My Blog List

Saturday, 31 August 2013

மெல்லிடை மேனிக்கு வெங்காயப் பச்சடி!

தமிழால் இணைவோம்:
மெல்லிடை மேனிக்கு வெங்காயப் பச்சடி!

நம்ம தமிழ்நாட்டு சமையல் கட்டுல வெங்காயம் இல்லாம ஒரு வேலையும் நடக்காது. அந்த அளவுக்கு நம்ம உணவுல வெங்காயம் ஐக்கியமாகிப் போன ஒன்னு வெங்காயத்துக்கு இருக்கிற மருத்துவ குணமே தனிதான். வெங்காய சாம்பார், வெங்காய வடகம், வெங்காயச் சட்னி, வெங்காயப் பச்சடி என வெங்காய உணவுகள் பட்டியல் ரொம்ப நீளமானது.

சில வினாடிகள் நேரத்தில் தயார் செய்யப்படும் வெங்காயப் பச்சடிக்கு உள்ள சிறப்பே சிறப்புதான்.

வெங்காயத்தைக் குறுக குறுக அறிஞ்சு, அதில் மோர் விட்டுக் கலந்து கொஞ்சம் உப்பு, மிளகு சீரகம் போட்டு தாளிச்சிட்டா வெங்காயப் பச்சடி தயார். பகல் உணவில் இதை ஒரு அங்கமா எடுத்துக்கிட்டு சாப்பிடலாம்.

பொதுவாக வெங்காயம் நச்சுக்கிருமிக் கொல்லியாக உடம்பை மெலிதாக்க குரலை இனிமையாக்கி, விஷக்கடி, குழிப்புண்களைக் கட்டுப்படுத்த பித்தம் தணிய, மூளை சுறுசுறுப்பாக, கால் கை வலிப்பு நோய் நீங்க, கொழுப்புச் சத்தை கரைக்க, வயிற்றுக் கட்டிகளை நீக்க எனப் பல வகையிலும் பயன்படும். இதன் மகத்துவத்தைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அண்மையில் கிங்ஜார்ஜீ மருத்துவ ஆய்வுக் கழகத்தில் ஆராய்ச்சி செய்தபோது பக்கவாதம் எனப்படும் மூளை, இரத்தக்குழாய் அடைப்பு நோய்க்கு பச்சை வெங்காயம் முழு பலன் தர்றதாக் கண்டுபிடிச்சு சொல்லியிருக்காங்க.

அதுமட்டுமல்ல, புகை, பிடிப்பதால் ஏற்படும் நிகோடின் என்னும் நஞ்சினை முறித்து நுரையீரலுக்கும் இதயத்திற்கும் வலிமையை தருது. இன்னொரு உண்மை ரோமானிய நாட்டில் இடைமெலிந்திருக்க பெண்கள் வெங்காயத்தைப் பயன்படுத்துகிறார்களாம். நீரோ மன்னன் குரல் இனிமைக்காக வெங்காயத்தைத் தினமும் சாப்பிட்டானாம்.

பொதுவாக வெங்காயத்தை எல்லோரும் பயன்படுத்தலாம். தீவிர இரத்த சோகை இருப்பவர்கள் மட்டும் அதிகளவு சாப்பிடுவதை தவிர்க்கணும். 40 வயதுக்கு மேலே ஆனவர்கள். கண்டிப்பா வாரம் இரண்டு முறையாவது வெங்காயத்தை உணவுல சேர்த்துக்கணும்.

Visit our Page -► தமிழால் இணைவோம்

Tuesday, 27 August 2013

கொளுக்கட்டை செய்யும் முறை

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி 1 ஆழாக்கு,

தேங்காய் அரை மூடி

காய்ந்த‌ மிளக்கய் 7 அல்லது 8

பெருங்காயம் சிறிது ,

உப்பு தேவையான‌ அளவு

தாளிக்க‌ தேவையான‌ பொருள்கள்;‍

கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை 1 ஆர்க்கு

செய்முறை

முதலில் அரிசியை  ஒரு மணி நேரம்  ஊற வத்துக் கொள்ளவும்   
தேங்காயை  துருவிக்கொள்ளவும்                                  
அரிசியை மிக்ஸியில்  அல்லது  கல்லுரலில்     போட்டு  உப்பு சேர்த்து கரகரப்பாக‌   அரைத்துக்  கொள்ளவும்   
பிறகு   வாணலியை    அடுப்பிலேற்றி   ஒரு  குழி கரண்டி    சமையல் எண்ணெய்   ஊற்றி  காய்ந்ததும்  கடுகு  உளுத்தம்  பருப்பு   காய்ந்த மிளகாய்  கிள்ளி சேர்த்து  தாளித்து   அரைத்த விழுதினை  சேர்த்து  கையில்  ஒட்டாத‌  பதத்திற்கு   கிளறி   இறக்கவும்   
பிறகு   தேங்காய்  துருவலை  சேர்த்து  னன்கு  கிளறி      ஒரு  சிறிய‌  எலுமிச்சை பழம்   அளவுகளில்     உருட்டி பிடித்து    இட்லி   பானையில்  வேக வைத்து  எடுத்து   சூடாக‌  பரிமாறவும்     
தேவையானால்   தொட்டுக்  கொள்ள‌            தேங்காய்  சட்னி   வைத்துக்  கொள்ளலாம்

Saturday, 24 August 2013

சமையல்: பாதுஷா - badusha

தேவையான பொருட்கள்

மைதா மாவு _ மூன்று கப்
தயிர் ‍_ ஒரு டேபில் ஸ்பூன் அளவு
சமையல் சோடா _ அரை டீஸ் பூன்
சக்கரை _ ஒன்டரைக்கப்
எண்ணைய் _தேவையான‌ அளவு
நெய் _ தேவையான‌ அளவு

செய்முறை

ஒரு அகன்ற‌ பாத்திரத்தில் மைதாமாவை கொட்டி ஒரு கப் நெய்யை உருக்காமல் போட்டு கிளறவும் ..பின்பு
தயிரில் சமையல் சோடாவை நுரைக்க‌ அடித்து மைதாமாவில்
போட்டு பிசைக்கவும்
சக்கரையை அரைக்கப் சிறு தண்ணீர் ஊற்றி பாகுபோல் காச்சவும் ....
மைதாமாவை எலுமிச்சையளவு உருட்டி கொஞ்சம் தட்டையாக்கி நடிவில் கட்டை விரலால் குழிவைத்து எண்ணையில் போட்டு பொரிக்கவும் ...
பின்பு சூடாக‌ இருக்கும் போதே சக்கரைப்பாகுவில் தோய்த்து எடுக்கவும் ...
பாதுஷா.. ரெடியுங்க‌......

இஞ்சி மல்லி காபி - ginjer cofee

சமையல்: இஞ்சி மல்லி காபி [ ginjer cofee]

 தேவையான பொருட்கள்

இஞ்சி 50 கிராம் , தனியா எனப்படும்  கொத்தமல்லி விதை  1 மேசைக்கரண்டி   வெல்லம் ஒரு  சிறிய‌  எலுமிச்சை  அளவு

செய்முறை

இஞ்சியைத்  தோல் சீவி  சிறுசிறு துண்டுகளாக்கி அதனுடன்  தனியாவை சேர்த்து  மிக்சியில் அரைத்து  சாறு  எடுத்துக் கொள்ளவும்   வெல்லத்தைப்  பொடித்து மிக‌  கொஞ்சமாக‌  தண்ணீர் சேர்த்து  அடுப்பிலேற்றி   நன்றாக‌  கரைந்ததும்  எடுத்து வடிகட்டி  மீண்டும்   அடுப்பிலேற்றி  நன்கு  கொதித்தவுடன்  இஞ்சி  சாற்றை ஊற்றி    உடனே  அடுப்பை  அனைத்து விடவும்    காபி  தயார்   அதனுடன்  சிறிது  பாலை  சேர்த்து   பருகவும்                                   சிறு குழந்தைகள் முதல்       பெரியவர்கள் வரை  அனைவரும்   பருகக் கூடிய‌  ந‌ல்ல ஒரு   பான்ம்                                                                                     மாதம்  ஒரு  முறை  பருகினால்  வயிற்றில்   மாந்தம்  சேராது  பித்தத்தினால்  ஏற்படும்  வாந்தியும்   குணமாகும்

 

Popular Posts

Popular Posts