Chicken Pulao recipe - சிக்கன் புலாவ் ரெசிபி
by vijivedachalam
New Tamil Jokes - Penmai.comToday,
பொதுவாக பலருக்கு சரியான பக்குவத்தில் சிக்கன் புலாவ் செய்யத் தெரியாது. அதிலும் எளிமையான முறையில் செய்யத் தெரியாமல் இருக்கலாம். குறிப்பாக இந்த ரெசிபி பேச்சுலர்களுக்கு எளிமையானதாக இருக்கும். சரி, அந்த சிக்கன் புலாவ் ரெசிபியைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 கப்
சிக்கன் - 250 கிராம் (சிறிதாக வெட்டியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான
அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அரிசியை நன்கு கழுவி, 2 கப் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் அதில் பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, தக்காளியைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்பு மிளகாய் தூள், மல்லி தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து கழுவி வைத்துள்ள சிக்கனைப் போட்டு, 4-5 நிமிடம் வதக்க வேண்டும். இறுதியில் ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீருடன் சேர்த்து குக்கரில் ஊற்றி கிளறி, மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கினால், எளிமையான சிக்கன் புலாவ் ரெடி!!!
Show commentsOpen link
No comments:
Post a Comment