தேவையானவை:
சௌ சௌ 1
பச்சபயறு 1 கப் (முளைகட்டியது)
தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
பொடி செய்ய:
பொட்டுக்கடலை 1 மேசைக்கரண்டி
நிலக்கடலை 5
flax seeds 1 மேசைக்கரண்டி
எள் 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 1
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 கொத்து
----------
சௌ சௌ � ��ோலை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சபயற்றை எட்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து ஒரு மெல்லிய ஈரத்துணியால் மூடினால் இரண்டு நாளில் முளைகட்டி விடும்.
முடியாவிட்டால் முளைகட்டிய பச்சபயறு எல்லா கடைகளிலும் கிடைக்கும்.
-------
சௌ சௌ ஐ Microwave bowl ல் வைத்து ' H' ல் இரண்டு நிமிடம் வைத்து எடுத்தால் வெந்துவிடும்.
தேவையான உப்பு சேர்� �்து மீண்டும் அரை நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
முளைகட்டிய பயற்றை அதே போல இரண்டு நிமிடம் வைத்து விட்டு மீண்டும் தேவையான உப்பு சேர்த்து அரை நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.
-----
பொடி செய்ய வேண்டியவைகளை எண்ணயில்லாமல் லேசாக வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.
flax seed (rich in Omega-3 fatty acids) எள் இரண்டையும் நாம் தின சமையலில் சேர்ப்பதில்லை.அதனால் பொரியலில் சேர்த்திருக்கிறேன்.
-----
வாணலியில் எண்ணய் வைத்து தாளிக்க வேண்டியவைகள தாளித்து ரெடியாக உள்ள சௌ சௌ,முளைகட்டிய பச்ச பயறு இரண்டையும் சேர்த்து கிளறவேண்டும்.
தயாராக வைத்துள்ள பொடியை சேர்த்து இறக்குவதற்கு முன்பு தேங்காய் துருவலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவேண்டு