My Blog List

Tuesday, 23 April 2013

மாம்பழத்தில் கேசரி செய்யலாம்

மாம்பழத்தில் கேசரி செய்யலாம் 

மாம்பழ கேசரி  

தேவையான பொருட்கள்:


 ரவை - ஒரு கப்
மாம்பழ கூழ் - அரை கப்
தண்ணீர் - இரண்டரை கப்
சர்க்கரை - ஒன்னரை கப்
நெய் - கால் கப்
மாம்பழ எசன்ஸ் - ஒரு துளி
முந்திரி,திராட்சை - ஒரு டேபிள்ஸ்பூன்



செய்முறை:



* ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை வாசனை வரும் வரை வறுத்து வைக்கவும்.

*  வேறு ஒரு பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி ,திராட்சையை வறுத்து வறுத்த ரவை சேர்த்து நீர் சேர்த்து ரவையை வேக விடவும்.

* ரவை முக்கால்வாசி வெந்ததும் மாம்பழ கூழ் சேர்த்து கிளறி சர்க்கரை ,எசன்ஸ் சேர்த்து கிளறவும்.

* நெய் சேர்த்து கிளறி கேசரி பதம் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு:
=======

* சர்க்கரை சேர்த்ததும் கைவிடாமல் கிளற வேண்டும்.இல்லை என்றால் கடினமாகிவிடும்.
* மாம்பழத்தில் இனிப்பு உள்ளதால் சர்க்கரை அளவாக சேர்க்கவும்.
* இதில் பரிமாறும் முன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தும் பரிமாறலாம்.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts