My Blog List

Tuesday 19 February 2013

மாங்காய் சாதம்

தற்போது அனைவருமே வேலைக்கு செல்வதால், பெரும்பாலானோர் டிபன் செய்து சாப்பிடுவதை விட, கலவை சாதம் செய்து சாப்பிடத் தான் விரும்புகின்றனர். இதற்கு காரணம், வேலைக்கு சென்று விட்டு, காலையில் வேகமாக எழுந்து கஷ்டப்பட்டு டிபன் செய்தால், அதை மதிய வேளையில் சாப்பிட முடியாமல் இருக்கிறது. எனவே தான் கலவை சாதத்தை பலரும் செய்கின்றனர்.
அதிலும் தற்போது மாங்காய் சீசன் என்பதால், மாங்காய் விலை மலிவாக கிடைக்கும். எனவே அதற்கேற்றாற் போல் மாங்காயை வைத்து, எளிதான முறையில் ஒரு கலவை சாதத்தை செய்யலாம். இந்த மாங்காய் சாதம் அனைவருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும். இப்போது அந்த மாங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
மாங்காய் - 1 கப் (துருவியது)
பாசுமதி அரிசி - 1 கப் (வேக வைத்தது)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 இன்ச் (நறுக்கியது)
வரமிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் நறுக்கிய இஞ்சி, வர மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு துருவிய மாங்காய், உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்பு அதில் பாசுமதி அரிசியைப் போட்டு, கிளறி இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான மாங்காய் சாதம் ரெடி!!!

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts