My Blog List

Showing posts with label குழம்பு. Show all posts
Showing posts with label குழம்பு. Show all posts

Thursday, 3 October 2013

மணத்தக்காளிக் குழம்பு / Manathakkali Kuzhambu

மணத்தக்காளிக் குழம்பு / Manathakkali Kuzhambu
by Omar

இந்தச் செவ்வாய் தமிழர் சமையலுக்கு என்னுடைய பகிர்வு மணத்தக்காளிக் குழம்பு. நீங்களும் ஃப்ரெஷ் மணத்தக்காளி கிடைத்தால் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்;
மணத்தக்காளி - ஒரு கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு.

தாளிக்க:
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்ப்பூன்
பெருங்காயப்பொடி - 2 பின்ச்
கருவேப்பிலை - 2 இணுக்கு
சின்ன வெங்காயம் - நறுக்கியது - 10

வறுத்து அரைக்க:
மிளகாய் வற்றல் -3 அல்லது 4
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2  டேபிள்ஸ்பூன்

செய்முறை:
மணத்தக்காளி காயை காம்பு நீக்கி நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைக்கவும்.

 ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வற்றல், உளுத்தம் பருப்பு,துவரம் பருப்பு,மிளகு நன்கு மணம் வரும் படி சிவற வறுக்கவும்,அத்துடன் தேங்காய் துருவலும் சேர்த்து லேசாக வதக்கவும்.


 ஆற விடவும்.

 சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விடவும்.காய்ந்து வரும் பொழுது கடுகு,கருவேப்பிலை,வெடிக்கவும் பெருங்காயம்,சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். அடுத்து சுத்தம் செய்த மனத்தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

 புளித்தண்ணீர்,தேவைக்கு  உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும், மணத்தக்காளி வெந்த பின்பு அரைத்த மசால் சேர்க்கவும்.ஒரு சேர கொதிக்கட்டும். குழம்பு கெட்டியாகும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.விரும்பினால்  சிறு துண்டு வெல்லம் சேர்க்கலாம்.

 எண்ணெய் மேலெழும்பி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.சிறிது மூடி வைக்கவும்.

 சுவையான மணத்தக்காளி குழம்பு ரெடி.இத்துடன்சுடு  சாதம் பொரித்த அப்பளம்,கூட்டு என்று பரிமாறினால் சூப்பராக இருக்கும்.

தமிழ் நாட்டுக் கிராமங்களில் இந்த மணத்தக்காளியில் குழம்பு,கீரைக் கூட்டு, வற்றல் குழம்பு என்று பாரம்பரியமாக சமைப்பது வழக்கம். சத்து நிறைந்த இந்த மணத்தக்காளி வாய்ப்புண்,வயிற்றுப்புண்ணிற்கு  ஒரு நல்ல மருந்து.பசியைத் தூண்டும்.நீங்களும் செய்து பாருங்க.

இக்குறிப்பை
TST - தமிழர் சமையல் செவ்வாய்க் கிழமை இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.
மற்றும் இக்குறிப்பை Gayathri's Walk Through Memory Lane @ Priya's Virunthu  -விற்கும் அனுப்பி வைக்கிறேன்.

Show commentsOpen link

Sunday, 29 September 2013

மல்வானி இறால் குழம்பு malwani iraal kulammpu tamil samayal kurippu

மல்வானி இறால் குழம்பு
by Marikumar
Tamil samayal kulampu vagaigal
மல்வானி இறால் குழம்பு ஒரு மகாராஷ்டிரா ஸ்டைல் ரெசிபிக்களில் ஒன்று. இந்த மல்வானி ரெசிபியின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் தேங்காயை அதிகம் பயன்படுத்துவது தான். எனவே இந்த வாரம் சிக்கன், மட்டன் என்று செய்யாமல், சற்று வித்தியாசமாக இறாலை வாங்கி வந்து, மல்வானி ஸ்டைல் இறால் குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
இதனை செய்முறை மிகவும் எளிமையானது. மேலும் இதனை செய்தால், வீட்டில் உள்ளோரிடம் நல்ல பாராட்டைப் பெறலாம். சரி, இப்போது அந்த மல்வானி இறால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
இறால் - 500 கிராம்
புளிச் சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 3-4 பற்கள் (தட்டியது)
தேங்காய் பால் - 1 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்ழுன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
மசாலாவிற்கு...
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்ன
சோம்பு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பச்சை ஏலக்காய் - 2
பட்டை - 1
வரமிளகாய் - 2
கிராம்பு - 3
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது உப்பு தூவி, பிரட்டி தனியாக வைத்து விட வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய், சோம்பு, மல்லி, வெந்தயம் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் வெங்காயம் மற்றும் தேங்காய சேர்த்து 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி, இறக்க வேண்டும்.
கலவையானது குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாகவும் மென்மையாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்த்தும், தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கி, மஞ்சள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறிவிட்டு, இறாலை போட்டு, குறைவான தீயிலேயே 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் புளிச்சாற்றினை ஊற்றி, கரம் மசாலா தூவி கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான மல்வானி இறால் குழம்பு ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
Share |
Show commentsOpen link

Friday, 27 September 2013

முட்டை கருவாடு மிளகு குழம்பு muttai karuvadu mizhaku kulampu

முட்டை கருவாடு மிளகு குழம்பு
by naliniselva
New Tamil  samayal kurippugal
"முட்டை கருவாடு மிளகு குழம்பு செய்யும் முறை:
தேவையான பொருட்கள்
வஞ்சிரம் கருவாடு : 3 துண்டு
முட்டை : 3
மிளகு சீரகம் : 25 கிராம்
நாட்டு பூண்டு : 30 பல்
நல்லெண்ணை : 50 கிராம்
புளி : எலுமிச்சம்பழம் அளவு
உப்பு : தேவையான அளவு
செய்முறை:
மிளகு சீரகத்தை தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். பூண்டை உரித்து அதில் பாதியை ஒன்றிரண்டாக தட்டிக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணை ஊற்றி அதில் முழுதாக உள்ள பூண்டை வதக்கவும். பிறகு தட்டிய பூண்டையும் வதக்கி அதனுடன் அரைத்து வைத்துள்ள மிளகுசீரகத்தை போட்டு நன்றாக வதக்கி கருவாடையும் போட்டு பொரிந்தவுடன் புளியை கரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து முட்டையை உடைத்து ஊற்றி வாணலியை மூடி வைத்து முட்டையை வேகவிடவும். சிறிது நேரம் கழித்து முட்டையை திருப்பி போட்டு வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான முட்டை கருவாடு மிளகு குழம்பு தயார்.
குறிப்பு : இந்த குழம்பிற்கு நல்லெண்ணை தான் ஊற்றவேண்டும். குழம்பில் அதிகம் தண்ணீர் ஊற்றக் கூடாது.
Attached Images

Show commentsOpen link

Friday, 17 May 2013

காரைக்குடி மீன் குழம்பு

காரைக்குடி மீன் குழம்பு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
மீன் – 1 /2 கிலோ
புளி – எலுமிச்சை அளவு
பூண்டு – 15  பல்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1  1 /2 – 2  தேக்கரண்டி
மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
அரைக்க
தேங்காய் துருவியது – 1 /4  கப்
மிளகு – 10  – 15
சீரகம் – 2  தேக்கரண்டி
கருவேப்பிலை – 2  கொத்து
தாளிக்க
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
மிளகு -  1 /2 தேக்கரண்டி
வெந்தயம் – 10
கருவேப்பிலை – ஒரு கொத்து
நல்லெண்ணெய் – 1 /4 கப்



செய்முறை
புளியை  1 /2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
தேங்காய், மிளகு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நடுத்தர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மீனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கடாயில் என்னை ஊற்றி சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து 2  நிமிடங்கள் வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.
பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும்.
வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து 10  நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்.
குறிப்பு
மீன் குழம்பு சாதத்துடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
மீன் துண்டுகளை இறுதியாக குழம்பில் சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் மீன் குழம்பில் கரைந்து விடும்.

Popular Posts

Popular Posts