My Blog List

Saturday, 22 June 2013

Biryani nattukkoli mode video - Nattu Kozhi Briyani - நாட்டுக்கோழி பிரியாணி செய்யும் முறை வீடியோ

Nattu Kozhi Briyani - நாட்டுக்கோழி பிரியாணி

தேவையான பொருட்கள்


  • பிரியாணி அரிசி - 3 கப்

  • நாட்டுக்கோழி சுத்தம் செய்தது - அரைக் கிலோ

  • பச்சைமிளகாய் - 6

  • மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப

  • கொத்தமல்லி தூள் - 1 1/2 தேக்கரண்டி

  • தக்காளி - 2

  • தயிர் - 2 தேக்கரண்டி

  • கொத்தமல்லி இழை, புதினா

  • சோம்பு - ஒரு தேக்கரண்டி

  • பிரிஞ்சி இலை எண்ணெய், உப்பு - தேவையான அளவு

  • பொடிக்க:

  • பட்டை - ஒரு துண்டு,

  • கிராம்பு - 5,

  • ஏலக்காய் - 5

  • அரைக்க:

  • சின்ன வெங்காயம் - 10 தட்டி கொள்ளவும்

  • இஞ்சி, பூண்டு - அரைத்து கொள்ளவும்


ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் தட்டியது சேர்க்கவும்









வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்









அதில் பொடித்த பொடி, சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து நன்கு வதக்கவும். பொடிக்கு பதிலாக இந்த கலவையை நன்கு மையாக கொத்தமல்லி புதினாவுடன் அரைத்தும் சேர்க்கலாம்.





அது நன்கு வதங்கியதும் தக்காளி, மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து வதக்க வேண்டும்






 அதில் கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கி தயிர் சேர்க்கவும்


பின்பு அதில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகள், சிக்கனுக்கு தேவையான உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்

 அதில் தேவையான நீர் (6 கப் தண்ணீர் 3 கப் அரிசிக்கு) சேர்த்து சிக்கன் நன்கு வேகும் வரை கொதிக்க விடவும். சிக்கன் நன்கு வெந்த பின்பு அரிசிக்கு தேவையான உப்பு மற்றும் களைந்து வைத்துள்ள அரிசியை போட வேண்டும்
 தண்ணீர் நன்கு வற்றி வரும் வரை அடிபிடிக்காமல் இருக்கும்படி கிளறி விடவேண்டும்
 பிறகு 10 நிமிடங்களுக்கு தம் போட வேண்டும்
 சூடான சுவையான நாட்டுக்கோழி பிரியாணி தயார்...



 

 ****************************

 இங்கு விறகு அடுப்பில் செய்துள்ளதால் கரி கொண்டு தம் போடப்பட்டு உள்ளது. அவரவர் தம் போடும் முறைப்படி செய்யலாம். குக்கரில் செய்தால் பத்து நிமிடம் மூடி சிம்மில் வைத்தால் போதுமானது. சிக்கன் நன்கு வெந்த பிறகே அரிசியை போடவேண்டும். தண்ணீர் பற்றவில்லை என்று தோன்றினால் தம் போடும் முன்னர் சிறிது சுடுநீர் சேர்க்கலாம். சிக்கன் வதக்கும் ஸ்டெப் வரை கலவையை குக்கரில் வைத்து சிக்கனை வேக வைக்கலாம். இதனால் கேஸ் மிச்சம் ஆகும். கடைசியில் சிறிது எலுமிச்சை சாறு, நெய் சேர்த்தால் சுவை கூடும்.




செய்யும் முறை வீடியோ

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts