My Blog List

Showing posts with label கத்திரிக்காய். Show all posts
Showing posts with label கத்திரிக்காய். Show all posts

Sunday, 29 September 2013

கத்திரிக்காய் பாசிப்பருப்பு கூட்டு - Brinjal moong dal curry

கத்திரிக்காய் மிளகூட்டல் / கத்திரிக்காய் பாசிப்பருப்பு கூட்டு / Brinjal moong dal curry
by Asiya Omar
சமைத்து அசத்தலாம்
Tamil samayal kurippugal
கத்திரிக்காய் எப்பவும் வீட்டில் இருக்கும் காய்கறிகளுள் ஒன்று. கத்திரிக்காய் வைத்து காரம்,புளிப்பாய் தான் குழம்பு,கறி செய்வோம். காரம்,குறைவான,புளிப்பில்லாத இந்த கூட்டை இன்று முயற்சி செய்து பார்த்தேன். இந்த மிளகூட்டலை, கேரட்,பீன்ஸ்,கோஸ் வைத்தும் செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்;
பாசிப்பருப்பு - அரை கப்
பிஞ்சு கத்திரிக்காய் - 200 கிராம்
மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
அரைக்க:
சீரகத்தூள் அல்லது சீரகம் - அரை டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் -  2 டீஸ்பூன்
கடுகு - அரைடீஸ்பூன்
கருவேப்பிலை - 2 இணுக்கு.
செய்முறை:
 தேவையான பொருட்களை ரெடி செய்யவும்.
 கத்திரிக்காயை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
 தேங்காய், வெங்காயம்,சீரகம் அரைத்து எடுக்கவும்.
 பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
 தேவைக்கு தண்ணீர் சேர்த்து அடுப்பை பற்ற வைக்கவும். பருப்பு பாதி வேக்காடு வெந்த பின்பு நறுக்கிய கத்திரிக்காய் சேர்க்கவும்.
 மஞ்சள் பொடி,மிளகாய்ப்பொடி சேர்க்கவும்.
 தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு வேக விடவும்.
 வெந்த பின்பு அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.நன்கு ஒரு சேர கொதிக்க விடவும்.
 கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.
கலந்து விட்டு பரிமாறவும்.
சுவையான கத்திரிக்காய் மிளகூட்டல் ரெடி.
இது பத்தியக்கறி போல் மைல்டாக இருக்கும், தக்காளி,புளி சேர்க்கவில்லை.சூடு சாதத்தில் பிரட்டி சாப்பிட சூப்பராக இருக்கும். சப்பாத்தி, பூரிக்கு நன்றாக இருக்கும்.
பிடித்திருந்தால் ஒரு மாற்றத்திற்கு செய்து பார்க்கலாம்.
Show commentsOpen link

Tuesday, 19 February 2013

கத்திரிக்காய் கீமா மசாலா

இதுவரை நிறைய மசாலாக்களைப் பார்த்திருப்போம். பொதுவாக மசாலாக்கள் அனைத்தும் சாதம் மற்றும் சப்பாத்திக்கு ஏற்றதாக இருக்கும். சிலருக்கு ஒரே மாதிரியான மசாலாவை செய்மு போர் அடித்திருக்கும்.
அத்தகையவர்களுக்கு சற்று வித்தியாசமான முறையில் கத்திரிக்காய் கீமா மசாலாவை ஈஸியான முறையில் எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து, உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 8 (சிறியது)
பச்சை பட்டாணி - 1/4 கப் (வேக வைத்தது)
வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (கீறியது)
புளி சாறு - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை- 1
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து, தட்டுப் போட்டு மூடி வைத்து நன்கு வேக வைக்க வேண்டும்.
பின்பு அதில் புளி சாற்றை விட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகப் பொடி போட்டு நன்கு கிளற வேண்டும்.
பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, மசாலாவை மூடி வைத்து 5-10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
மசாலாவானது ஓரளவு கெட்டியானதும், அதில் பச்சை பட்டாணி சேர்த்து சிறிது நேரம் கிளறி, பின்னர் அதனை இறக்கி, ஒரு முறை லேசாக மசித்து, இறுதியில் கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்க வேண்டும்.
இப்போது சுவையான கத்திரிக்காய் கீமா மசாலா ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Popular Posts

Popular Posts