My Blog List

Monday, 27 August 2012

சாம்பார் வெங்காயம் புளிக் கூட்டு

சாம்பார் வெங்காயம் புளிக் கூட்டு

சாம்பார் வெங்காயம் புளிக் கூட்டு

தேவையானவை 

  • 150 கிராம் சாம்பார் வெங்காயம்
  • எலுமிச்சை அள� ��ு புளி
  • 2 டேபிள்ஸ்பூன் துவரம் பருப்பு 
  • 1/4 டீஸ்பூன் கடுகு ,கடலை பருப்பு ,உளுத்தம் பருப்பு,மஞ்சள்தூள் 
  • கறிவேப்பிலை ,எண்ணெய் ,உப்பு தேவையான அளவு 

வறுத்து அரைக்க

  • 1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு 
  • 1 டீஸ்பூன் தனியா
  • 3 வர மிளகாய் 
  • 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்

செய்முறை 

      அரைக்க எடுத்தவ ற்றை சிறிது எண்ணெயில் வறுத்து அரைக்கவும்.
துவரம்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.புளியைக் கரைத்து
கொள்ளவும்.சாம்பார் வெங்காயத்தை வதக்கி,புளிக் கரைசல் விட்டு வேக வைக்கவும்.அரைத்த பொடியை அதில் போட்டு கொதிக்க விடவும்.பிறகு வேக வைத்த பருப்பு ,உப்பு சேர்த்து நன்றாக கொதித்ததும் இறக்கவும்.எண்ணெயில் கடுகு ,கடலை பருப்பு,உள்ளுதம் பருப்பு,கறிவேப்பிலை  தா ளித்துக் கொட்டவும்.
Keyword : Kootu recipe

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts