரை செய்தாலும் கொஞ்சம் சலித்து விடும் தான்.ஒரு மாற்றமாக பழுத்த மிளகாய்,பூண்டு சேர்த்து செய்த கோழி வறுவல் எப்படி என்று பார்ப்போம்.எண்ணெயும் குறைவாகவே செல்லும்.

தேவையான பொருட்கள்;
எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் - 300  கிராம்
பழுத்த சிவப்பு மிளகாய் - 4-5 (காரம் அவரவர் விருப்பம்)
பூண்டு - 6 பல்
மீடியம் சைஸ் வெங்காயம் - 1
மீடியம் சைஸ் - தக்காளி - 1
தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
விரும்பினால் - ரெட் கலர் - பின்ச்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லி ,கருவேப்பிலை சிறிது.

செய்முறை:

 பழுத்த மிளகாய், தக்காளி,வெங்காயம்,பூண்டு,கெட்டி தயிர்,சேர்த்து மிக்ஸியில் கவனமாக அரைத்து எடுக்கவும்.

 சிக்கனை சிறு துண்டுகளாக்கி நன்கு அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.

சிக்கனுடன்  அரைத்த விழுது,தேவைக்கு சிறிது  உப்பு,கலர் சேர்க்கவும்.

 நன்கு விரவி ஒரு மணி நேரமாவது ஊற வைக்கவும்.

 அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஊறிய சிக்கனை போட்டு மூடி 15 நிமிடம் வேக விடவும்.தண்ணீர் சேர்க்கக் கூடாது. சிக்கனிலேயே தண்ணீர் ஊறும். தண்ணீர் நன்கு வற்ற வைக்கவும்.




 கடாயில் எண்ணெய் விடவும் நன்கு சூடானவுடன் கருவேப்பிலை போடவும்,வெந்த சிக்கன் சேர்க்கவும்.நன்கு பிரட்டி பிரட்டி  விடவும்.


 சிக்கனில் மசாலா எல்லாம் ஓட்டிக் கொண்டு ஃப்ரை ஆகி வரும்.

 நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும். பிரட்டி விட்டு பரிமாறவும்.

சூப்பர் சுவையுள்ள ரெட் சில்லி கார்லிக் சிக்கன் ஃப்ரை ரெடி.

ரைஸ் வகைகளுக்கு பக்க உணவாக சாப்பிடலாம்.சப்பாத்தியில் ரோல் செய்தும், ப்ரெட் சாண்ட்விச்சில் வைத்தும்  மற்றும் வெறும் ஸ்டார்டராகவும் கூட  பரிமாறலாம்.இதனையே எலும்புடன் கூடிய சிக்கன் என்றால் கொஞ்சம் கிரேவி மாதிரியும் செய்யலாம்.அதற்கு தக்காளி,வெங்காயம்,தயிர் அளவை கூட்டிக் கொள்ள வேண்டும். விரும்பினால் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கலாம்.கிரேவி செய்முறை செய்த பின்பு படம் இணைக்கிறேன்.

Show commentsOpen link

Popular Posts

Popular Posts