My Blog List

Saturday, 28 September 2013

சுரைக்காய் பொரியல் / Bottle gourd stir fry

சுரைக்காய் பொரியல் / Bottle gourd stir fry
by tamil
சமைத்து அசத்தலாம்
சுரைக்காய் எங்கள்  வீட்டில் அனைவருக்கும் பிடித்த காய்கறிகளுள் ஒன்று.மாதம் இரு முறையாவது மெனுவில் வரும்.
இதோ சுவையான சுரைக்காய் பொரியல் உங்களுக்காக:சைடு பாரில் இருக்கும் சுரைக்காயை கிளிக் செய்தால் மற்ற சுரைக்காய்
குறிப்புக்களைப்  பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்;
சுரைக்காய் - 400 கிராம்.( முழுசு - பிஞ்சாக இருக்கும்)
( தோல் சீவி, கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும், பிஞ்சு சுரைக்காயாக இருந்தால் விதை அவ்வளவாக இருக்காது.நான் விதை நீக்குவதில்லை)
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் ( ஒரு மணி நேரம் ஊறவைத்தது)
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 1
நறுக்கிய வெங்காயம் - மீடியம் சைஸ் - 1
கருவேப்பிலை - 2 இணுக்கு.
கொர கொரப்பாக அரைக்க:
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
பச்சை மிள்காய் - 2
சீரகம் -அரை டீஸ்பூன் 
அலங்கரிக்க -நறுக்கிய மல்லி இலை சிறிது.
பரிமாறும் அளவு - 3-4 நபர்கள்.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்து வரும் பொழுது கடுகு,உளுத்தம் பருப்பு,வற்றல்,கருவேப்பிலை போட்டு வெடிக்கவும்,நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.நன்கு வதக்கவும்.நறுக்கிய சுரைக்காய், ஊறவைத்த பாசிப்பருப்பு சேர்த்து பிரட்டி விடவும்.அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.மூடி போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.சுரைக்காயும் பாசிப்பருப்பும் ஒற்றை ஒற்றையாய் வெந்து வரும்.உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
வெந்து இப்படி காணப்படும். 
கொரகொரப்பாக  அரைத்த தேங்காய்,மிளகாய்,சீரகம்  அரவையை சேர்க்கவும்.சட்னி மாதிரி அரைத்து விடக் கூடாது.முதலில் மிளகாய் சீரகம் போட்டு  அரைத்து விட்டு பின்பு தேங்காய் துருவல் போட்டு ஒரே சுற்று அவ்வளவு தான்.
(அரைக்காமல் அப்படியே தேங்காய் துருவல் சேர்ப்பதாய் இருந்தால் சீரகத்தை தாளிப்பில் சேர்த்து,பச்சை மிளகாயை கீறி போடவும்,முழுச்சீரகம் சேர்க்கப் பிரியபடாத்வர்கள்  சீரகப் பொடி கூட கால் ஸ்பூன் சேர்க்கலாம்,மஞ்சள் பொடி கால் டீஸ்பூன் சேர்த்தும் செய்யலாம். உங்கள் விருப்பம் தான்,.)
 நன்கு சிம்மில் வைத்து ஒரு சேர பிரட்டி விடவும்.
 நறுக்கிய மல்லி இலை சேர்க்கவும்.அடுப்பை அணைக்கவும்.பிரட்டி விட்டு பரிமாறவும்.

இக்குறிப்பை Gayathri's Walk Through Memory Lane @ Priya's Virunthu  -விற்கு அனுப்பி வைக்கிறேன்.
Show commentsOpen link

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts