மணத்தக்காளிக் குழம்பு / Manathakkali Kuzhambu
by Omar
இந்தச் செவ்வாய் தமிழர் சமையலுக்கு என்னுடைய பகிர்வு மணத்தக்காளிக் குழம்பு. நீங்களும் ஃப்ரெஷ் மணத்தக்காளி கிடைத்தால் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்;
மணத்தக்காளி - ஒரு கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு.
தாளிக்க:
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்ப்பூன்
பெருங்காயப்பொடி - 2 பின்ச்
கருவேப்பிலை - 2 இணுக்கு
சின்ன வெங்காயம் - நறுக்கியது - 10
வறுத்து அரைக்க:
மிளகாய் வற்றல் -3 அல்லது 4
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
மணத்தக்காளி காயை காம்பு நீக்கி நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும்.புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வற்றல், உளுத்தம் பருப்பு,துவரம் பருப்பு,மிளகு நன்கு மணம் வரும் படி சிவற வறுக்கவும்,அத்துடன் தேங்காய் துருவலும் சேர்த்து லேசாக வதக்கவும்.
ஆற விடவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விடவும்.காய்ந்து வரும் பொழுது கடுகு,கருவேப்பிலை,வெடிக்கவும் பெருங்காயம்,சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். அடுத்து சுத்தம் செய்த மனத்தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
புளித்தண்ணீர்,தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும், மணத்தக்காளி வெந்த பின்பு அரைத்த மசால் சேர்க்கவும்.ஒரு சேர கொதிக்கட்டும். குழம்பு கெட்டியாகும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.விரும்பினால் சிறு துண்டு வெல்லம் சேர்க்கலாம்.
எண்ணெய் மேலெழும்பி வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.சிறிது மூடி வைக்கவும்.
சுவையான மணத்தக்காளி குழம்பு ரெடி.இத்துடன்சுடு சாதம் பொரித்த அப்பளம்,கூட்டு என்று பரிமாறினால் சூப்பராக இருக்கும்.
தமிழ் நாட்டுக் கிராமங்களில் இந்த மணத்தக்காளியில் குழம்பு,கீரைக் கூட்டு, வற்றல் குழம்பு என்று பாரம்பரியமாக சமைப்பது வழக்கம். சத்து நிறைந்த இந்த மணத்தக்காளி வாய்ப்புண்,வயிற்றுப்புண்ணிற்கு ஒரு நல்ல மருந்து.பசியைத் தூண்டும்.நீங்களும் செய்து பாருங்க.
இக்குறிப்பை
TST - தமிழர் சமையல் செவ்வாய்க் கிழமை இவெண்ட்டிற்கு அனுப்புகிறேன்.
மற்றும் இக்குறிப்பை Gayathri's Walk Through Memory Lane @ Priya's Virunthu -விற்கும் அனுப்பி வைக்கிறேன்.
Show commentsOpen link
வாவ்...சூப்பர்...!
ReplyDeleteநன்றி...