இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள ஒரு சூப்பர் சட்னி.
கொஞ்சம் சிரமப்பட்டுதான் செய்யணும்.
ஆனால் சாப்பிட சுவையாக இருக்கும்.
செய்ய தேவையானவை :
- கத்திரிக்காய் (பெரியது) – 4 – காம்பை மட்டும் வெட்டவும்
- பச்சை மிளகாய் – 5 – நீளமாக நறுக்கவும்
- புளி விழுது - 1 தே. கரண்டி
- ந.எண்ணெய், உப்பு தேவைக்கு
தாளிக்க :
- கடுகு – 1/2 தே. கரண்டி
- உளுந்து - 1/2 தே. கரண்டி
- கருவேப்பிலை
செய்முறை :
- கத்திரிக்காயை காம்பு மட்டும் நறுக்கி, வாணலியில் எண்ணெய் சிறிது ஊற்றி நன்றாக வதக்கவும்.
- வாணலியில் இருந்து எடுத்து வைக்கவும். ஆறிய பின் அதன் மேலிருக்கும் தோலியை உரித்து எடுக்கவும்.
- கை வைத்தே மசித்து கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளதையும் பச்சை மிளகாயையும் போட்டு வதக்கவும்.
- புளி விழுது, உப்பு, சிறிது தண்ணீர், மசித்த காய் எல்லாம் போட்டு சற்று வத்தியவுடன் இறக்கவும்.
Tagged: இட்லி, கத்திரிக்காய் சட்னி, தோசை, Brinjal chutney, dosa
No comments:
Post a Comment