My Blog List

Wednesday, 20 February 2013

சிக்கன் டிக்கா பிரியானி

பஞ்சாபி உணவுகளில் மிகவும் பிரபலமானது சிக்கன் டிக்கா. போன்லெஸ் சிக்கனுடன் சில மசாலாக்கள் மற்றும் தயிர் கலந்து ஊற வைத்து skewers(குச்சியில்) சொருகி ஓவனில் சுட்டு எடுக்கப்படும் உணவு தான் இந்த டிக்கா. இன்று உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஆரம்ப உணவுகளில் இந்த டிக்கா இல்லாமல் இருப்பதில்லை.
சிக்கன் டிக்கா தனியாக தான் எப்பொழுதும் செய்து சாப்பிட்டு இருக்கிறேன்.. ஆனால் பிரியாணியுடன் செய்ததில்லை.. முதல் முறையாக பிரியாணியுடன் செய்து பார்த்தேன் மிக மிக ருசியாக இருந்தது.. நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்..
தேவையான பொருட்கள்:
டிக்கா செய்ய தேவையான பொருட்கள்:
போன்லெஸ் சிக்கன்1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
தயிர்-1/2கப்
சிக்கன் டிக்கா மசாலாத்தூள் - 2 அல்லது3 தேக்கரண்டி
ரெட் பூட் கலர்- 1 சிட்டிகை
பெப்பரிக்க பவுடர் - 1ஸ்பூன்
எலுமிச்சை சாறு -1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய்/உருக்கிய பட்டர் - 2 தேக்கரண்டி
skewers - 3
சிக்கன் டிக்கா மசாலாத்தூள்
தனி மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
தனியாத்தூள் -1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/2ஸ்பூன்
மிளகுத்தூள் -1/2ஸ்பூன்
சோம்புத்தூள் - 1/2ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/2ஸ்பூன்
ரெடிமேட் தூள்ளுக்கு பதில் இந்த மசாலா பயன்படுத்தலாம

செய்முறை:
* சிக்கனை2 இன்ச் அளவுக்கு சதுரமாக நறுக்கி வைக்கவவும்.
* அதில் தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், டிக்கா மசாலாத்தூள், ரெட் பூட் கலர், எலூமிச்சை சாறு, பெப்பரிக்க பவுடர், உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக விரவி 3 மணி நேரம் ஊற வைக்கவும். (8 மணி நேரம் ஊறினால் இன்னும் சுவையாக இருக்கும்)
* skewers குச்சியினை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊர வைக்கவும் (இப்படி வைப்பதால் குச்சி அதிக சூடுல் எறியாமலும், அதே சமையம் குச்சியில் இருந்து சிக்கன் ஈசியாக எடுக்கவும் முடியும்)
* அவனை250 டி முன் சூடு செய்யவும்.
* ஊறிய சிக்கனை skewer குச்சியில் சிறு இடைவெளிவிட்டு ஒன்றன் பின்பு ஒன்றாக சொருகி அவன் ட்ரேயில் அடுக்கி வைக்கவும்.
* 250 டியில்15 நிமிடங்கள் முதலில் வைக்கவும் பிறகு இதனை வெளி எடுத்து திருப்பி 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும் ( அதிக நேரம் அவனில் வைக்காமல் 3/4 பாகும் வெந்தவுடன் எடுத்துவிடவும்)

பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்;
நீட்டமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2 + 1
நறுக்கிய தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1-2 தேக்கரண்டி
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
சோம்புத்தூள் - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் -2
மஞ்சள்த்தூள் - 1/2ஸ்பூன்
எலூமிச்சை சாறு - 1/2 மூடி
ஆரஞ்சு பூட் கலர் - ஒரு சிட்டிகை
கொத்தமல்லி - 1/2கட்டு
,புதினா-1/4கட்டு
நெய்/ எண்ணெய் - 100 கிராம்+ 100 கிராம்
பட்டர்/ நெய் -50கிராம்
பாஸ்மதி அரிசி - 3 கப்
தாளிக்க:
பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஜ்ஜி இலை - தலா- 2 + 2
ஷா ஜீரா - 1ஸ்பூன்+ 1 ஸ்பூன்
செய்முறை:
* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நீட்டமாக நறுக்கிய ஒரு வெங்காயத்தினை நன்றாக ப்ரவுன் கலரில் பொறித்து தனியாக வைக்கவும்.
* பாஸ்மதி அரிசியினை 25 நிமிடங்கள் பச்சை தண்ணீரில் ஊறவைக்கவும். 25 நிமிடங்கள் கழித்து தண்ணீர் வடி கட்டிவிட்டு வாணலியில் பட்டர்/நெய் ஊற்றி சிறுது காய்ந்தவுடன் அரிசியினை 5 நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்.
* வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு ஏலக்காய் ,ப்ரிஜ்ஜி இலை, ஷாஜீரா, உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். கொதி வரும் பொழுது வறுத்த அரிசியினை போட்டு 3/4 பாகம் அரிசி வெந்தவுடன் வடிகட்டி தனியாக வைக்கவும்.
* கடாயில் நெய்/எண்னெய் ஊற்றி காய்ந்த பின்பு தாளிக்க வேண்டிய வாசனை பொருட்கள் போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும் பச்ச வாசனை போன பிறகு தக்காளி மற்றும் மசாலாத்தூள்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வேக வைக்கவும் உப்பு தேவைக்கு போடவும் ( தனி தனியாக உப்பு போடுவதால் கவனமாக உப்பு சேர்க்கவும்) கொத்தமல்லி, புதினா சேர்த்து கலந்து சிம்மிலே 5- 10 நிமிடங்கள் வேக வைத்து அனைக்கவும்.

தம் போடும் முறை:
* அடிகணமான பாத்திரத்தில் பொறித்த வெங்காயம் தூவி அதன் மீது வெங்காய தக்காளி கலவையினை பரவலாக சேர்த்து அதன் மீது 5- 6 சிக்கன் டிக்கா துண்டுகளை வைக்கவும். இதன் மேலே பாஸ்மதி சாதம் போடவும். அடுத்த லேயர் பொறித்த வெங்காய்ம், தக்காளி கலவை, சிக்கன் துண்டுகள் என்று வைக்கவும். இரண்டு லேயர் வைக்கவும் மேல் லேயரில் சாதம் போட்டு அதன் மீது பொறித்த வெங்காயம் தூவி அதன் மீது எலூமிசை சாறில் கலர் கலந்து சுற்றி வரை ஊற்றவும்.
* பாத்திரத்தின் மேலே பாயில் பேப்பர் போட்டு அதன் மீது இருக்கமாக மூடியினை மூடி 10 நிமிடங்கள் ஹையில் வைக்கவும்.அதன் பிறகு15 நிமிடங்கள் சிம்மில் வைத்து அனைக்கவும்.

Tuesday, 19 February 2013

மாங்காய் சாதம்

தற்போது அனைவருமே வேலைக்கு செல்வதால், பெரும்பாலானோர் டிபன் செய்து சாப்பிடுவதை விட, கலவை சாதம் செய்து சாப்பிடத் தான் விரும்புகின்றனர். இதற்கு காரணம், வேலைக்கு சென்று விட்டு, காலையில் வேகமாக எழுந்து கஷ்டப்பட்டு டிபன் செய்தால், அதை மதிய வேளையில் சாப்பிட முடியாமல் இருக்கிறது. எனவே தான் கலவை சாதத்தை பலரும் செய்கின்றனர்.
அதிலும் தற்போது மாங்காய் சீசன் என்பதால், மாங்காய் விலை மலிவாக கிடைக்கும். எனவே அதற்கேற்றாற் போல் மாங்காயை வைத்து, எளிதான முறையில் ஒரு கலவை சாதத்தை செய்யலாம். இந்த மாங்காய் சாதம் அனைவருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும். இப்போது அந்த மாங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மாங்காய் - 1 கப் (துருவியது)
பாசுமதி அரிசி - 1 கப் (வேக வைத்தது)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 இன்ச் (நறுக்கியது)
வரமிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கிய இஞ்சி, வர மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு துருவிய மாங்காய், உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் பாசுமதி அரிசியைப் போட்டு, கிளறி இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான மாங்காய் சாதம் ரெடி!!!

கத்திரிக்காய் கீமா மசாலா

இதுவரை நிறைய மசாலாக்களைப் பார்த்திருப்போம். பொதுவாக மசாலாக்கள் அனைத்தும் சாதம் மற்றும் சப்பாத்திக்கு ஏற்றதாக இருக்கும். சிலருக்கு ஒரே மாதிரியான மசாலாவை செய்மு போர் அடித்திருக்கும்.
அத்தகையவர்களுக்கு சற்று வித்தியாசமான முறையில் கத்திரிக்காய் கீமா மசாலாவை ஈஸியான முறையில் எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து, உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 8 (சிறியது)
பச்சை பட்டாணி - 1/4 கப் (வேக வைத்தது)
வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (கீறியது)
புளி சாறு - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை- 1
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து, தட்டுப் போட்டு மூடி வைத்து நன்கு வேக வைக்க வேண்டும்.
பின்பு அதில் புளி சாற்றை விட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகப் பொடி போட்டு நன்கு கிளற வேண்டும்.
பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, மசாலாவை மூடி வைத்து 5-10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
மசாலாவானது ஓரளவு கெட்டியானதும், அதில் பச்சை பட்டாணி சேர்த்து சிறிது நேரம் கிளறி, பின்னர் அதனை இறக்கி, ஒரு முறை லேசாக மசித்து, இறுதியில் கொத்தமல்லி சேர்த்து அலங்கரிக்க வேண்டும்.
இப்போது சுவையான கத்திரிக்காய் கீமா மசாலா ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

சௌ சௌ கூட்டு


சௌ சௌ கூட்டு



தேவையான பொருட்கள்:
========================

சௌ சௌ - இரண்டு
பாசி பருப்பு - அரை கப்
பச்சை மிளகாய் - பத்து
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
உப்பு  - தேவையான அளவு
மிளகாய் வற்றல் - இரண்டு
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

கால் டீஸ்பூன் எண்ணையில் வறுத்து பொடிப்பதற்கு :
================================================

மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்

தாளிப்பதற்கு:
----------------------

தேங்காய் எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
 தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:
===========

* சௌ சௌவை தோல் சீவி சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளியை நான்கு துண்டுகளாகி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் நருக்கிய சௌ சௌ,தக்காளி,கீறிய பச்சை மிளகாய்கள் ,கறிவேப்பிலை,உப்பு,மிளகாய் வற்றல் மஞ்சள் தூள் சேர்த்து எல்லாம் மூழ்கும் அளவு நீர் சேர்த்து பருப்பு வேகும் வரை கொதிக்க விடவும்.

* நீர் வற்ற வற்ற சேர்த்து கொள்ளவும்.

* பருப்பு வெந்ததும் கூட்டிற்கு தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிப்பதை தாளித்து கூட்டில் கொட்டவும்.

* மிளகு சீரக பொடியை சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.

எந்தக் காயை எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?

பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது.  

அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதமாக கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப்பெட்டியான பிரிட்ஜ் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வாரத்திற்கு ஒரு முறை கடைக்கு சென்று உணவுப்பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது. பிரிட்ஜில் 4 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது அவசியம்.

பிரிட்ஜில் வைக்கும் உணவு பொருட்கள் பற்றி தகவல்:

பழங்கள்:

திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்

ஆப்பிள் - ஒரு மாதம்

சிட்ரஸ் பழங்கள் - 2 வாரங்கள்

அன்னாசி - 1 வாரம்

காய்கறிகள்:

பிரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்

முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள்

வெள்ளரிக்காய் - ஒரு வாரம்

தக்காளி 1-2 நாட்கள்

காலிபிளவர், கத்தரிக்காய் - 1 வாரம்

காளான் 1-2 நாட்கள்

அசைவ உணவுகள்:

சமைத்த மீன் 3-4 நாட்கள்

பிரஷ் மீன் 1-2 நாட்கள்

ஓட்டுடன் கூடிய நண்டு - 2 நாட்கள்

பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள்.

டீன்ஏஜ் பெண்களா நீங்கள்?

டீன்ஏஜ் பெண்களா நீங்கள்?

டீன்ஏஜ் பெண்கள் காலத்திற்கேற்ப உணவும் ட்ரன்டு ஆக சாப்பிட ஆரம்பித்து விட்டனர். பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் பெண்கள் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு இப்போதெல்லாம் நேரமே ஒதுக்குவதே இல்லை.

பெண்கள் சத்தான உணவுகளை சரிவர உட்கொள்வதில்லை. பசியெடுத்தால் உடனே ட்ரன்டு உணவான பிட்சா, பர்கர், எண்ணெயில் ஊறிய பொருட்களை சாப்பிடுவது ஸ்டைல் என்று நினைக்கின்றனர். இதனால் ஏற்படும் பின்விளைவுகளை நினைத்து பார்ப்பதே இல்லை. எந்த நோயும் வருவதற்கு முன் நம்மை பாதுகாக்க வேண்டும்.

பெரும்பாலான பெண்கள் காலை உணவை எடுத்து கொள்வதே இல்லை. காலை உணவை எடுக்காததால் பெண்களுக்கு அயன் குறைபாடு ஏற்படுகிறது. அயன் குறைபாடு ஏற்பட்டால் இரத்த சோகை, சோர்வு, மறதி, ஆர்வமின்மை, முடி கொட்டுதல் ஆகிய பிரச்னைகள் படிப் படியாக ஏற்படுகிறது.

சைவ உணவு உண்பவர்களை விட அசைவ உணவு உண்பவர்களுக்கு மிக அதிக அளவில் இரும்புச்சத்து கிடைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அசைவ உணவை சாப்பிடாதவர்கள் அதிகளவு காய்கறிகள், கீரை வகைகள் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

முருங்கைக்கீரை, அகத்திக் கீரை, அரைக்கீரை, புதினா, பொன்னாங்கண்ணிக் கீரை போன்ற கீரைகளில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. பருப்பு வகைகள் எடுத்து கொள்ளலாம். பழவகைகளில் பேரீச்சை, அத்திப்பழம் ஆகியவற்றில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. பெண்கள் தினம் ஒரு முட்டையை எடுத்து கொள்ளலாம். பால், தயிர் ஆகியவற்றில் வைட்டமீன் சத்து அதிகம் உள்ளது. மீன் கண், சருமம், முடியை பளபளப்பாக்கும் தன்மையுடையது. இறைட்சியை அவ்வப்போது உணவில் எடுப்பது நல்லது. பெண்கள் இது போன்ற சத்தான ஆகாரங்களை நேரம் ஒதுக்கி எடுத்து கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும். அப்பரம் என்ன நோயில்லமல் 100வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.

Popular Posts

Popular Posts