பாசிப்பருப்பு – 400 கிராம்
முருங்கைக்கீரை – 1 கப்
சிறிதாக நறுக்கிய வல்லாரை கீரை – 1 கப்
பெரிய வெங்காயத் துருவல் – 1 கப்
இஞ்சி விழுது – சிறிது
பச்சை மிளகாய் – 1/4 கப்
கொத்தமல்லிததழை – 1/4 கப்
கேரட் துருவல் – 1/2 கப்
கடுகு – 1/2 டீஸ்பூன்
ரீஃபைண்ட் ஆயில் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
பாசிப்பருப்பை ஊறவைத்து சற்று உலர்ந்தவுடன் மிக்ஸியில் மூன்று நிமிடம் கொடுத்து தூளாக்கி தனியே வைத்துக் கொள்ளவும். முருங்கைக் கீரை,
வல்லாரைக் கீரை ஆகியவற்றை சிறிது உப்பு சேர்த்து தனித்தனியே வேக வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு நன்கு பொரிந்ததும், இஞ்சி விழுதைச் சேர்த்து வதக்கவும். பின் வெங்காயத்தையும் சேர்த்துப் பொன்னிறமாக வறுபட்டதும் பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை ஆகியவற்றைப் போட்டுக் கிளறி இறக்கிற விட வேண்டும். இக்கலவை, வேகவைத்துள்ள முருங்கைக்கீரை, வல்லாரைக் கீரை ஆகியவற்றை
பாசிப்பருப்புத் தூளுடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ள வேண்டும். ருசிக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இப்போது மிக்ஸ்டு புட்டு மாவு ரெடி.
இதை புட்டுக்குழலில் மேலும் கீழும் கேரட் துருவலைத் தூவி மூடி வேக வைத்து பரிமாறலாம்.
இதன் சிறப்பு:
* புரதம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம் என பல சத்துகள் நிறைந்தது. சர்க்கரை, ரத்த அழுத்த நோயாளிகள் உள்பட அனைவருக்கும் ஏற்றது.
* காலை, மாலை டிபனுக்கு உகந்தது.
* குழந்தைகளின் நினைவுத்திறனை மேம்படுத்தும்.
* கீரை பிடிக்காத குட்டீஸையும் இதன் ருசி சாப்பிட வைத்துவிடும்.
No comments:
Post a Comment